சென்னையில் திடீரென அம்மனாக மாறிய விநாயகர் சிலை – வீடியோ

Amman Pillayar

வீடியோ கீழே உள்ளது
பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற ஒரு தகவல் சில வருடங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் தீயாக பரவியது. அது போல பல அதிசயங்களை பிள்ளையார் எப்போதும் நிகழ்த்திக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால் தற்போது பிள்ளையார் சிலை மூலம் அம்மான் ஒரு ஆர்ச்சர்யத்தை நிகழ்த்தியுள்ளார். சென்னையில் உள்ள பிள்ளையார் சிலை ஒன்று திடீரென அம்மனாக மாறியுள்ளதே அந்த அதிசயம். இதோ அதன் வீடியோ.

உங்கள் ராசிக்கான 2018 தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ளது குமாரசுவாமி தெருவில் அமைந்துள்ளது வலம்புரி விநாயகர் கோவில். இந்த கோவிலில் தினமும் பூஜை நடப்பது வழக்கம். அதோடு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் பிள்ளையாருக்கு பிரத்யேக பூஜை நடப்பதும் இங்கு வழக்கம். அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தி அன்று பூஜை செய்வதற்காக பிள்ளையாரை பார்த்தபோது அவரின் முகம் அம்மன் போல தோற்றம் அளித்துள்ளது. ஆனால் அவரின் தந்தம் அப்படியே இருந்தது. இதனை காண பக்தர்கள் அங்கு அலைகடல் என திரண்டனர்.

இந்த கோயிலிற்கு அருகில் இரண்டு அம்மன் கோவில்கள் உள்ளன. அதில் ஒரு அம்மன் கோவில் சரியாக பராமரிக்க படாததால் அங்கிருந்த அம்மன் பிள்ளையார் கோவிலில் வந்து அமந்துள்ளார் என்று பக்தர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் திடீரென இங்குள்ள பிள்ளையார் சிலை எப்படி அம்மன் முக தோற்றத்தில் காட்சி அளிக்கிறது என்பதற்காக தெளிவான காரணம் தெரியவில்லை. கடவுளின் அற்புதங்களில் இதுவும் ஒன்று என்று எண்ணி பக்தர்கள் பலர் அங்கு அம்மனையும் பிள்ளயாரையும் சேர்த்து வணங்கி செல்கின்றனர்.