உங்கள் பாவங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்க செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

lakshmi-cash
- Advertisement -

ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒரு விஷயத்தில் பாவச் செயல்களை நமக்கு தெரியாமலேயே செய்து விடுகிறோம். ஒரு சில விஷயங்கள் நமக்கு, நாம் செய்தது தவறு என்று தோன்றி விட்டால் அதற்குரிய பரிகாரத்தை உடனுக்குடன் செய்துவிட வேண்டும். இதனால் நாம் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள் குறையும். ஒருவரிடம் மன்னிப்பு கேட்க நாம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

sad-crying2

தவறு என்று தோன்றி விட்டால் உடனே அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டால் நம்முடைய பாரம் குறைந்து விடுகிறது. அதே போல தான் சில விஷயங்களில் நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் பாவங்களுக்கு உரிய பரிகாரங்களை அன்றாட வாழ்க்கையில் நாம் செய்து வந்தால் நம்மை அறியாமல் நம் பாரம் குறைந்து, நம் பாவங்கள் நீங்கி குடும்பத்தில் நிம்மதி பெருகும். அத்தகைய அற்புத 10 குறிப்புகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

குறிப்பு 1:
சாஸ்திர ரீதியாக ஒரு குடும்பத்தில் பெண் தான் மகாலட்சுமியாக பாவிக்கப்படுகிறாள். உங்கள் வீட்டின் மகாலட்சுமி எப்பொழுதும் கண்ணீருடன் இருந்து கொண்டிருந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் குறைந்து விடும். எனவே உங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்களை மதித்து, அவர்கள் மனதில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வது குடும்பத்தின் சுபிட்சம் காக்கும்.

kungumam

குறிப்பு 2:
நம் தமிழ் பாரம்பரிய பண்பாட்டின்படி வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகம் சுளிக்காமல் உபசரிக்க வேண்டும். சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். உடன் மஞ்சள் கிழங்கு கொடுத்து அனுப்ப வேண்டும்.

- Advertisement -

குறிப்பு 3:
வீட்டின் மகாலக்ஷ்மி சிரித்துக் கொண்டிருந்தால் அங்கு செல்வ மழை பொழியும் எனவே குடும்பத்தில் இருக்கும் பெண்களுடைய மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். குடும்பத்தில் பெண்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் மகாலட்சுமியும் மகிழ்ச்சியுடன் உள்ளே வருவாள்.

mahalakshmi

குறிப்பு 4:
உங்களால் முடிந்த பொழுதெல்லாம் ஏழை மாணவர்களுக்கு அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும். இங்கனம் உங்கள் பாவங்கள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -

குறிப்பு 5:
பித்ருக்களுக்கு திதி செய்ய மறக்கக் கூடாது. திதி கொடுக்க முடியாதவர்கள் பசு மாட்டிற்கு வாழைப்பழம், அரிசி, வெல்லம், தேங்காய், அகத்திக் கீரை போன்றவற்றை தானம் கொடுப்பது பாவங்களை நீக்கி புண்ணியத்தை பெருக செய்யும். உங்களால் முடிந்தால் கோவில்களுக்கு கோ தானம் செய்யலாம்.

temple

குறிப்பு 6:
அடிக்கடி கோவிலுக்கு செல்வதும் தெய்வ தரிசனம் செய்வதும் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும். தயிர், அருகம்புல், பசு முதலான பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மகா லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும்.

குறிப்பு 7:
வீட்டில் அமங்கல சொற்களையும், இல்லை என்கிற வார்த்தையையும், பிறர் மனதை புண்படுத்தக் கூடிய தீய கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் போன்றவர்களிடம் உங்களுடைய கோபத்தை எக்காரணம் கொண்டும் காண்பிக்கக் கூடாது.

scolding-mother

குறிப்பு 8:
இரவில் வீட்டை கூட்டுபவர்கள் அதன் குப்பையை கொண்டு போய் வெளியில் கொட்டக்கூடாது. வீட்டிற்குள் இருக்கும் குப்பை தொட்டியில் தான் போட வேண்டும்.

குறிப்பு 9:
வீட்டில் சுத்தமான ஆடைகள், சுத்தமில்லாத தண்ணீர், சங்கு, பசுஞ்சாணம், தாமரை பூக்கள், நெய், ஊறுகாய், அரிசி, கல் உப்பு ஆகிய பொருட்களை எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும்.

birds

குறிப்பு 10:
நீங்கள் உங்கள் வீட்டிற்கு வெளியில் அல்லது விசாலமான மாடி பகுதிகளில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதும், தானியங்களைத் தூவி அவற்றை உண்ண செய்வதும் கோடி புண்ணியத்தை சேர்க்கும்.

- Advertisement -