ஒருவர் பயன்படுத்திய எந்த பொருட்களையெல்லாம் இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது தெரியுமா? தரித்திரம் வராமல் இருக்க இதையும் செய்யலாமே!

soap-comb-lakshmi
- Advertisement -

எல்லாப் பொருட்களையும் ஒருவரிடமிருந்து இன்னொருவர் பெற்றுக் கொண்டு விட முடியாது! ஒரு சில பொருட்களை அவருக்கென பிரத்யேகமாக தனியாக வைத்துக் கொள்வது ஆரோக்கியம் காக்க உதவும். அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மிக ரீதியாகவும் இந்த சில பொருட்களை எல்லாம் தனித்தனியாக பயன்படுத்துவதால் நிறைய நன்மைகள் உண்டாகும். இல்லையேல் தரித்திரம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியான பொருட்கள் என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

soap-bar

முதலில் நாம் பயன்படுத்தக் கூடாத முக்கிய பொருள் குளிக்கும் உதவும் சோப்பு. அறிவியல் ரீதியாகவும் ஒருவர் பயன்படுத்திய சோப்பை இன்னொருவர் பயன்படுத்துவதால் அவர்களுக்கு இன்று இருக்கும் தொற்று கிருமிகள் இன்னொருவருக்கும் பரவும் என்பது தான் உண்மை. அதே போல ஆன்மீக ரீதியாகவும் ஒருவர் பயன்படுத்திய சோப்பை இன்னொருவர் பயன்படுத்தினால் அவர்களுடைய ஆரா சக்தியின் நெகட்டிவ் எனர்ஜி மற்றவர்களுக்கும் பரவும்.

- Advertisement -

எல்லோருக்குமே ஒரே விதமான எனர்ஜிகள் இருப்பதில்லை, அதாவது ஒருவரிடம் இருக்கும் நேர்மறை ஆற்றல் இன்னொருவரிடம் அதே அளவிற்கு இருப்பதில்லை. நேரத்திற்கு ஏற்ப அவை மாறும். அதே போல மனிதனுக்கு ஏற்பவும் அவை மாறுகின்றன. எனவே ஒருவரிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நம்மையும் தொற்றிக் கொள்ளும் என்பதால் இவற்றை தனித்தனியாக பயன்படுத்துவது நல்லது என்கிறது சாஸ்திரம்.

wet-cloth

அதே போல ஒருவர் துவட்டிய துண்டை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய துண்டை காய வைத்து மறுபடியும் பயன்படுத்துவதை தவிர்க்கவும் கூடுமானவரை அவற்றை துவைத்து காய வைத்து மீண்டும் பயன்படுத்துவது நல்லது. துண்டின் மூலமும் எனர்ஜிகள் பரவும். எனவே குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும், நான்கு துண்டாக பிரித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு முறை குளித்து விட்டு பயன்படுத்திய பின்பு மீண்டும் அதனை அப்படியே போட்டு வைக்காமல் துவைத்து விட்டு பயன்படுத்துவது நல்லது.

- Advertisement -

அதே போல தலைவாறும் சீப்பு கூட ஒருவரிடமிருந்து மற்றொருவர் வாங்கி பயன்படுத்தக் கூடாது. ஒரு வீட்டில் நாலைந்து சீப்புகள் வைத்து இருந்தாலும் எல்லாவற்றையும் எல்லோரும் பயன்படுத்துவார்கள். அப்படி செய்யக் கூடாது! அவர் அவர்களுக்கு என்று தனியாக ஒரு சீப்பை வைத்து கொள்ள வேண்டும். அதை மற்றவர்கள் எடுத்து பயன்படுத்த கூடாது. ஒருவர் தலையில் இருக்கும் பொடுகு போன்ற தொந்தரவுகள் இன்னொருவருக்கும் வருவதற்கு இதுவே காரணமாக இருக்கின்றது. அதே போல ஒருவர் பயன்படுத்திய சீப்பில் இருக்கும் முடியை இன்னொருவர் அவர்கள் கைகளால் எடுத்து வீசக் கூடாது. யாருடைய தலைமுடியோ அவர்கள் தான் அதனை எடுத்து போட வேண்டும். மகளின் தலைமுடியை அம்மா எடுத்துப் போடுவது கூட இந்த வகையில் தவறு என்கிறது சாஸ்திரம்.

hair-in-comb1

சோப்பு, சீப்பு மட்டுமல்லாமல் ஒருவர் உடுத்திய உடையை கூட இன்னொருவர் உடுத்துவது தரித்திரத்தை ஏற்படுத்துமாம். நீங்கள் உடுத்திய உடைகள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கும் முன்பு அதனை ஒரு முறை உப்பு தண்ணீரில் அலசி காய வைத்து பின்னர் கொடுக்கலாம். இதனால் உங்களுடைய பாவங்களின் பங்கு அவர்களுக்கு சேராமல் இருக்கும். நாள் முழுவதும் உடுத்தும் உடையில் நம் வியர்வைத் துளிகள் படுகின்றன. உடலிலிருந்து சுரக்கும் வியர்வை துளிகள் மூலம் பரவும் எதிர்மறை ஆற்றல் இன்னொருவருக்கும் உண்டாகக் கூடாது என்பதால் தான் இவ்வாறு அறிவுறுத்தப்படுகிறது. உடை மட்டுமல்ல அவர்கள் பயன்படுத்தும் நகைகள் கூட அப்படி தான். எந்த ஒரு பொருளையும் மற்றவர்கள் பயன்படுத்தியதை நாம் பயன்படுத்தும் முன்பு நன்கு கழுவி கல் உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் அலசிய பின்பு பயன்படுத்தலாம். இதை செய்வதற்கு அவர் அவருக்கென்று தனியாக பயன்படுத்தி விட்டு போய்விடலாம் என்று தோன்றிவிடும்.

- Advertisement -