ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு போண்டா செய்யப் போறீங்களா? அப்போ ஒரு தடவை இப்படி செஞ்சு பாருங்க. நீங்க சுட்டு முடிகிறதுக்குள்ள எல்லாமே காலி ஆயிடும்.

tea time snacks
- Advertisement -

மாலை நேரத்தில் டீயுடன் சுட சுட போண்டா செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். இதற்காக நாம் போண்டா மிக்சர் பவுடரை வாங்கி வந்து கலந்து மிகவும் எளிமையாக போண்டாவை சுட்டு விடுவோம். அதில் இருக்கும் சுவையை விட பல மடங்கு அதிக சுவையுடன் இருப்பதற்கு எப்படி போண்டா செய்ய வேண்டும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

இப்பொழுது கடைகளில் அனைத்து மாவுகளுமே ரெடிமேடாக கிடைக்கிறது. அந்த மாவு கெட்டுப் போகாமல் இருப்பதற்கு அதில் ஏதாவது ஒரு ரசாயன பொருளை கலக்கத்தான் செய்வார்கள். அவ்வாறு எந்தவித இரசாயன பொருட்களையும் கலக்காமல் நாமே நம் வீட்டில் மாவு தயாரித்து செய்யும் பொருட்கள் அனைத்துமே ஆரோக்கியமான பொருட்களாக தான் இருக்கும்.

- Advertisement -

இந்தப் பதிவில் நாம் சொல்லப்போகும் போண்டாவை தயார் செய்வதற்கு நமக்கு ஒரு கப் அளவு புழுங்கல் அரிசி அதாவது சாப்பாட்டு அரிசி தேவைப்படும். பிறகு அதனுடன் அரை கப் அளவு கடலைப்பருப்பும், அரை கப் அளவு துவரம் பருப்பு தேவைப்படும். பிறகு அரை ஸ்பூன் உளுந்தம் பருப்பையும் இதனுடன் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கழுவி சுத்தம் செய்து நல்ல தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். இதில் இரண்டு வர மிளகாய் சேர்த்து நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அரிசியும், பருப்பும் நன்றாக ஊறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஊறிய வர மிளகாயையும் அரை இஞ்சு இஞ்சியையும் நறுக்கிப்போட்டு பருப்பு வடைக்கு அரைப்பது போல் நெரு நெருவென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அழைத்துக் கொள்ளுங்கள். அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டாம்.

- Advertisement -

இப்பொழுது இந்த மாவுடன் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் கால் மூடி துருவிய தேங்காய் கடைசியாக பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாயை அந்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் நன்றாக காய்ந்ததும் அதில் போண்டா பொறிப்பதற்குரிய எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறு சிறு போண்டாவாக இந்த மாவை போட வேண்டும். நன்றாக வெந்து சிவந்த பிறகு அதை எண்ணெயிலிருந்து எடுத்து வடிகட்டி சாப்பிட கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: 2 நிமிஷத்துக்குள்ள நல்லா சுள்ளுன்னு சூப்பரான காரச் சட்னி ரெடி பண்ணிடலாம் தெரியுமா? சுட சுட இட்லியோட இந்த சட்னியை கொடுத்து பாருங்க இன்னைக்கெல்லாம் நீங்க இட்லி சுட்டாலும் பத்தாது.

வித்தியாசமான இந்த போண்டாவை வீட்டில் இருக்கும் குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் நமக்கு மீதம் இருக்குமா என்பதே கேள்விக்குறியாக மாறிவிடும்.

- Advertisement -