உங்க பாத்ரூம் டைல்ஸ், சிங்க், பைப் இதில் இருக்கும் உப்புக்கறை எல்லாம் கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன்னா உப்புக் கறை படிஞ்சா தானே தேய்க்கணும். இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க இனி உப்பு கறை படியவே படியாது.

cleaning tips
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் வேலைகளை மிகவும் சுலபமாக முடிக்க பல குறிப்புகள் உள்ளது. அந்த குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் போதும் நாள் கணக்கில் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருக்க வேண்டிய அவசியமே இருக்காது. அப்படியான பயனுள்ள சில குறிப்புகளை தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். முதலில் அனைவருக்கும் பெரிதாக தொல்லை தரக் கூடிய இந்த பாத்ரூம் சிங், டைல்ஸ் போன்றவற்றை சுத்தப்படுத்தும் வேலையை எப்படி சுலபமாக்குவது என்று தெரிந்து கொள்வோம்.

ஒரு காட்டன் துணியில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். துணியில் எண்ணெய் ஊறியவுடன் அந்த துணியை வைத்து உங்கள் பாத்ரூம் டைல்ஸ், பை, போன்ற தண்ணீர் படும் இடங்களில் இந்த துணி வைத்து துடைத்து விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் உப்பு தண்ணீரே அந்த இடத்தில் பட்டால் கூட எண்ணெய் இருக்கும் காரணத்தினால் தண்ணீர் நிற்காமல் வடிந்து விடும். இதனால் உப்புக் கறை படியாது. இதற்கு தேங்காய் எண்ணெய் தவிர மற்ற எண்ணெய்களை பயன்படுத்தினால் எண்ணெய் பிசப்பு கறை வந்து விடும்.

- Advertisement -

அடுத்து நாம் சமையலறை பூஜை அறை வேலைகளை செய்யும் போது தெரியாமல் தவறி எண்ணெய் கொட்டி விட்டால் அதை சுத்தம் செய்வதும் பெரிய வேலையாகி விடும். அந்த நேரத்தில் எண்ணெய் கொட்டிய இடத்தில் ஒரு பேப்பரை போட்டு விடுங்கள். அது எண்ணெய் அனைத்தையும் உறிஞ்சி விடும். அதன் பிறகு ஹேண்ட் வாஷ் அல்லது ஷாம்பூ இரண்டில் ஏதாவது ஒன்றை கொஞ்சமாக அந்த இடத்தில் போட்டு துணி வைத்து துடைத்து விட்டால் போதும். எண்ணெய் கறையே இருக்காது இது மற்ற இடங்களிலும் பரவாது.

அடுத்து நாம் எல்லோர் வீட்டிலும் என்ன தான் துணிகளை கடையில் கொடுத்து தைத்தாலும் லேசாக கிழிந்த துணிகள் அல்லது சட்டை பட்டனை தைக்க ஊசி நூல்களை பயன்படுத்துவோம். இந்த ஊசி மொக்கையாகி விட்டால் அதை தூக்கி தூரப் போடாமல் நாம் நகம் வெட்ட பயன்படுத்தும் நகவெட்டியில் நகத்தை ஷேப் செய்வதற்கு ஒரு பாகம் இருக்கும் அதில் இந்த ஊசியை படிய போட்டு தேய்த்து விட்டால் போதும் புதிதாக வாங்கிய ஊசி போல ஷார்ப்பாகி விடும்.

- Advertisement -

இதிலே இன்னொரு பெரிய பிரச்சனை இந்த நூல் கண்டு. இதில் நாம் தைத்து முடித்தவுடன் சுருட்டி வைத்தால் அதிலிருந்து நூல் எல்லாம் பிரிந்து வந்து வீணாகி விடும் இல்லை என்றால் நாம் மறுபடியும் தைக்கும் போது அந்த நூலில் முனையை தேட சிரமமாக இருக்கும். இதற்கு அந்த நூல் கண்டு மேலே இருக்கும் அட்டையில் இரண்டு புறமும் கத்தி வைத்து லேசாக கீறி விடுங்கள். அதன் பிறகு கடைசியாக உள்ள நூலை அந்த அட்டையில் சொருகி விட்டால் நூல் மேலும் பிரிந்து வராது மறுபடியும் பயன்படும் போது நேரத்தை வீணாக்க வேண்டாம்.

வீட்டில் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் என அனைத்தையுமே பயன்படுத்துவோம். அதன் வாய்ப்பகுதி சின்னதாக இருந்தால் அதை நம்மால் உள்ளே கை விட்டு தேய்க்க முடியாது. இதற்கு நாம் கட்டைப் பையில் இருக்கும் பைப் அல்லது ஏதாவது ஒரு குச்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் முனையில் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கிரப்பர், ஸ்டீல் நார் எதுவாக இருந்தாலும் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு அதை வைத்து சுத்தப்படுத்தி பாருங்கள் சுலபமாக சுத்தம் செய்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: புதுசா வாங்கின இரும்பு தோசை கல்லை ஒரே ஒரு பொருளை மட்டும் கொண்டு ரொம்பவே சுலபமா பழக்கி விடலாம் தெரியுமா? அட இந்த டிப்ஸ் இதுவரைக்கும் யாருமே சொல்லாதா இருக்கேன்னு நிச்சயம் யோசிப்பீங்க.

இந்தப் பதிவில் உள்ள சின்ன சின்ன குறிப்புகள் அனைத்துமே வீட்டில் பல நேரங்களில் நமக்கு பெரியதாக உதவும். இதை எல்லாம் தெரிந்து வைத்து க் கொண்டால் நாம் வேலையை சுலபமாக முடித்து விடலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -