சனிக்கிழமை இந்த கோபுரத்தை, இப்படி தரிசனம் செய்து வேண்டுதல் வைத்தால் கஷ்டங்கள், நஷ்டங்கள் நொடிப்பொழுதில் தீரும்.

thirupathi-compressed

நமக்கு வரக்கூடிய கஷ்டங்களை விதிப் பயனால் யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அந்த கஷ்டங்களினால் ஏற்படக்கூடிய விளைவுகளை குறைப்பதற்கு ஆன்மீக ரீதியாக சில வழிமுறைகள் உண்டு. அதில் சில பேர் துயரத்தில், கஷ்டத்தில் இருந்தால் கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வார்கள். சிலபேர் குலதெய்வத்தை வேண்டி வீட்டிலிருந்தபடியே வழிபாடு செய்வார்கள். இதில் எந்த ஒரு தவறும் இல்லை. முழு நம்பிக்கையோடு இறை வழிபாடு செய்வதன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய கஷ்டங்களினால், ஏற்படக்கூடிய விளைவுகள் நிச்சயமாக குறையும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.

thirupathi

அந்த வரிசையில் தீராத கஷ்டங்களுக்கும், தீராத நஷ்டங்களும் உடனடி தீர்வை தரக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றிதான் இன்று, இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கோபுர தரிசனம் கோடி புண்ணியத்தை தரும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். இந்த கோபுர தரிசனத்தை மேலும் சிறப்பாக எப்படி செய்வது?

வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சனிக்கிழமை அன்று திருப்பதிக்கு சென்று, பெருமாளை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து கோவிலை பிரதக்ஷணம் வரும்போது, கோபுரம் தெரியும் படி ஏதாவது ஒரு இடத்தில் நின்று கோபுரத்தை மேல் நோக்கி இரண்டு கண்களாலும் தரிசனம் செய்துவிட்டு, கையேந்தி உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று ஒருமுறை உங்களுடைய குல தெய்வத்தையும் பெயரையும் சொல்லி அந்த இடத்தில் வேண்டுதல் வைத்து, பூமாதேவியை தொட்டு இரு கைகளாலும் நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். கோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு உங்களுடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அந்த வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும்.

எல்லோராலும் திருப்பதி சென்று சனிக்கிழமை பெருமாளின் கோபுரத்தை தரிசிக்க முடியுமா என்பது சந்தேகமான விஷயம் தான். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இதை ஒரு முறை செய்து பாருங்கள். வாழ்க்கையில் நிச்சயம் உங்கள் தீராத கஷ்டங்களுக்கு கூட கூடிய விரைவிலேயே விடிவுகாலம் பிறக்கும். அப்படி இல்லை என்றால் பெருமாளின் தங்க கோபுரம் இப்போது திருவுருவப்படங்களாகவே கிடைக்கின்றது. அதை வாங்கி பூஜை அறையில் மாட்டி வைத்துக் கொள்ளலாம் அல்லது உங்கள் வீட்டு வரவேற்பறையில் மாட்டி வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

தினமும் காலை எழுந்து குளித்து சுத்தமாகி விட்டு, உங்களுடைய வீட்டில் இருக்கும் திருப்பதி பெருமாளின் கோபுரத்தை தினந்தோறும் தரிசனம் செய்துவிட்டு பூமா தேவிக்கு நமஸ்காரம் செய்து, உங்கள் வீட்டு குல தெய்வத்தையும் நினைத்து வேண்டுதல் செய்தாலும் நிச்சயமாக கஷ்டங்கள் தீரும்.

perumal-1

உங்களுடைய வீட்டில் செய்யக்கூடிய கோபுரதரிசனத்துடன் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி இலை மாலையை வாங்கி கொடுத்து, உங்களுடைய பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து, பெருமாளை தரிசனம் செய்து, அந்த துளசி இலைகளைக் கொண்டு வந்து உங்களுடைய பணம் பெட்டியில் வைத்தால் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கும் கூடிய விரைவில் விமோசனம் கிடைக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த தானம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் துன்பம் என்பதே வராதாம்! 7 ஜென்ம பாவங்களும் நீங்கி விடுமாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.