பாவங்கள் தீர சிவ வழிபாடு

sivan kolam
- Advertisement -

பாவமே செய்யாத மனிதன் என்று உலகில் யாருமே கிடையாது. இந்த பாவம் என்பது தெரிந்து செய்வது தெரியாமல் செய்வது என்பதில் தான் இதற்கான மன்னிப்பும், விமோசனமும் இருக்கிறது. ஒவ்வொரு மனிதரும் தான் வாழக் கூடிய வாழ்நாளில் தெரியாமல் எத்தனையோ விதமான பாவங்களை செய்து விடுவார்கள்.

இது ஒரு புறம் இருக்க, ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களுடைய கர்ம வினைகளின் தாக்கம் ஒரு புறம் பாடாயப்படுத்தும். கர்மா என்பது நாம் முற்பிறவியில் செய்த பாவம் புண்ணியத்தின் பலன் என்று சொல்லப்படுகிறது. இப்படி தெரியாமல் செய்த பாவங்கள் கர்மாக்கள் தொலைய செய்ய வேண்டிய எளிய பரிகார முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பாவங்கள் தீர சிவ ஆலயத்தில் செய்ய வேண்டியது
கடவுள்களில் அழிக்கும் கடவுளென விளங்குபவர் சிவபெருமான். அழிக்கும் கடவுள் என்றால் மனிதர்களை அழிக்கும் கடவுள் என்ற பொருள் அன்று. தீய சக்திகள், தீய வினைகள், கர்மாக்கள், பாவங்கள் போன்றவற்றை வேரோடு கலைய கூடிய சக்தி கொண்டவர்கள் இந்த சிவபெருமான்.

நம்முடைய பாவங்கள் கர்மாக்கள் தீர சிவபெருமானை நாம் வழிபட வேண்டும். அது எப்படி என்று பார்ப்போம். இதற்கு திங்கட்கிழமை வேளையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அப்பொழுது கொஞ்சம் பச்சரிசி மாவு, சிகப்பு நிறத்தில் இருக்கும் பூக்களை வாங்கிக் கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

சிவாலயத்தில் இந்த பச்சரிசி மாவினால் உங்கள் கைகளாலே கோலம் போட வேண்டும். கோலம் போடும் பொது சிவ சிவா என்று கூறிக்கொண்டே போடவேண்டும். சிவ என்றால் சிவன் என்றும் சிவா என்றால் பார்வதி என்றும் அர்த்தம். இப்படி சொல்வதன் மூலம் சிவ பார்வதியின் அருளை பரி பூரணமாக பெற முடியும். அதன் பிறகு இந்த சிகப்பு நிற பூக்களை சிவபெருமானுக்கு சாற்றி மனதார வழிபட்டு வர வேண்டும். இந்த வழிபாட்டை திங்கட்கிழமை வேளைகளில் தொடர்ந்து செய்து வர வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் பிரதோஷ நாளில் செய்யலாம் அல்லது திருவோண நட்சத்திரம் வரும் நாளில் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே:

- Advertisement -