நோய் கிருமிகளையும், தோல் நோய்களை குணப்படுத்தும் ‘பீர்க்கங்காயை’ 5 நிமிடத்தில் இப்படி சமைத்து பாருங்கள்! அட்டகாசமாக இருக்கும்.

peerkangai1

பொதுவாகவே பச்சை காய்கறிகள் நமக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கும். அதிலும் பீர்க்கங்காய் எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? சில காய்கறி வகைகளை நம் அன்றாட உணவில் பெரிதாக பங்கெடுப்பது இல்லை. அந்த வகையில் ஒன்றான பீர்க்கங்காய் நமக்கு நிறைய நன்மைகளை தரும். இதில் இருக்கும் கசப்புத்தன்மை காரணமாக தோல் நோய்களை குணப்படுத்த வல்லது. தோல் சம்பந்தப்பட்ட எந்த நோயாக இருந்தாலும் அடிக்கடி பீர்க்கங்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதை எப்படி சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

peerkangai

பீர்க்கங்காயில் இயற்கை சத்துக்களாக நார்சத்து, வைட்டமின் சி, துத்தநாக சத்து, இரும்பு சத்து, ரைபோபிளேவின் மற்றும் மெக்னீசியம் இருக்கிறது. அதனால் நம் உடலில் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும். சிறுநீரகத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும். சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதிலிருக்கும் நீர்சத்து உடலில் உள்ள உஷ்ண தன்மையை குறைத்து குளிர்ச்சி அடைய செய்து ஆரோக்கியத்தை நமக்கு கொடையாக அள்ளிக் கொடுக்கிறது.

இதை பொறியல் செய்து அல்லது சாம்பார் வைத்தும் சாப்பிடலாம். பீர்க்கங்காய் தோல் கூட அதிக அளவு நமக்கு நன்மைகளை அளிக்கும். அதை தூக்கி எரிந்து விடாதீர்கள். பீர்க்கங்காய் தோலை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை பிரச்சனைகள் நீங்கும். பீர்க்கங்காய் பொரியல் மற்றும் பீர்க்கங்காய் தோல் துவையல் எப்படி செய்வது என்பதை இனி பார்ப்போம்.

peerkangai-poriyal1

பீர்க்கங்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 2, சின்ன வெங்காயம் – 1/2 கப், சீரகம் – 1/4 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், கடுகு – 1/4 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4, தேங்காய் துருவல்- 1/2 கப், கருவேப்பிலை, மல்லி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

பீர்க்கங்காய் பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் பீர்க்கங்காய்களை தோல் மற்றும் விதைகளை நீக்கி ஓரளவு சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளுங்கள். வதக்க வதக்க சுருங்கும் தன்மை கொண்டுள்ளதால் மிகவும் பொடியாக நறுக்கி விடாதீர்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்தம் செய்து, உளுந்து மற்றும் கடலைப்பருப்பை லேசாக வறுக்கவும். பின்னர் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்கவும். சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் கூட சேர்த்துக் கொள்ளலாம். பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

peerkangai-poriyal

வெங்காயம் பாதியளவு வதங்கியதும் பீர்க்கங்காயை சேர்த்து விடலாம். பீர்க்கங்காயில் நீர்ச்சத்து இருப்பதால் தனியே நீர் சேர்க்க தேவையில்லை. ஒரு நிமிடம் வதக்கி விட்டு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மூடி வைத்து விடலாம். நீர் வற்றி பீர்க்கங்காய் வெந்து வந்துவிடும். அந்த சமயத்தில் சிறிதளவு சீரகம் சேர்த்து, தேங்காய்த் துருவலையும் சேர்க்க வேண்டும். இந்த பொரியலுக்கு தேங்காய்த் துருவல் சற்று அதிகமாக இருப்பது நன்றாக இருக்கும். ஒரு பிரட்டு பிரட்டி மல்லிதழை தூவி இறக்கி விடலாம். அவ்வளவு தான் மிகவும் ஆரோக்கியமான, சுவையான பீர்க்கங்காய் பொரியல் இப்போது தயார் ஆகிவிட்டது.

peerkangai-thuvaiyal

பீர்க்கங்காய் தோல் துவையல் செய்யும் முறை:
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பீர்க்கங்காய் தோலை நன்கு வதக்கி எடுக்க வேண்டும். பின்னர் தொடர்ந்து வரமிளகாய், பூண்டு வெங்காயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மல்லி விதை, சீரகம் இவற்றை தனித்தனியே வறுத்து எடுத்து தேங்காய் சேர்த்து கரகரவென துவையல் அரைத்து சாப்பிட்டால் அத்தனை சுவையாக இருக்கும். உடலில் இருக்கும் நோய் கிருமிகள் அனைத்தையும் நீக்க வல்லது இந்தத் துவையல். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் உஷ்ணத்தை குறைக்கவும், கண் பார்வை தெளிவு பெறவும் பெருமளவு துணை புரியும். நீங்களும் செய்து சாப்பிட்டு பலன் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல கோதுமை மாவு இருக்குதா? சூப்பரான அல்வா! பத்து நிமிஷத்துல சட்டுனு செஞ்சிடலாம்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.