பல தலைமுறையை தாக்கக்கூடிய பெண் சாபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பெண் சாபத்தால் வீட்டில் இப்படிக்கூட பிரச்சனைகள் வருமா என்ன?

Sabam-1
- Advertisement -

பெண் சாபம் நீங்க பரிகாரம் | Pen Sabam Neenga Pariharam 

நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் 13 வகையான சாபங்கள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் இந்த பெண் சாபம். முதலில் நம்முடைய வீட்டிற்கு பெண் சாபம் இருக்கிறது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்ளலாம். சில நல்ல ஜோதிடர்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஜாதகத்தை பார்த்தே அந்த குடும்பத்தில் பெண் சாபம் இருக்கிறது என்பதை சொல்லிவிடுவார்கள். அப்படி இல்லை என்றால் ஒரு வீட்டில் இருக்கக்கூடிய பெண் குழந்தை சிறு வயதிலேயே இறந்து போவது. அந்த வீட்டில் இருக்கக் கூடிய பெண்களுக்கு திருமணம் நடக்காமல் இருப்பது. ஒரு வீட்டிற்கு விளக்கு ஏற்றிவைக்க மருமகள் அமையாமல் இருப்பது, திருமணம் நடந்தும் அந்த வீட்டில் இருக்கக்கூடிய பெண்களால் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழ முடியாமல் இருப்பது, போன்ற கஷ்டங்கள் ஒரு வீட்டில் இருந்தால் அந்த வீட்டில் ஏதோ ஒருவகையான பெண் சாபம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இதே போல நிறைய வீட்டில் பெண்கள் துர் மரணம் அடைந்திருப்பார்கள். அதாவது வாழ வேண்டிய வயதில் எந்த விதமான சுகபோகங்களையும் அனுபவிக்காமல் ஏதோ ஒரு சூழ்நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் உயிர் இழக்க நேரிடும். விபத்தில் இறந்து இருக்கலாம், அல்லது தானாக தற்கொலை செய்து இருக்கலாம்.

- Advertisement -

அந்த ஆத்மா சாந்தி அடையாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஆத்மாவிற்கு ஏற்படக்கூடிய கோபம், ஒரு குடும்பத்திற்கு பெண் சாபமாக மாறுவதற்கு கூட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சில வீடுகளுக்கு விதவை சாபங்கள் கூட இருக்கும். சரி ஏதோ ஒரு ரூபத்தில் நம்முடைய வீட்டில் கஷ்டம் இருக்கிறது. அது பெண் சாபமாக இருக்கக் கூடுமோ என்று நமக்கு சந்தேகம் இருந்தால் என்ன செய்வது. சுலபமான இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம்.

உங்களால் முடிந்த வரை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ கஷ்டப்படும் பெண்ணுக்கு புடவை ரவிக்கை துணி வளையல் குங்குமம் மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வாங்கி கொடுக்கலாம். சில விதவை பெண்கள் வாழ்க்கையில் தங்களுடைய குழந்தைகளை வளர்ப்பதற்கு ரொம்பவும் சிரமப் படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்து வரும் போது உங்களுடைய குடும்பத்திற்கு இருக்கக்கூடிய பெண் சாபம் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அடுத்தபடியாக பெண் சாபம் நீங்க அஷ்டமி அன்று பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். அஷ்டமி திதி வரும் போது உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வடைமாலை சாத்தி பைரவருக்கு உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் உடைய பெயர்களையெல்லாம் சொல்லி அர்ச்சனை செய்து ‘அறிந்தும் அறியாமலும் என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் யாரேனும் பெண்களுக்கு தீங்கிழைத்து இருந்தால் அதன் மூலம் எங்கள் குடும்பத்திற்கு பெண் சாபம் கிடைத்திருந்தால் அதற்குண்டான விமோசனத்தை கொடுக்க வேண்டும்’ என்று அந்த பைரவரிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குடும்பத்தோடு சென்று இந்த வழிபாடு செய்வது சிறப்பு.

இது தவிர உங்களுக்கு தெரிந்து யாராவது உங்களுடைய குடும்பத்தில் பெண்கள் சிறுவயதிலேயே இருந்திருந்தாலோ, துற்மரணமடைந்து இருந்தார்கலோ, அவர்களை நினைத்து வழிபாடு செய்யுங்கள். வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்தும் போது அந்த ஆத்மா கோபத்திலே இருந்தால் கூட, கோபம் தணிந்து உங்களுடைய குடும்பத்திற்கு நல்லது செய்ய ஆரம்பிக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -