அட, இந்த ஐடியா கூட நல்லதா இருக்கு. இத்தனை நாட்களாக இதை தெரிந்து கொள்ளாமல் விட்டுட்டோமே. பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான சில வீட்டு குறிப்புகள்.

face12
- Advertisement -

நம்முடைய அன்றாட வேலைகளை சுலபமாக்கவும், கஷ்டப்படாமல் சில வேலைகளை செய்வதற்கும், சின்ன சின்னதாக ஒரு சில ஐடியாக்களை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக பெண்களுக்கு இந்த குறிப்புகள் எல்லாம் நிறைய பயன்படும். குறிப்பை படித்து பாருங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் பயன்படுத்தி பலன் பெறுங்கள். நான் தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடிய சின்ன சின்ன குறிப்புகள் கூட சில சமயங்களில் நமக்கு பெரிய அளவில் கை கொடுக்கும்.

காலி பெருங்காய டப்பாவை இனி தூக்கி போடாதீங்க. காலி பெருங்காய டப்பாவில் இருந்து வாசம் வெளியே வரும்படி, அந்த ஓட்டையை திறந்து வைத்துவிட்டு, அதை அப்படியே அரிசி மூட்டை உள்ளே அல்லது பருப்பு ஸ்டொர் செய்து வைத்திருக்கும் டப்பாவிலோ போட்டு வைத்தால் அரிசி பருப்பு வருட கணக்கில் கூட வண்டு பிடிக்காமல் பூச்சி பிடிக்காமல் இருக்கும். ஒவ்வொரு பெருங்காய டப்பா காலி ஆகும்போது, மைதாவிற்குள், கோதுமை டப்பாவிற்குள் ஒன்று, அரிசிக்குள் ஒன்று என்று தனித்தனியாக போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ரெடிமேட்டில் எடுக்கக்கூடிய ஷர்ட் சுடிதார் இவைகளில் இந்த பட்டன் அறுந்து போவது எல்லோரும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு கஷ்டம். புதியதாக சட்டை வாங்கிய பின்பு பட்டனுக்கு பின்னால் இருக்கும் நூலுக்கு மேலே டிரான்ஸ்பரென்ட் நைல் பாலிஷை தடவி விடுங்கள். (பட்டனை தைத்து பின்பக்கம் முடிச்சு போட்டு இருப்பார்கள் அல்லவா. அந்த இடத்தில் லேசாக தொடங்க வேண்டும்.) ஒருமுறை தடவிய நெயில் பாலிஷ் காய்ந்ததும் மீண்டும் இரண்டு அல்லது மூன்று கோட்டிங் போட்டு விட்டால், வாஷிங் மிஷினில் துவைத்தால் கூட சட்டையில் இருக்கும் பட்டன் அருந்து வராது. இதே போல தான் சுடிதாருக்கு முன்னாடி டிசைன் கொடுப்பாங்க. அந்த பட்டன் அறுபடாமல் இருக்கவும் இதே குறித்த ட்ரை பண்ணுங்க.

கண்ணில் ஐலைனர் காஜல் இவைகளை பெண்கள் அழகுக்காக போட்டுக் கொள்வார்கள். போடும்போது சூப்பரா தான் இருக்கும். ஆனா அதை ரிமூவ் செய்வதற்குள் போதும் போதும் என ஆகும். காது குடையும் பட்ஸ் ஒன்றை எடுத்து, அதில் வேஸ்லினை தொட்டு, எந்த இடத்தில் கண்களில் மை போட்டு இருக்கீங்களா, அந்த இடத்தை அப்படியே துடைத்து எடுங்கள். ஒரு துளி கருப்பு கூட இல்லாமல், கண்ணை சுற்றி கருப்பாகாமல் சுத்தமாக கருப்பு நிறம் ரிமூவ் ஆகிவிடும்.

- Advertisement -

குக்கர் பிரஷர் அடங்கியவுடன், குக்கர் மூடியை திறந்த உடனே அந்த ரப்பரை எடுத்து பச்சை தண்ணீரில் போட்டு விடுங்கள். ரப்பர்(கேஸ்கட்) நீண்ட நாட்களுக்கு உழைத்து வரும்.

புது துணியில் வெள்ளைத் துணியில் டீ காபி கொட்டி விட்டதா. அந்த கறையை சரி செய்ய அதில் கொஞ்சமாக லைசாலை ஊற்றி கசக்கினால் ஒரு துளி கூட கறை இருக்காது.

இதையும் படிக்கலாமே: செட்டிநாடு ஃபேமஸ் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு. ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறம் உங்களுடைய ஃபேவரிட் ரெசிபி இதுவா தான் இருக்கும்

எல்லோர் வீட்டிலும் இப்போது கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏற்றி வைக்கின்றோம். அந்த சாம்பிராணி எரிந்து முடிந்ததும் சாம்பல் மிச்சம் இருக்கும் அல்லவா. அதை இனி குப்பையில் போடாதீங்க. உங்க வீட்ல இருக்கிற பழைய எவர் சில்வர் ஜாமானை புத்தம் புதுசாக இந்த குறிப்பு பயன்படும். அந்த சாம்பலை ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து காய்ந்த பழைய சில்வர் சாமானின் மேலே தேய்த்துக் கொடுத்தால், சில்வர் பாத்திரம் புத்தம் புதுசாக மாறிடும். பல வருடம் பழைய சில்வர் பாத்திரத்தை கூட பத்து நிமிடத்தில் பளபளப்பாக மாறலாம். இந்த ஐடியாவை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -