நம்முடைய மனதிற்கு பிடிக்காதவங்க, நமக்கு ஒரு சிறு துளி கூட நல்லது நினைக்காதவங்க, இவர்களை நம்மிடம் சேர விடாமல் தள்ளி வைப்பது எப்படி?

enemy1
- Advertisement -

பெரும்பாலும் நமக்கு பிடித்தவர்களை நம்மோடு தக்க வைத்துக் கொள்வது எப்படி என்பதை பற்றித்தான் நாம் இதுவரை சிந்தித்து இருப்போம். நமக்கு கெட்டது நினைப்பவர்கள், நம் மனதிற்கு பிடிக்காதவர்களை நம்மை விட்டு எப்படி தள்ளி வைப்பது என்று ஒருபோதும் நாம் இதுவரை சிந்தித்ததே கிடையாது. நம் மனதிற்கு பிடிக்காதவர்கள் நம் பக்கம் வராமல் இருக்க என்ன செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, எப்படிப்பட்டவர்களை நாம் தள்ளி வைக்க வேண்டும், எப்படிப்பட்டவர்களிடம் நாம் பழகக் கூடாது, என்பதை பற்றிய சில குறிப்புகளை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில பேரிடம் பேசும்போது நமக்கு திரும்பத் திரும்ப பேச வேண்டும் என்ற ஆசை வரும். இது எந்த ஒரு தவறான கண்ணோட்டத்திலும் கிடையாது. ஒரு நல்ல அபிப்பிராயம். நல்ல மரியாதை. நம்மை மறந்து ஒருவர் மேல் ஏற்படுகிறது என்றால், அவர்கள் உங்களுக்கு உண்மையாக இருக்கிறார்கள். உங்களுக்கு நல்லது நினைப்பவர்கள் என்று அர்த்தம்.

- Advertisement -

சில பேர் நம்மிடம் நன்றாக பேசும் போதே நன்றாக பழகும் போதே, நமக்கு வெறுப்பு தோன்றும். காரணம் தெரியாது. அவர்கள் நம்முடன் நேரே பார்க்கும்போது நன்றாக பழகுபவர்களாக இருந்தாலும், அவர்களிடம் ஏதோ ஒரு உண்மை இருக்காது. நம்மிடம் போலித்தனமாக இருப்பது போலவே ஒரு உணர்வு சொல்லும்.  உள் உணர்வு, இது எல்லோருக்கும் கட்டாயம் சொல்லும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் நீங்கள் யாரிடம் பழகும் போது இருக்கிறதோ, அவர்களிடம் பழகுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

இன்னும் ஆன்மீக ரீதியாக பார்த்தால் எதிர்மறை ஆற்றல் கொண்டவர்களிடம் நம்மால் நிறைய நேரம் பேசி பழக முடியாது.  பேசிய உடனே சில சமயம் வாக்குவாதம் ஏற்பட்டு விடும். அப்படி இல்லை என்றால் சண்டை சச்சரவு வந்துவிடும். இப்படிப்பட்டவர்களை கூட ஒதுக்கி வைப்பது நல்லது. இதற்காக உங்களுக்கு ரொம்பவும் நெருங்கியவர்கள், உங்கள் குழந்தை, உங்கள் கணவர், மனைவி இவர்களிடம் எல்லாம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருகிறது என்றால் அவர்களை சுத்தமாக ஒதுக்கி வைக்கக் கூடாது. இதை சரி செய்வதற்கு உண்டான நல்ல வழிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்.

- Advertisement -

சரி, விஷயத்திற்கு வருவோம். இப்போது யாரோ ஒரு நபர் அடிக்கடி உங்களிடம் வந்து பேசி தொல்லை கொடுக்கிறார்கள். இவர்களிடம் பேசாமல் இருந்தால் நல்லது என்று உங்கள் மனதில் தோன்றுகிறது. இவரிடம் பேசினால் நம் குடும்பத்தில் குழப்பம் பிரச்சனை தான் என்று தோன்றுகிறது. உடனடியாக என்ன செய்ய வேண்டும்‌ அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களுக்கு, உங்கள் கையால் சாப்பிட கொடுக்கக்கூடிய பொருளை ஆன்டி கிளாக் வைஸ் மூன்று முறை சுற்றி விட்டுக் கொடுக்க வேண்டும்.

ஒரு டம்ளர் காபி குடுக்கிறீங்க. அப்படி இல்லை என்றால் ஒரு டம்ளர் ஜூஸ் அப்படி இல்லை என்றால் தட்டில் ஏதோ ஒரு ஸ்நாக்ஸ். ஒரு சொம்பு தண்ணீரே கொடுப்பதாக இருந்தாலும் சரி, உங்களுடைய கையில் சொம்பு தண்ணீரை வைத்துக் கொண்டு அந்த சொம்பை அப்படியே ஆன்டி கிளாக் வைஸ் மூன்று முறை சுற்ற வேண்டும். அதாவது இடது பக்கத்திலிருந்து வலப்புறம். (கடிகாரம் தலைகீழாக சுற்றுவதை போல.)

‘இவர்கள் நம்மிடம் பேசாமல் இருந்தாலே நல்லது’ என்ற எண்ணத்தை பிரபஞ்சத்திடம் சொல்லிவிட்டு இப்படி ஆன்டி கிளாக் வைஸ் உங்கள் கையில் இருக்கும் பொருளை அப்படியே மூன்று முறை சுற்றி உங்கள் மனதிற்கு பிடிக்காதவர்கள் கையில் கொடுத்து விடுங்கள்.

அப்ரத்ஷணமாக ஒரு உணவு பொருளை சுற்றி அடுத்தவர்கள் கையில் கொடுத்து சாப்பிட வைக்கும் போது அவர்களுடைய உறவு என்பது நெருக்கமாகாது. அவர்கள் உங்களை விட்டு விலகி செல்லக்கூடிய தருணங்கள் ஏற்படும். இதுவே உங்களுக்குப் பிடிச்சவங்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் நம்முடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதே பொருளை க்லாக் வைஸ், வலது புறத்தில் இருந்து இடது புறம் பிரதட்சணமாக சுற்றி கொடுக்க வேண்டும். (இந்த குறிப்பை தவறான முறையில் தவறாக யாருக்கும் பயன்படுத்தக்கூடாது. தவறான எண்ணம் கொண்டவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்த்தால் அது நிச்சயம் பலிக்காது. நல்லதுக்காக மட்டுமே இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.) ட்ரை பண்ணி பாருங்க. இந்த டிப்ஸ் நல்லாவே ஒர்க் அவுட் ஆகும்.

- Advertisement -