எந்த வீட்டில் பெண்கள் அடிக்கடி இந்த வார்த்தையை சொல்லி கொண்டே இருக்கிறார்களோ, அந்த வீட்டில், தெய்வங்கள் குடியிருக்காது. அந்த வீடு கஷ்டங்கள் நிறைந்த வீடாகத் தான் இருக்கும்.

women
- Advertisement -

ஒரு குடும்பத்தில் கஷ்டங்கள் வருவதற்கு பல வகையான காரணங்கள் இருக்கலாம். கஷ்டத்தை எதிர்கொள்ளாமல் கட்டாயமாக நம்முடைய வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியாது. ஆனால் வரக்கூடிய கஷ்டத்தை சுலபமாக சமாளித்து, அந்த கஷ்டத்திலிருந்து எப்படி வெளிவருவது என்றுதான் முதலில் நாம் சிந்திக்க வேண்டும். ஒரு குடும்பத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்லக்கூடிய கடமையும், திறமையும் முழுக்க முழுக்க அந்த வீட்டின் குடும்பத் தலைவிக்கு தான் உள்ளது. ஏன்? குடும்பத் தலைவருக்கு இல்லையா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். என்னதான் குடும்பத்தலைவர் பொறுப்புகளோடு நடந்து கொண்டாலும், ஒரு வீட்டை சுபிட்சமாக பார்த்துக் கொள்ளக்கூடிய பொறுப்பு முழுக்க முழுக்க பெண்கள் கையில்தான் உள்ளது. இதில் மாற்றுக் கருத்து வேறு எதுவுமே கிடையாது.

women5

இவ்வளவு பொறுப்புகளையும் தன் தலைக்கு மேல் சுமந்து கொண்டிருக்கும் அந்தப் பெண், தன்னுடைய வாயில் இருந்து சொல்லக்கூடாத வார்த்தை என்ன என்பதைப் பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சொல்லப்போனால் இந்த வார்த்தையை சொல்லாதே பெண்களே இருக்கமாட்டார்கள். இந்த வார்த்தையை அவர்கள் சொல்லுவதற்கு காரணம் அவர்களுடைய வேலை சுமை, கஷ்டம், எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வார்த்தையைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் குடும்பத்திற்கு நல்லது. அது என்ன வார்த்தை.

- Advertisement -

வீட்டில் சண்டை வரும் போது, ஆண்கள் பெண்களை குறை கூறும் போது, குழந்தைகள் தன்னுடைய அம்மாவை கஷ்டப்படுத்தும் போது, அந்த அம்மாவின் வாயிலிருந்து, மனைவி ஸ்தானத்தில் இருக்கக்கூடிய பெண்ணின் வாயிலிருந்து முதலில் வரக்கூடிய வார்த்தை ‘நான் இல்லை என்றால் தான் உங்களுக்கு புரியும்’, ‘ஒரு நாளைக்கு நான் இல்லாமலேயே போய் விட்டால் அப்போது தெரியும் உங்களுக்கு கஷ்டம்’.

women8

பெண்கள் மன வருத்தப்படும் சமயத்தில், கஷ்டம் வரும்போது இந்த வார்த்தையை கட்டாயமாக சொல்வாங்க. வருத்தத்தில் வெளிவரக்கூடிய வார்த்தை தான். ஆனால் இந்த வார்த்தைகள் வெளிப்படுத்தக்கூடிய எதிர்மறை ஆற்றலானது நம் குடும்பத்திற்கு கஷ்டத்தை தான் தேடித்தரும். வீட்டில் இருக்கும் பெண்கள் தன்னுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று விழுந்து விழுந்து சாமி கும்பிட்டுவிட்டு, வீட்டில் சண்டை என்று வரும் போது இப்படிப்பட்ட வார்த்தைகளை உபயோகப்படுத்தி வீட்டு உறுப்பினர்களை திட்டும் போது, நாம் செய்யும் பூஜைக்கு கூட பலன் முழுமையாகப் கிடைப்பது கிடையாது.

- Advertisement -

ஒரு வீட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய பெண் முதலில் அதிகமாக கோபப்பட கூடாது. தன்னுடைய நிதானத்தை எந்த சூழ்நிலையிலும் இழந்துவிடக்கூடாது. அப்படியிருக்கும் போது அவர்களுடைய வாயில் இருந்து வெளிவரக்கூடிய எதிர்மறையான ஆற்றலுக்கு சக்தி மிக மிக அதிகம். நீங்கள் உச்சரிக்கக் கூடிய இப்படிப்பட்ட வார்த்தைகள் உங்கள் குடும்பத்தையே சுற்றி வரும்.

women1

தவறுகளை நாம் செய்து விடுவோம். அதற்கான தண்டனையும் கஷ்டங்களும் நமக்கு வந்து விடும். அதன் பின்பு ‘இறைவன் என் குடும்பத்திற்கு எவ்வளவு சோதனை கொடுக்கின்றான்!’ என்று இறைவனையே திட்டுவது. இதைத்தான் இன்றைய சூழ்நிலையில் நிறைய பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பேசும் இந்த வார்த்தைகள் தவறு என்று உங்களுக்கு இந்த நிமிஷத்தில் இருந்து புரிந்தால் கூட, இப்படிப்பட்ட வார்த்தைகளை இனி நீங்கள் பேசாமல் தான் இருந்து பாருங்களேன். நிச்சயமாக உங்கள் குடும்பம் சுபிட்சம் அடையும்.

- Advertisement -