சமையலறையில் எப்போதுமே இல்லை என்று சொல்லாத அளவிற்கு பொருட்கள் நிறைவாக இருக்க, இதை மட்டும் செய்தாலே போதும். அன்னபூரணி தாயாரின் அனுகிரகம் பெற்று உங்க சந்ததியே வறுமை நிலையிலிருந்து தப்பித்து விடும்.

annapurani milk lunch
- Advertisement -

எத்தனையோ குடும்பங்களில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இவை எல்லாம் வறுமை நிலையை சாரும். ஆனால் ஒரு சில குடும்பங்களில் எல்லாம் இருக்கும் ஆனால் அவர்களால் வீட்டில் நிம்மதியாக ஒரு வேளை கூட சமைத்து சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட முடியாத அளவிற்கு வியாதிகள் இருக்கும். இப்படி எல்லாம் இருந்தும் சாப்பிட முடியாத சூழ்நிலை இருந்தால் அங்கு அன்னதோஷம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு நிலையும் மாற நாம் சமையலறையில் செய்ய வேண்டியவற்றை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்பு தெரிந்து கொள்ள போகிறோம்.

அன்ன தோஷம் ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியது
சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். அது மட்டுமின்றி இரவு படுக்கும் போது சமையலறை சுத்தம் செய்து பாத்திரங்களை எல்லாம் கழுவி எடுத்து வைத்த பிறகு தான் உறங்க செல்ல வேண்டும். இப்படி இருந்தால் தான் நீங்கள் அடுத்த நாள் சமைக்கும் போது உங்களுடைய மனநிலை தெளிவாக இருக்கும்.

- Advertisement -

சமையல் அறையில் பெண்கள் சமைக்கும் போது எந்த மன குழப்பமோ, எரிச்சலோ கோபமோ இல்லாமல் சமைக்க வேண்டும். பூஜையறையில் எப்படி நாம் தெய்வத்தின் முன்பு நிற்கும் போது மன அமைதியுடன் நின்று வணங்குவோமோ அதே மனநிலையுடன் தான் சமையல் அறையிலும் சமையல் செய்யும் போது இருக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய எண்ணத்தின் பிரதிபலிப்பு நாம் சமைக்கும் உணவில் சேரும். இதை சாப்பிடும் நம் குழந்தைகளும் வீட்டில் உள்ளவர்களுக்கும் இதன் தாக்கங்கள் சேரும் என்பதை மறக்கக் கூடாது.

இவற்றையெல்லாம் செய்வதோடு முடிந்த வரையில் காலையில் எழுந்ததும் குளித்து முடித்த பிறகு சமையல் வேலையை தொடங்குவது நல்லது. முடியாதவர்கள் கை கால் சுத்தம் செய்து பிறகு சமையலறையில் ஒரு அகல் விளக்கில் பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அன்னலட்சுமி தாயாரை நினைத்து ஒரு தீபம் ஏற்றி வணங்கிய பிறகு அடுப்பை பற்ற வைக்க வேண்டும்.

- Advertisement -

சமையலறையிலே உங்களுக்கு படம் வைக்க முடியும் என்றால் ஒரே ஒரு அன்னபூரணி படம் மட்டும் வைத்து அங்கேயே தீபம் ஏற்றி வைத்து வணங்கலாம். அசைவம் சமைக்கும் நேரத்தில் ஒரு சிறிய துணியை போட்டு மறைத்து விடலாம். சமையலறையில் இந்த படத்தை வைப்பதனால் தவறு ஒன்றும் இல்லை. இப்படி தீபம் ஏற்றுவதுடன் முதலில் பாலை காய்ச்சிய பிறகு அந்தப் பாலில் இருந்து ஒரு டம்ளர் பாலை எடுத்து சாமி படத்திற்கு முன்பாக வைத்து விட்டு பிறகு நீங்கள் மற்றவற்றை சமைக்க தொடங்கலாம்.

வீட்டில் எப்படி மகாலட்சுமி தாயாரின் வாசம் முக்கியமோ அதே போல அன்னலட்சுமி தாயாரின் அனுகிரகமும் வீட்டில் மிக மிக முக்கியம். எவ்வளவு பணம் காசு இருந்தாலும் நேரத்திற்கு நம்மால் ஒரு பிடி சாதம் சாப்பிட முடியவில்லை என்றால் சம்பாதிக்கும் பணம் அனைத்தும் வீண் தானே. இந்த ஒரு சிறிய காரியத்தை செய்வதன் மூலம் அன்னதோஷமும் வறுமையும் நம்மை நெருங்காது என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இது நமக்கு மட்டுமல்ல நம்முடைய அடுத்த சந்ததியினரை கூட காக்கும்.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடன் தீர செவ்வாய் ஹோரையில் இதை மட்டும் செஞ்சு பாருங்க! கோடி கோடியாய் கடன் இருந்தாலும் விரைவில் காணாமல் போகும்.

அன்னதோஷம் வறுமை ஏற்படாமல் இருக்க அன்னலட்சுமி தாயாருக்கு ஏற்ற வேண்டிய தீபம் வழிபாடு முறைகளை பற்றியும் பெண்கள் சமையலறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பற்றியும் தெரிந்து கொள்ள இந்த ஆன்மீக பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தோன்றினால் நீங்களும் இதையே பின்பற்றி பயனடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -