பெண்கள் தலை சீவும் போது, இந்த தவறை செய்தால் வீட்டில் தெய்வங்கள் நிச்சயம் தங்காது.

hair-comb-lakshmi
- Advertisement -

நம்முடைய வீட்டில் ஒரு கஷ்டம் வருகிறது என்றால் அதற்கு நாம் செய்யக்கூடிய தவறுகள் தான் காரணமாக இருக்கும். நாம் படக்கூடிய கஷ்டத்திற்கு என்றுமே அடுத்தவர்கள் காரணம் கிடையாது. அடுத்தவர்களால் உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்து இருப்பினும், அந்த கஷ்டம் வருவதற்கு நீங்கள் முன்பு எப்போதோ செய்த தவறு தான் காரணமாக இருக்கும். இதை கொஞ்சம் பொறுமையாக யோசித்தாலே நமக்கு புரிந்துவிடும். அந்த வகையில் வீட்டில் கஷ்டங்கள் வருகிறது, வீட்டில் தெய்வ சக்தி இல்லை என்றால், அதற்கு காரணமும் நாம் செய்யக்கூடிய சில தவறுகள் தான். குறிப்பாக பெண்கள் தலை சீவும் போது இந்த தவறுகளை செய்தால் வீட்டில் தரித்திரம் பிடிக்கும். கஷ்டங்கள் வரும். கணவன் மனைவிக்குள் சண்டை வரும். தெய்வங்கள் வீட்டில் வாசம் செய்யாது. தலை சீவும் போது பெண்கள் செய்யவே கூடாது அந்த தவறுகள் என்னென்ன. இதுநாள் வரை அறியாமல் இந்த தவறை செய்திருந்தால் பிரச்சனை கிடையாது. இனி தெரிந்தும் இந்த தவறை செய்யாதீங்க.

பெண்களுக்கு கூந்தல் என்றால் அழகு. அழகான இந்த கூந்தலின் மூலம் சரித்திரம் பிடிக்குமா என்ன. நிச்சயம் பிடிக்கும். தலைமுடி தலையில் இருக்கும் வரைக்கும் தான் அழகு. அந்த முடி கீழே உதிர்ந்து விட்டால் அது எந்த விதத்திலும் அழகை கொடுக்காது. வீட்டில் இருக்கும் அழகை கெடுக்கும்.

- Advertisement -

தலை சீவும் போது பெண்கள் அதிகமாக காற்று வீசாத இடமாக பார்த்து ஒரு இடத்தில் அமர்ந்து தான் தலையில் இருக்கும் சிக்கை எடுக்க வேண்டும். சிக்கு எடுத்த முடி ஒரே இடத்தில் விழுந்திருக்கும் அல்லவா. அதை உடனடியாக உங்கள் கையை கொண்டு எடுத்தோ அல்லது துடைப்பத்தைக் கொண்டு கூட்டியோ எடுத்து சுருட்டி ஒரு பேப்பரில் மடித்து உடனடியாக குப்பை கூடையில் போட்டு விட வேண்டும். தலையில் இருந்து உதிர்ந்த முடிகள் ஒருபோதும் வீடு முழுவதும் அலையக்கூடாது. கூடவே சீப்பில் இருக்கும் முடியையும் நீங்களே சுத்தம் செய்து விட வேண்டும்.

நீங்கள் மாடி வீட்டில் குடியிருப்பவர்களாக இருந்தால் தலை சீவி உதிர்ந்த முடியை அப்படியே ஜன்னலிலோ அல்லது பால்கனீயிலோ வெளியில் தூக்கிப் போடக்கூடாது. அந்த முடி காற்றில் அலைய அலைய உங்களுடைய குடும்பமும் அலைய தான் செய்யும். உங்களுடைய உடம்பிலிருந்து, உங்களுடைய உயிரிலிருந்து வளரக்கூடிய ஒரு பொருள்தான் இந்த முடி. அந்த முடி, தலையில் இருந்து உதிர்ந்த பிறகு எந்த அளவிற்கு அலைந்து திரிந்து, அடுத்தவர்களின் கால்களின் மிதிபட்டு பாடாயப்படுகிறதோ, அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையிலும் கஷ்டம் இருக்கும். உங்களுடைய உயிரிலிருந்து வளர்ந்த பொருள் தானே அது.

- Advertisement -

உங்கள் வீட்டு சமையல் அறையில் முடி உதிர்ந்து அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தால் அன்னலட்சுமி உங்கள் வீட்டில் ஆரோக்கியமாக தங்க மாட்டாள். பூஜை அறையில் முடி அலைந்து கொண்டிருந்தால் தெய்வங்கள் அந்த இடத்தில் வாசம் செய்யாது. படுக்கையறையில் முடி அலைந்து கொண்டிருந்தால் அந்த இடத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்காது. இதையெல்லாம் தாண்டி வீடு தரித்திரம் அடைந்தது போல இருக்கும். ஆகவே முடி தானே என்று அலட்சியமாக இல்லாமல், கீழே உதிர்ந்த முடியை பொறுப்போடு எடுத்து சுருட்டி பேப்பரில் மடித்து குப்பையில் போடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

உங்களுக்கு கெடுதல் நினைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களுடைய முடி கிடைத்தால் போதும். அந்த முடியை வைத்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைப்பட, செய்வினை வைக்கலாம் என்பது அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை இருந்து வரும் நம்பிக்கை. உடனே பயந்து விடாதீர்கள். எல்லோருக்கும் இப்படி தவறு நடக்கும் என்று சொல்லவில்லை. உதிர்ந்த முடியின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளவே இந்த பதிவு.

கூடுமானவரை தலை சீவும் போது கூட உங்களுடைய முடியை அலையும்படி எந்த ஒரு ஹேர் ஸ்டைலும் செய்து கொள்ளக்கூடாது. முடியை பின்னி போட்டுக் கொள்வது தான் பெண்களுக்கு அழகு. வீட்டிற்கு நல்லது. முடியை பின்னி போட்டுக் கொண்டால் தலையில் இருந்து அடிக்கடி கீழே முடி உதிராமலும் இருக்கும். நீங்கள் முடியை விரித்து விடுவதன் மூலம் முடி உதிர்வு ஏற்பட்டு அது உங்களுடைய வீட்டை அசுத்தம் செய்து கொண்டே தான் இருக்கும். பார்த்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் ஒரு விஷயமா என்று அலட்சியமாக இருக்கும் பெண்களுக்கு நிச்சயம் கஷ்டம் தேடி வரும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -