1/2 கப் வேர்க்கடலை இருந்தா ரொம்பவே சுவையான இந்த பணியாரத்தை செஞ்சு பாருங்க. உங்க பேமிலிக்கு இதை விட சத்துமிக்க ஒரு ஆரோக்கியமான உணவை உங்களால தரவே முடியாது.

- Advertisement -

வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்து தான். முன்பெல்லாம் இந்த வேர்க்கடலையை வேக வைத்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அதை எல்லாம் செய்ய யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இந்த வேர்க்கடலையை பயன்படுத்தி இது போல ரெசிபிகளாக நாம் செய்து கொடுத்தால் வளரும். குழந்தைகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவை நாம் கொடுத்தது போல இருக்கும். வாங்க அந்த வேர்க்கடலை வைத்து செய்யப்படும் பணியாரத்தை பற்றி இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த பணியாரம் செய்வதற்கு ஒரு கப் பச்சரிசி உடன் அரைக் கப் வேர்க்கடலை சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு பச்சை வேர்கடலை தான் பயன்படுத்த வேண்டும். இது இரண்டையும் ஒரு பவுலில் சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்றாக அலசி எடுத்த பிறகு மூன்றாவது முறை நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த மாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து லேசான கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ளுங்கள். அதே போல் இந்த மாவை அரைக்க அதிக அளவில் தண்ணீரும் சேர்க்கக் கூடாது. நாம் அரிசி ஊற வைத்த தண்ணீரே கொஞ்சமாக சேர்த்து அரைத்து எடுத்து இதை ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதே போல் மிக்ஸி ஜாரிலும் இதே தண்ணீரை கொஞ்சமாக ஊற்றி கழுவி இந்த பௌலில் ஊற்றி விடுங்கள்.

அடுத்து இந்த மாவில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து அடித்து வைத்து விடுங்கள். இதற்குள்ளாக ஒரு மீடியம் சைஸ் வெங்காயம், ஒரு கேரட், ஒரு பச்சை மிளகாய், கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு துண்டு இஞ்சி என இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி அதையும் இந்த மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

உங்களிடம் பேபி கார்ன் இருந்தால் அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை ரொம்பவே நன்றாக இருக்கும். இதை தவிர்த்து உங்களிடம் வேறு காய்கள் இருந்தால் அதையும் கூட சேர்த்துக் கொள்ளலாம். இதன் சுவை நன்றாக இருப்பதோடு, அனைத்து காய்கறிகளும் வேர்க்கடலை என மொத்த சத்தையும் சேர்த்து ஒரே ரெசிபியில் நாம் கொடுத்தது போலவும் இருக்கும்.

இப்போது அடுப்பில் பணியார சட்டி வைத்து சூடானவுடன் நாம் இவையெல்லாம் சேர்த்து கலந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து பணியார குழியில் முக்கால் பாகம் வரை ஊற்றிய பிறகு நெய் அல்லது எண்ணெய் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்த பிறகு 5 நிமிடம் மூடி போட்டு வேக விடுங்கள். அதன் பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சிவந்தவுடன் எடுத்து சாப்பிட கொடுங்கள்.

இதையும் படிக்காலமே: இட்லி மீந்து போனால் வேஸ்ட் பண்ணாம இட்லி உப்புமா அல்ல இட்லி மஞ்சூரியன் டேஸ்ட்டியாக சுட சுட இப்படி கூட செய்யலாமே!

இந்த ஆரோக்கியமான சத்து மிகுந்த ரெசிபிக்கு நீங்கள் சைடிஷ் ஆக எதையும் செய்ய வேண்டியதே கிடையாது. இதை அப்படியே கொடுத்தாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இரவு டின்னருக்கும் கொடுக்கலாம். காலை நேரத்தில் செய்வதாக இருந்தால் மாவை மட்டும் முன்னமே அறைத்து விடுங்கள். என்ன இருந்தாலும் உடனே அரைத்து செய்யும் போது சுவை இன்னும் நன்றாக இருக்கும் இந்த ரெசிபியை நீங்களும் ஒரு முறை நிச்சயமா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -