அன்னாச்சி பழ அல்வா

pineapple halwa
- Advertisement -

நம்முடைய தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் விருந்து என்று வைக்கும் பொழுது கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு இனிப்பை வைப்பார்கள். இதற்கு பொதுவாக அனைவரும் கேசரி வைப்பார்கள். அதற்கு மாற்றாக அண்ணாச்சி பழத்தை வைத்து சுவையான அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

அன்னாச்சி பழத்தில் பல அற்புதமான சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் அடிக்கடி ஏற்படக்கூடிய தலைவலி, மூளை கோளாறு, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், மூட்டு வலி போன்றவை நீங்குகிறது. அதோடு பற்கள் மற்றும் எலும்புகளில் இருக்கும் வலிகளும் நீங்குகிறது. கண்பார்வை தெளிவடைகிறது. பித்தம் அதிகமாக இருப்பவர்கள் அன்னாச்சி பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் பித்தம் சீராகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற அன்னாச்சி பழம் உதவுகிறது. அப்படிப்பட்ட அன்னாச்சி பழத்தை வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • அன்னாச்சி பழம் – 3/4 கிலோ
  • பால் – 1 டம்ளர்
  • ரவை – 100 கிராம்
  • சர்க்கரை – 200 கிராம்
  • நெய் – 100 மிலி
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • ஏலக்காய் – 1/2 ஸ்பூன்
  • ஃபுட் கலர் – சிறிது
  • தண்ணீர் – 100மிலி
  • முந்திரி, பாதாம், திராட்சை – விருப்பத்திற்கு ஏற்ப

செய்முறை

முதலில் அன்னாச்சி பழத்தை சுத்தம் செய்து அரை கிலோ அன்னாச்சி பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கால் கிலோ அண்ணாச்சி பழத்தை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் சிறிது நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம் போன்றவற்றை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே பாத்திரத்தில் ரவையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். ரவையை வறுத்துக் கொண்டு இருக்கும் பொழுதே மற்றொரு அடுப்பில் தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும். ரவை நன்றாக வறுபட்ட பிறகு கொதித்த தண்ணீரை அதில் ஊற்ற வேண்டும். ரவை வெந்ததும் அதில் பாலை சேர்க்க வேண்டும். பால் சிறிது வற்றியதும் அதில் சர்க்கரையை சேர்த்து கிண்ட வேண்டும்.

- Advertisement -

சர்க்கரை கரைந்ததும் சிறிது நெய்யை ஊற்றி ஃபுட் கலர் சேர்க்க வேண்டும். பிறகு வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம், திராட்சை, உப்பு, ஏலக்காய் தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு அரைத்து வைத்திருக்கும் அன்னாச்சி பழ சாற்றை அதில் ஊற்றி துருவிய அண்ணாச்சி பழத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக சேர்ந்து மிகவும் கெட்டியாகாமல் சிறிது நீர்த்து இருக்கும் பொழுதே மீதம் இருக்கும் நெய் அனைத்தையும் ஊற்றி நன்றாக கிளறி இறக்கி விட வேண்டும். இவை ஆரிய பிறகு அல்வா பதத்திற்கு வந்துவிடும். சுவையான அண்ணாச்சி பழ அல்வா தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: சளி, இருமலுக்கு மருந்து குழம்பு

அன்னாச்சி பழத்தை அப்படியே சாப்பிட பல பேருக்கு பிடிக்காது என்பதால் இந்த முறையில் அல்வா செய்து கொடுப்பதன் மூலம் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -