ஒரு கிலோ எலுமிச்சை பழத்தை கூட ஈஸியா சாறு எடுக்க சூப்பர் டிரிக்ஸ் இருக்கு. இந்த பொருளை இதுக்கெல்லாம் கூட யூஸ் பண்ணலாமா ? இப்படி யோசிக்கிற அளவுக்கு செம ஐடியாஸ் இருக்கு வாங்க தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

இந்த குறிப்பில் இருக்கும் அனைத்துமே சின்ன சின்ன விஷயங்கள் தான். ஆனால் இது தெரியாமல் தான் இத்தனை காலம் இவ்வளவு வேலை செய்து கொண்டு இருந்தோமா என்று யோசிக்கும் அளவிற்கு ஒவ்வொரு குறிப்பு இருக்கும். சமையல் வேலையை பொருத்தவரையில் எவ்வளவு செய்து கொண்டு இருந்தாலும் வேலை நீண்டு கொண்டே இருக்கும். இந்த குறிப்புகள் உங்களுக்குத் தெரிந்த பிறகு நிச்சயமாக உங்கள் வேலை பாதியாக குறைந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை. வாங்க இப்போ இந்த சின்ன சின்ன வீட்டுக்குறிப்புகளை தெரிஞ்சுக்கிட்டு வேலையை எப்படி சுலபமாகிறது என்று பார்க்கலாம்.

இந்த மழை பனி காலங்களில் குழந்தைகளின் ஷூ வை நீங்கள் எப்படி சுத்தம் செய்தாலும் ஒரு வித வாடை வரும். அது வராமல் தடுக்க ஷூவை கழட்டிய பிறகு அதில் ஒரு கிராம்பு போட்டு வைத்திடுங்கள். இத்துடன் ஒரு பூண்டையும் தட்டி போட்டால், பூண்டு வாடைக்கு பூச்சிகள் எதுவும் அண்டாமல் இருக்கும் இந்த கிராம்பு ஈர வாடை வராமல் வைத்திருக்கும்.

- Advertisement -

எலுமிச்சை பழம் பிழிந்து சாறு எடுக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதிலும் கொஞ்சம் காயாக சின்ன சின்ன எலுமிச்சையாக இருந்தால் அதிலிருந்து சாறு எடுப்பது மிகவும் கடினம். அதுக்கு சுலபமா செய்ய எலுமிச்சை பழங்களில் ஒரு கிண்ணத்தில் போட்டு விடுங்கள், பழம் மூழ்கும் அளவிற்கு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு எடுத்து அறிந்து சாறு பிழிந்து பாருங்கள் தோலில் ஒரு சொட்டு சாறு கூட ஒட்டி இருக்காமல் மொத்தமும் வந்து விடும் ட்ரை பண்ணி பாருங்க.

பிரியாணி போன்றவற்றுக்கு வெங்காயம் அதிகமாக நறுக்க வேண்டியது இருக்கும். இனி அதையும் நிமிடத்தில் செய்து விடலாம் வீட்டில் காய் சீவும் சீவல் இருக்கும் அல்லவா, அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வாழைக்காய் சீவும் அந்த பெரிய பகுதியில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் வைத்து தேய்த்துப் பாருங்கள் நல்ல மெல்லிசாக வெங்காயம் வந்து விடும். எத்தனை கிலோ வெங்காயம் இருந்தாலும் இந்த முறையில் நிமிடத்தில் செய்து விடலாம். நூடுல்ஸ் நறுக்கும் காய்களை கூட இதே போல் நறுக்கி விடலாம் குறிப்பாக முட்டை கோஸை இந்த முறையில் சுலபமாக நறுக்கி எடுத்து விடலாம்.

- Advertisement -

வீட்டில் சின்ன சின்ன பூச்சி கொசு தொல்லைகள் அதுவும் இந்த பழ ஈக்கள் என்ன செய்தாலும் போகாது இவற்றை விரட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொஞ்சம் தண்ணி ஊத்தி கொதிக்க விடுங்கள். அதில் கொஞ்சம் டெட்டால் ஊற்றிய பிறகு வெங்காய தோலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் முகத்திற்கு பூசம் பவுடரையும்  சேர்த்து நன்றாக கலந்த பிறகு வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டில் அதிக பூச்சிகள் இருக்கும் இடங்களான, டேபிள், ஜன்னல் திரைச்சீலை, சமையலறையில் இருக்கும் செல்ஃப் போன்றவற்றில் எல்லாம் ஸ்பிரே செய்து விட்டால் இந்த பூச்சி தொல்லை இருக்காது.

சிலருக்கு வடை எப்படி செய்தாலும் ரவுண்டாக நடுவில் ஓட்டை போட்டு சுட வராது அதற்கு இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க. வடைக்கு எப்போதும் போல மாவு அரைச்சு வச்சுட்டு ரெடி பண்ணி எடுத்துங்கோங்க, ஒரு டிபன் பாக்ஸ் கவுத்து வச்சு அதுல லேசா எண்ணெய் தடவி விட்டு அதில் வடை மாவை வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை போட்ட பிறகு, காய்ந்து கொண்டு இருக்கும் எண்ணெய் சட்டியில் இந்த டிபன் பாக்ஸ்சை அப்படியே கவுத்து வைத்தால், கொஞ்ச நேரத்தில் வடை மாவு தனியா எண்ணெயிலே இறங்கிடும் கிண்ணம் தனியா வந்துரும். வடை நல்லா வட்டமா அழகா நடுவில் ஓட்டையுடன் சூப்பரா இருக்கும். கொஞ்சம் கவனமா செய்யுங்க.

- Advertisement -

அதே போல சப்பாத்தி செய்யும் போது அதிகமா செய்ய வேண்டிய நேரத்துல இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க எவ்வளவு சப்பாத்தி நாளும் நிமிஷத்துல போட்டு எடுத்துடலாம். அதாவது சப்பாத்தி மாவு பிசைஞ்சு உருண்டை பிடிச்சி வச்ச பிறகு இரண்டு உருண்டையை எடுத்துக்கோங்க, ஒரு உருண்டையில நல்ல எண்ணெய் தடவி வச்சுக்கோங்க ஒரு உருண்டைல மாவு தடவி வச்சி, எண்ணெய் தடவின உருண்டை மேல மாவு தடவ உருண்டையை வைத்து இரண்டையும் ஒண்ணாவே தேய்ச்சு, தோசை கல்லில் போட்டு ரெண்டு பக்கமும் திருப்பி எடுத்து பிறகு, பாருங்க அதுல ரெண்டு லேயர் தெரியும் பிரிச்சி இரண்டும் தனியா வரும். ஒரே நேரத்தில் இரண்டு சப்பாத்தி ரெடி ஆகிடும்.

இதையும் படிக்கலாமே: இனி தேங்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள், ஒரு துண்டு தேங்காய் கூட அழுகி வீணாகாது. ஒரு வருடமே ஆனால் கூட தேங்காய் கெட்டுப் போகாமல் பத்திரப்படுத்த சூப்பர் ஐடியா.

இந்த குறிப்புகள் எல்லாமே உங்களுக்கு பிடிச்சி இருந்த நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, நிச்சயமா உங்க வேலை இனி பாதியா குறைஞ்சிடும்.

- Advertisement -