இந்த ஐடியாவை தெரிஞ்சுக்காம நிறைய பழைய தலையணைகளை தூக்கி குப்பையில் போட்டு விட்டோமே. பஞ்சு விற்கும் விலைக்கு குப்பையில் தூக்கி போட்டிங்களா? காசு எல்லாம் கரியா போச்சா?

cotton
- Advertisement -

நாம் எல்லோர் வீட்டிலும் அழுக்கு பிடித்த பழைய தலையணை இருக்கும். உள்ளே ஃபைபர் ஸ்பான்ச் வைத்த தலையணையாக இருந்தால், அதை சுலபமாக வாஷிங்மெஷினில் போட்டு துவைத்துக் கொள்ளலாம். அதுவே பருத்திப்பஞ்சு, இலவம் பஞ்சில் செய்த தலையணைகளை, அழுக்கான பிறகு அப்படியே தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். சில பேர் அதை கடையில் கொடுத்து புது பஞ்சாக மாற்றி தலையணை தைத்துக் கொள்வார்கள். நம்முடைய வீட்டில் இருக்கும் பழைய தலையணையில் நசுங்கிப் போய், சிக்கு பிடித்து கல்லு போல இருக்கும் இலவம் பஞ்சினை எப்படி புதுசு போல மாற்றி, நம் கையாலேயே மிக எளிமையான முறையில் தலையணை தயாரிப்பது எப்படி என்பதை பற்றியும், வீட்டில் இருக்கும் ஸ்பான்ச் தலையணைகளை எளிமையாக துவைக்க பயனுள்ள வீட்டு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஸ்பான்ச் தலையணையை துவைக்கும் எளிமையான முறை:
முதலில் ஒரு அகலமான பக்கெட்டில் சுடச்சுட தண்ணீரை தேவையான அளவு ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 1/4 கப் அளவு சிந்தடிக் வினிகர், வாஷிங் சோடா 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 2 ஸ்பூன், துணி துவைக்கும் பவுடர் 1 ஸ்பூன், போட்டு ஒரு குச்சை வைத்து நன்றாக கலந்து, இந்த தண்ணீரில் பழைய தலையணையை நன்றாக  1 மணிநேரம் ஊற வைத்து எடுத்து அப்படியே வாஷிங் மிஷினில் போட்டு துவைக்க வேண்டும்.

- Advertisement -

வாஷிங்மெஷினில் ஹார்டான துணிகளை துவைப்பதற்கு ஆப்ஷன் இருக்கும் அல்லவா, அந்த பட்டனை அழுத்தி வாஷிங்மெஷினில், தலையணைகளை துவைத்து, ட்ரை செய்து வெயிலில் காய வைத்து எடுத்தால் சூப்பராக கறைகள் எல்லாம் நீங்கிவிடும்.

உங்களுக்கு வாஷிங் மிஷினில் போட வாய்ப்பு இல்லை என்றால் முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் சிந்தடிக் வினிகர், வாஷிங் சோடா, லெமன் ஜூஸ், துணி துவைக்கும் லிக்விட் மட்டும் கரைத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் எதுவும் ஊற்றக்கூடாது. இந்த லிக்விடை அழுக்கான தலையினியின் மேலே நன்றாக தடவி, ஒரு ஸ்பாஞ் நாரை வைத்து நன்றாக தேய்த்து கொடுக்க வேண்டும். அப்போது அந்த தலையணையில் இருக்கும் கறைகள் மொத்தமும் சுலபமாக நீங்கிவிடும்.

- Advertisement -

பிறகு லேசாக சோப்பு போட்டு நார் போட்டு தேய்த்து தண்ணீரில் அலசி பிழிந்து நல்ல வெயிலில் இரண்டு நாள் காய வைத்து விடுங்கள். அவ்வளவுதான், தலையணையில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் போயிருக்கும்.

பழைய பஞ்சில் புதுசாக தலையணை தயாரிப்பது எப்படி?
பழைய தலையணையில் இருக்கும் பஞ்சுகளை எல்லாம் கிழித்து எடுத்துக் கொள்ளுங்கள். அது பார்ப்பதற்கு ரொம்பவும் கொஞ்சமாக இருக்கும். புசுபுசுவென இருக்காது அல்லவா. அந்த பழைய பஞ்சுகளை என்ன செய்வது. ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் கால் பாகம் அளவு, இந்த பழைய பஞ்சை போட்டு மிக்ஸி ஜாரை இரண்டு சுற்று சுற்றி ஓட விடுங்கள்.

- Advertisement -

பஞ்சுகள் எல்லாம் சாப்பிட்டாக புசுபுசுவென மிக்சி ஜார் முழுவதும் கிடைக்கும். மிக்ஸி ஜார் நிரம்ப பஞ்சை போட்டு ஓட்டாதீங்க. மிகக் குறைந்த அளவு மிக்ஸி ஜாரில் பஞ்சை போட்டு ஓட விடும்போது, அந்த பஞ்சில் இருக்கும் சிக்கு  எல்லாம் நீங்கி பஞ்சு புசுபுசுவென கிடைக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் பழைய பஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இருப்பதிலேயே பெரிய மிக்ஸி ஜாரை இந்த குறிப்புக்கு பயன்படுத்துங்கள். மிக்சி ஜார் எதுவும் ஆகாது பயப்படாதீங்க.

இதையும் படிக்கலாமே: வாஷிங் மெஷினில் இப்படி துணி துவைத்தால் ஒரு துணியில் கூட சோப்புக் கறை படியவே படியாது. அதோட இதையும் தெரிஞ்சிக்கிட்டா சோப்புக் கறை மட்டுமில்ல வேற எந்த கறையுமே துணியில் இருக்காது.

நமக்கே நன்றாக தெரியும் மிக குறைந்த அளவு இருந்த பஞ்சு, புது பஞ்சு போல புசுபுசுவென, நிறைய பஞ்சாங்கம் மாறி இருக்கும். இந்த பஞ்சை பழைய தலையணை உறைக்கு உள்ளே வைத்து, தலையணை உறையை மடித்து உங்கள் கையாலேயே ஊசி நூல் போட்டு பஞ்சு வெளியில் வராதபடி தைத்து விடுங்கள். அதன் மேலே சாதாரணமாக உறை போட்டு பயன்படுத்தி பாருங்கள். புது தலையணை போலவே, தலையணை நன்றாக புசுபுசுவென இருக்கும். இலவம் பஞ்சுக்கும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். பருத்தி பஞ்சுக்கும் இந்த குறிப்பை பயன்படுத்தி பார்க்கலாம்.

- Advertisement -