தலைமுறை தலைமுறையாய் தொடரும் பெண் சாபத்திலிருந்து தப்பித்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றி மகிழ்ச்சியாய் வாழ இதை மட்டும் தவறாமல் செய்தாலே போதும்.

- Advertisement -

முன்னோர்கள் சொல்லி வைத்த ஒவ்வொரு வாக்கும் தெய்வ வாக்கு தான். பெண் சாபம் பொல்லாதது என்ற வார்த்தையை அவர்கள் அடிக்கடி உரைத்து இருப்பார்கள். இந்த சாபங்கள் ஒரு குடும்பத்தை தொடர்ந்தால் அங்கு எப்போதும் நிம்மதி இல்லாமல், தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு வறுமை தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த வீட்டில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது, குழந்தை பே றும் இல்லாமல், ஏதாவது ஒரு உடல் சுகவீனத்துடனும் இருப்பார்கள்.

இப்படியான நிலை தொடர்ந்தால் அந்த குடும்பத்திற்கு பெண் சாபம் தொடர்கிறது என்று அர்த்தம். ஒரு வேலை அப்படியான பெண் சாபங்கள் இல்லாமல் இது போன்ற பிரச்சனைகள் உங்கள் குடும்பத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த நான்கு விஷயங்களை தொடர்ந்து செய்யும் பொழுது அதிலிருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது. என்பதை இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பெண் சாபம் நீங்க செய்ய வேண்டியவை:
எந்த சாபத்தில் விமோசனம் கிடைக்க வேண்டும் என்றாலும் நாம் முதலில் கடவுளை தான் சரணடைய வேண்டும். அதற்கு நீங்கள் கடவுளை வணங்கும் போதெல்லாம் இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்ல வேண்டும். அதாவது ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி ஓம் என்ற இந்த மந்திரத்தை நீங்கள் வீட்டில் விளக்கேற்றி சுவாமி கும்பிடும் போதெல்லாம் சொல்ல வேண்டும். ஏனென்றால் தரித்திரம் நீங்கி செல்வ வளம் பெருக மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் தேவை. எனவே இந்த மந்திரத்தை நீங்கள் கடவுளை வணங்கும் போதெல்லாம் உங்களால் முடிந்த அளவுக்கு சொல்லலாம்.

அடுத்தது பௌர்ணமி நாளில் அன்ன தானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பௌர்ணமி நாளும் குறைந்தது ஏழு பேருக்கு சாப்பிட உணவு வாங்கிக் கொடுக்க வேண்டும். இதற்கு வேறு எந்த ஒரு தானத்தையும் செய்யக் கூடாது. அதிலும் வயதானவர்களுக்கு இந்த நாளில் அன்னதானம் வழங்கினால் மிகவும் புண்ணியம் சேரும். நம்முடைய தீய கர்மா நீங்கி நல்ல கர்மாவை குடும்பத்திற்கு சேர்க்க இந்த அன்னதானம் ஒரு சிறந்த பரிகாரம் என்றே சொல்லலாம்.

- Advertisement -

மூன்றாவதாக வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும் என்றால் சுவாமி படத்திற்கு முன் ஏற்படும் விளக்கு அல்ல. நம் வீட்டில் இறந்த முன்னோர்களின் படங்களை வைத்து தினமும் தீபம் ஏற்ற வேண்டும். என்றோ ஒரு நாள் எடுத்து வைத்து வணங்குவது போன்றவை செய்யாமல், தினமும் இவர்களுக்கு தீபம் ஏற்றி வணங்க வேண்டும். இவர்களை இப்படி வணங்காத போனால் அதுவே நம் குடும்பத்திற்கு மேலும் சாபத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

இவை அனைத்திலும் விட முக்கியமான நான்காவது பரிகாரம். குடும்பத்தில் இருக்கும் பெண்களை மரியாதை உடன் நடத்த வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பெண்ணானவள் எத்தனை மகிழ்ச்சியுடன் இருக்கிறாளோ அந்த அளவிற்கு அந்த குடும்பமும் செல்வ செழிப்புடன் நன்றாக இருக்கும். அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் நிம்மதி இல்லாமல் தினம் தினம் கண்ணீர் சிந்தி கொண்டு இருந்தால், பெண் சாபத்துடன் சேர்ந்து இந்த ஒரு கர்மாவும் சேர்ந்து குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போய் விடும். பெண் தோஷம் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட சாபம் நீங்கவும் பெண்களை மிகவும் மரியாதையுடன் நடத்துவது முக்கியம்.

இதையும் படிக்கலாமே: வாழ்வில் ஒரே ஒரு முறை இதை மட்டும் உங்கள் கண்களால் பார்த்து விடுங்கள் போதும். பல தலைமுறை தொடரும் பித்ரு சாபம் விலகி, உங்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும்.

இந்த பதிவில் பெண் சாபம் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகார முறைகளை பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள். எந்த ஒரு தவறையும் செய்து அதன் பிறகு அதை சரி செய்ய முயல்வதை விட, இப்படியான சாபங்கள் நம் குடும்பத்தை தாக்காமல் இருக்க நம் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வது ஒன்றே சிறந்தது. இந்த எண்ணத்தை நாம் முதலாக கொண்டு வாழ்வோம் என்ற கருத்து ஒரு பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -