அரைக்கப் வேர்க்கடலை இருந்தா நல்லா மொறு மொறுன்னு டேஸ்ட்டான இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு கொடுங்க. குழந்தையிலிருந்து பெரியவங்க வரை எல்லாரும் எனக்கு உனக்குன்னு போட்டி போட்டு சாப்பிடுவாங்க.

bonda recipe
- Advertisement -

பெரும்பாலும் இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது ஈவினிங் ஸ்நாக்ஸ் செய்வது தான். ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் என்றால் கடையில் கூட வாங்கி கொடுத்து விடலாம். ஆனால் நாம் கொடுக்கும் அந்த உணவு குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாகவும் அதே நேரத்தில் சுவையானதாகவும் நமக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்வதாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு அருமையான ஸ்னாக்ஸ் ரெசிபியை பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கடலை – 1/2 கப், பச்சரிசி மாவு -1 கப், கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 4 பல், இஞ்சி – 1 துண்டு, பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், சீரகம் -1 டீஸ்பூன், சமையல் சோடா -1 சிட்டிகை, கருவேப்பிலை, கொத்தமல்லி – 1 கைப்பிடி.

- Advertisement -

செய்முறை

இந்த போண்டா செய்வதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பு, சீரகம் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வேர்க்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இப்போதும் இது கொரகொரப்பாக தான் அரைக்க வேண்டும். நைசாக அரைத்து விடக் கூடாது.

அடுத்து அரைத்த இந்த விழுதை ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள். அதில் அரிசி மாவு, கோதுமை மாவு, அரிந்து வைத்த வெங்காயம், தயிர், உப்பு , சோடா மாவு என அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இதற்கு தயிரும் வெங்காயத்தில் இருக்கும் தண்ணீருமே போதும். எந்த காரணத்தை கொண்டும் இதில் தண்ணீர் சேர்க்கக் கூடாது.

- Advertisement -

மாவை நன்றாக கலந்த பிறகு கடைசியாக கருவேப்பிலை கொத்துமல்லியை பொடியாக அரிந்து அதையும் சேர்த்த பிறகு நன்றாக பிசைந்து வைத்து விடுங்கள். அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு கலந்து வைத்த மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக பிரித்து போட்டு போண்டா சுட்டு எடுத்து விடுங்கள். நல்ல சுவையான ஆரோக்கியமான வேர்க்கடலை போண்டா தயார்.

இதையும் படிக்கலாமே: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு போண்டா செய்யப் போறீங்களா? அப்போ ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க. நீங்க சுட்டு முடிகிறதுக்குள்ள எல்லாமே காலி ஆயிடும்.

இந்த வித்தியாசமான போண்டா ரெசிபி சாப்பிட நன்றாக இருப்பதுடன், இதில் வேர்க்கடலை எல்லாம் சேர்த்து இருப்பதால் குழந்தைகளுக்கும் ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் கொடுத்தது போல இருக்கும். இதை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் கூட சாப்பிடலாம். நீங்களும் ஒரு முறை இது போல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -