அண்ணாச்சி பழத்தில்கொழுப்பு சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் உடல் எடை குறையவும் இரத்த விருத்தி அதிகரிக்கவும் உதவும். இதில் புரதம் ,மாவு சத்து, விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு சத்து போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த ரசத்தை உடல் சோர்வுடன் இருப்பவர்களுக்கு வைத்து கொடுத்தால் உடனே உடல் புத்துணர்ச்சி அடைவார்கவர்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் அண்ணாச்சி பழத்தை வைத்து ரசம் எப்படி வைப்பது என்று கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
அண்ணாச்சி பழம் 250 கிராம்
மிளகு -1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -1/2 டீஸ்பூன்
பூண்டு பல் – 8
துவரம் பருப்பு – 1/4 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு -1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 2
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
காய்ந்த மிளகாய் – 2
உப்பு- 1/2 ஸ்பூன்
செய்முறை
முதலில் 250 கிராம் அண்ணாச்சி பழத்தில் பாதி அளவை மட்டும் எடுத்து மேல் தோல் நீக்கி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அத்துடன் மிளகு சீரகம் பூண்டு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து லேசான கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ரசத்தை தாளித்து விடலாம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி சூடானவுடன் கடுகு சேர்த்து பொரிந்த உடன் காய்ந்த மிளகாய் , பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து மீதமிருக்கும் அண்ணாச்சி பழத்தையும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி இத்துடன் சேர்த்து பிறகு பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக வதக்குங்கள். அதன் பிறகு நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் அன்னாசி பழ விழுதையும் இதில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: ஹோட்டல்களில் கிடைக்கும் பட்டர் நாணை அதே சுவையில் சிம்பிளா வீட்டிலும் செய்யலாம்
கடைசியாக வேக வைத்த பருப்பை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து மூடி போட்டு நுரைத்து வரும் வரை காத்திருந்து, அதன் பிறகு கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். நல்ல கமகமவென்று வாசத்துடன் பார்த்தாலே நாவில் எச்சில் ஊறும் அருமையான அண்ணாச்சி பழ ரசம் தயார்.