பெண்களிடம் இருக்கக்கூடிய இந்த கெட்ட பழக்கம், ஒரு வீட்டினுடைய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடும். உங்களிடம் இந்த பழக்கம் உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

women3
- Advertisement -

ஒரு வீடு முன்னேறுவதற்கும் முன்னேறாமல் பின்தங்கி செல்வதற்கும் காரணம், அந்த வீட்டில் இருக்கக்கூடிய பெண்மணிகள் தான். இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. திறமையான புத்திசாலித்தனத்துடன் ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தை நடத்தி சென்றால் அந்த குடும்பத்திற்கு பேரிழப்பும் கஷ்டமும் ஏற்படுவதற்கு வாய்ப்பே கிடையாது. அலட்சியப்போக்குடன் அக்கறையில்லாமல் ஒரு பெண் ஒரு குடும்பத்தில் இருந்தால் அந்த வீடு முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பே கிடையாது. இதுதான் நிதர்சனமான உண்மை, என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

சில பெண்களுக்கு எப்போதுமே ஒரு பழக்க உண்டு. தான் பயன்படுத்திய பொருட்களை அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கிப் போடமாட்டார்கள். அது எந்த பொருட்களாக இருந்தாலும் சரி, உதாரணத்திற்கு அவர்கள் கையில் வளையல் போட்டிருப்பார்கள். கண்ணாடி வளையல் உடைந்தால் கூட, சில பேர் அதை வீட்டிலிருந்து வெளியே தூக்கிப் போடாமல் அலமாரியில் ஏதோ டப்பாவில் போட்டு வைத்திருப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. உடைந்த கண்ணாடி பொருள் வீட்டில் இருக்க கூடாது. அது வளையலாக இருந்தாலும் சரி. உடனடியாக குப்பையில் போட்டு விடுங்கள். சில பேர் கையில் கட்டி வைத்திருக்கும் பழைய கயிறை கழட்டினால் கூட தூக்கிப் போட மாட்டார்கள் என்றால் பாருங்களேன்.

- Advertisement -

சில பெண்கள் தன்னுடைய பழைய துணியைக் கூட பத்திரப்படுத்தி வைப்பார்கள். நிறைய ஆடைகள் அழுக்குப் படிந்து, போட்டு போட்டு பழையதாகி இருக்கும். ஆனால், அவர்கள் அதைத் தூக்கிப் போடமாட்டார்கள். அணிந்து கொள்ளவும் மாட்டார்கள். பீரோவில் அலமாரியில் ஒரு ஓரத்தில் அடுக்கி வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட பழைய துணிமணிகள் உங்கள் வீட்டில் நிறைய இறந்தால் அதை உடனே வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விடுங்கள்.

அடுத்தபடியாக சமையலறைக்கு வருவோம். கடைக்கு செல்லும் போது கண்ணில் பார்க்க கூடிய எல்லா பாத்திரங்களையும் வாங்கி வீட்டில் வைப்பது. நம்முடைய வீட்டில் எத்தனை தோசை கல், எத்தனை கடாய், எத்தனை கரண்டி, இருக்கிறது என்ற கணக்கே தெரியப்போவதில்லை.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் இரும்பில் சமையல் பொருட்கள் இருந்தால், அந்த பொருட்கள் பயன்படுத்தாமல் துருப்பிடித்து இருந்தால், அதை உடனடியாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த இரும்பு பாத்திரங்களை எடுத்து சுத்தம் செய்து எண்ணெய் தடவி வைக்க வேண்டும். துருப்பிடித்த சமையல் பாத்திரங்கள் வீட்டில் சமையலறை பரண்மேல் கூட இருக்கவே கூடாது என்பது குறிப்பிடதக்கது. இது உங்களுடைய வீட்டின் முன்னேற்றத்தை நிச்சயம் பாதிக்கும்.

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள தேவையான அழகு சாதன பொருட்கள், வீட்டை அலங்கரிப்பதற்கு வாங்கக்கூடிய பொருட்கள், செருப்புகள், ஆடைகள், ஓடாத கைக்கடிகாரங்கள், உடைந்த கம்மல்கள், உடைந்த வளையல்கள், கிழிந்துபோன ஹேண்ட் பேக், கிழிந்துபோன மணிபர்ஸ், பயன்படுத்தாத பழைய உடைந்த துருபிடித்த சமையல் பாத்திரங்கள் என்று உங்கள் வீட்டில் குப்பை கூளங்கள் சேர்ந்து இருந்தால் அதை இன்றே வீட்டில் இருந்த அகற்றி விடுங்கள். அது உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் நல்லது என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -