இந்த எல்லா ஐடியாவும் நல்லா தான் இருக்கு. இதெல்லாம் தெரிந்தால் சமையலறையில் நிறைய வேலைகள் சுலபமாக முடிந்து விடுமே. கால் கடுக்க நின்று வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பயனுள்ள 10 குறிப்புகள்

kitchen
- Advertisement -

எப்போதுமே சமையலறையில் கால் கடுக்க நின்று வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பெண்களுக்கும் ஓய்வு தேவை. சமையலறையில் வேலையை சுலபமாக்கி தரக்கூடிய ஒரு சில குறிப்புகளைத்தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயமாக நேரம் மிச்சமாகும். இல்லத்தரசிகளுக்கு தேவையான 10 பயனுள்ள குறிப்புகள் இதோ.

Tip 1:
பெண்கள் சமையலறையில் கால் கடுக்க நிற்பார்கள். சில பேருக்கு நிறைய கால் வலி வரும். வெறும் தரையில் நிற்காமல் கொஞ்சம் மொத்தமான மேட் மேலையோ, அல்லது தரையில் போட்டிருக்கும் துணியை கொஞ்சம் மொத்தமாக மடித்து போட்டு அதன் மேலே நிற்கும் போது, காலுக்கு இதமாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

Tip 2:
வெல்லம், கருப்பட்டி, அச்சு வெல்லம், போன்ற இனிப்பு பொருட்களை சில வீடுகளில் தினமும் பயன்படுத்துவார்கள். டீ காபிக்கு கூட இப்படிப்பட்ட இனிப்பை தான் சேர்ப்பார்கள். உங்கள் வீட்டில் இருக்கும் வெல்லக்கட்டிகளை இடித்து உடைப்பது சிரமமாக இருக்கும். கேரட் பீட்ரூட் துருவலில், வெல்லத்தை துருவி விட்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து, ஸ்பூன் போட்டுக் கொண்டால் சர்க்கரை பயன்படுத்துவது போலவே இந்த கட்டி வெல்லத்தையும் சுலபமாக பயன்படுத்தலாம்.

Tip 3:
வெள்ளத்தை துருவுவதற்கு கூட நேரம் இல்லையா. சிறு சிறு துண்டுகளாக உடைத்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு பல்ஸ் மட்டும் ஓட விட வேண்டும். ஒரேயடியாக ஓட விட்டால், வெல்லம் உருகிவிடும். இரண்டு பல்ஸ் ஓட்டினால் துருவிய வெல்லம் போலவே துகள்கள் கிடைத்து விடும்.

- Advertisement -

Tip 4:
குக்கரில் கைப்பிடி ஸ்குரு அடிக்கடி லூஸ் ஆகுதா. அந்த ஸ்குருவை கழட்டி எடுத்து விடுங்கள். அதில் கொஞ்சம் தடிமனாக இருக்கும் நூலை தேவையான அளவு சுற்றிக் கொள்ளுங்கள். (பூ கட்டும் நூல், அல்லது துணி தைக்கும் நூலை கூட இரண்டு மூன்றாக மடித்து இந்த ஸ்குரூவில் சுற்றிக் கொள்ளலாம்) இப்போது நூல் சுற்றிய இந்த ஸ்க்ரூவை குக்கர் கைப்பிடியில் வைத்து டைப் செய்து வைத்தால் வருடக் கணக்கானாலும் இந்த ஸ்க்ரூ லூஸ் ஆகாது.

Tip 5:
சப்பாத்தி கட்டையில் சப்பாத்தி பூரி தேய்க்கும் போது அடிக்கடி ஒட்டிக்கொள்கிறதா? காய்ந்த சப்பாத்தி கட்டையையும், உருட்டும் கட்டையையும் ஃப்ரீசரில் 2 அல்லது 3 நிமிடம் வைத்து எடுத்தால், அதில் சப்பாத்தியை ஒட்டாமல் தேய்க்க முடியும்.

- Advertisement -

Tip 6:
முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், இவைகளை பொடியாக சாப் செய்ய உங்களுடைய வீட்டில் சாப்பர் இல்லையா. வழக்கம்போல காய்கறிகளை தோல் சீவி விட்டு, ஓரளவுக்கு பெரிய பெரிய பீசுகளாக வெட்டி, மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு முறை பல்ஸ் மோடில் ஓட விட்டால் சூப்பரான துருவிய காய்கறிகள் நமக்கு கிடைத்துவிடும். (கேரட் சாதம் செய்ய, பீட்ரூட் சாதம் செய்ய, முட்டைக்கோஸ் பொரியல் செய்ய எல்லாம் நிறைய நேரம் மிச்சமாகும். பொடியாகத் துருவிய காய்கறிகளும் நமக்கு கிடைக்கும்.)

Tip 7:
ஒரு தடிமனான காட்டன் துண்டை எடுத்து ஈரத் துணியை நனைத்து நன்றாக புரிந்து விடுங்கள். இதில் வாழைப்பழத்தை வைத்து சுருட்டி வைத்தால் வாழைப்பழம் நீண்ட நாட்களுக்கு கருத்துப் போகாமல் அழுகிப் போகாமல் இருக்கும். ஒரு வாரம் ஆனாலும் வாழைப்பழத்தை வைத்து சாப்பிடலாம். துண்டில் ஈரம் நிறைய இருக்கக்கூடாது. அதே சமயம் துண்டு காய்ந்து போயும் இருக்கக் கூடாது. அடிக்கடி அந்த துண்டை ஈரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

Tip 9:
தேவையான பூண்டுகளை ஒவ்வொரு பல்லாக உறித்து கொள்ளுங்கள். அதை டிரையான ஒரு கடாயில் போட்டு இரண்டு நிமிடம் சூடு செய்து கொள்ள வேண்டும். அந்தப் பூண்டு சூடு ஆறியதும் அதை அப்படியே ஒரு மெலிசான காட்டன் கைக்குட்டையில் கொட்டி, லேசாக முடிச்சு போல தயார் செய்து பிடித்துக் கொண்டு, அப்படியே கிரேட்டரில் தேய்த்து விட்டால் பூண்டின் தோல் இரண்டே நிமிடத்தில் பிரிந்து வந்து விடும். (நீங்கள் தயார் செய்யும் மூட்டை டைட்டாக இருக்கக் கூடாது. பூண்டு அந்த துணிக்கு உள்ளே லேசாக இருக்கும் படி மூட்டை தயார் செய்ய வேண்டும். சொறசொறப்பாக இருக்கும் தரையில் இந்த முடிச்சை அழுத்தம் கொடுத்து தேய்த்தால் கூட அல்லது அம்மி கல்லின் மேல் இந்த முடிச்சை அழுத்தம் கொடுத்து தேய்த்தால் கூட உள்ளே இருக்கும் பூண்டின் தோல் உரிந்து விடும்.)

Tip 10:
கடைகளில் பாக்கெட்டில் கிடைக்கும் நைசான மிளகுத்தூளை எவ்வளவுதான் சிரமப்பட்டாலும் நம் வீட்டில் அரைக்க முடியாது. மிளகை லேசாக கடாயில் போட்டு வறுத்துவிட்டு, ஆறவிட்டு அதன் பின்பு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பாருங்கள். நைசான மிளகுத்தூள் நம் வீட்டிலேயே கிடைக்கும்.

- Advertisement -