செலவே இல்லாம உங்க வீட்டில் படிந்திருக்கும் விடாப் பிடியான கறைகளை நொடியில் மறைய வைக்க வேண்டுமா? இதோ அதுக்கான சூப்பர் டிப்ஸ்.

- Advertisement -

வீட்டின் ஒவ்வொரு அறையும் சுத்தமாக வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் இந்த பாத்ரூமை சுத்தமாக வைத்திருப்பது. அதிக அளவில் நோய்களை உருவாக்கக்கூடிய இடமே நம் வீட்டு பாத்ரூம் தான். இந்த இடத்தை அழுக்கில்லாமல் சுத்தமாக பராமரிப்பது மிகவும் முக்கியம். அதே நேரத்தில் அது சுலபமான காரியமும் அல்ல, இனி அதையும் அதிக சிரமம் இல்லாமல் சுத்தம் செய்ய இந்த சின்ன, சின்ன குறிப்புகள் தெரிந்து கொண்டால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பாத்ரூம், கிச்சன், சிங்க் போன்றவைகளை எல்லாம் சுத்தமாக வைத்திருக்க எலுமிச்சை பழம் இருந்தால் போதும். உங்கள் வீட்டில் உள்ள கறைகளை பொறுத்து எலுமிச்சை பழத்தை எடுத்து கொள்ளுங்கள். எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து  கொட்டைகளை நீக்கி சாறு பிழிந்து எடுத்து கொண்டு, உங்கள் பாத்ரூமில் உப்பு கறை படிந்த இடங்களில் கொஞ்சம் தெளித்து பத்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அதன் பிறகு பாத்ரூம் தேய்க்கும் பிரஸ் கொண்டு தேய்த்தால் அழுக்கு கறைகள் போவதுடன் எலுமிச்சை பழத்தின் வாடைக்கு கிருமிகளும் வராது நல்ல மணமாகவும் இருக்கும். இதே முறையில் உங்க வீட்டின் கிச்சன் சிங்க், வாஷ் பேஷன், போன்றவற்றில் படிந்த உப்பு கறையை கூட சுத்தம் செய்யலாம்.

- Advertisement -

பாத்ரூம் சுத்தப்படுத்துவது எனும் போது அதன் தரையை மட்டும் சுத்தம் செய்தால் போதும் என்று நினைக்கிறோம். பாத்ரூமில் இருக்கும் டாய்லெட்டை சுத்தம் செய்வதும் மிக மிக முக்கியம். இதை சுத்த படுத்த ரசாயனம் கலந்த ஏதாவது ஒரு லிக்விட் பயன்படுத்துவோம். இதனால் டாய்லெட் உள்ளே இருக்கும் கிருமிகள் முற்றிலுமாக போவது கிடையாது. அதற்கும் எளிய வழிமுறை உள்ளது இரவில் நீங்கள் தூங்க செல்லும் முன் நான்கு பல் பூண்டை தோலுடன் நன்றாக நசுக்கி உங்கள் டாய்லெட்டில் போட்டு விடுங்கள். அப்படி போட்டு விட்டு அடுத்த நாள் காலையில் லேசாக தண்ணீர் ஊற்றி தேய்த்து விடுங்கள். இந்த பூண்டின் வாசத்திற்கு கிருமிகள் அழிவதுடன் டாய்லெட்டில் கெட்ட வாடையும் வராது. இந்த பூண்டு போட்ட பிறகு ஐந்து மணி நேரம் வரை டாய்லெடை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

அடுத்து கால் மிதியடிகளை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று பார்ப்போம். அதற்கு நீங்கள் ஏதாவது ஒரு வாஷிங் லிக்விட் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் ரின் ஆலா கலந்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் மிதியடிகளை பத்து நிமிடம் ஊற வைத்து லேசாக தேய்த்தால் போதும் அழுக்கு சுத்தமாக நீங்கி விடும்.

- Advertisement -

இதே போல் உங்கள் வீட்டின் கிச்சன் மேடையையும், கேஸ் ஸ்டவ்வையும் சுத்தம் செய்ய நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூவை வைத்து சுத்தம் செய்து பாருங்கள், நல்ல மணமாகவும் இருக்கும் அதே நேரத்தில் அழுக்கும் சீக்கிரம் நீங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: பூஜை அறை முதல் பூஜை பொருட்கள் வரை பளிச்சென்று மாற்றி, நல்ல தெய்வீக மணதுடன் இருக்க இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். இனி உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் எப்படி உங்கள் வீட்டை பராமரிக்கிறீங்க என்று ஆச்சரியமாக கேட்பார்கள்.

இந்தக் குறிப்பில் சுத்தம் செய்ய பயன்படுத்திய பொருட்கள் எல்லாமே நாம் தினமும் நம் வீட்டில் பயன்படுத்துவது தான். அதை நாம் பயன்படுத்தும் விஷயங்களைத் தவிர மற்ற எந்தெந்த இடத்தில் இதை பயன்படுத்தினால் அதற்கான பலன் இரட்டிப்பாகும். இந்த பதிவில் இருக்கும் அனைத்து தகவல்களும் உங்களின் அன்றாட வீட்டு வேலைகளை சுலபமாக உதவும். நீங்கள் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -