வெறும் 3 நாட்களில் அழகான பிங்க் லிப்ஸை பெற, உதட்டின் மேல் இதை தடவுங்கள் போதும். ரோஜா இதழுக்கும் உங்கள் உதட்டிற்கும் வித்தியாசமே தெரியாது.

lips
- Advertisement -

ரோஜா இதழ் போன்ற அழகான உதடுகள் எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு உதடுகள் இயற்கையாகவே பிங்க் நிறத்தில் அழகாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு உதடுகள் இயற்கையாகவே கருப்பாக இருக்கும். சில பேர் பிங்க் நிறத்தில் இருக்கக்கூடிய உதட்டின் மேல் நிறைய லிப்ஸ்டிக்கை போட்டு போட்டு, அந்த உதட்டை கருப்பாக்கி கொள்வார்கள். இப்படி உங்களுடைய உதட்டில் எந்த மாதிரி பிரச்சனை இருந்தாலும் சரி, உதடு எப்படி கருப்பாக மாறி இருந்தாலும் சரி, அதை மூன்றே நாட்களில் சரி செய்ய ஒரு எளிமையான அழகு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்கள் வீட்டில் இருக்கும் மிக மிக சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த குறிப்பை செஞ்சு முடிச்சிடலாம்.

பிங்க் நிற உதடை பெற குறிப்பு:
இந்த குறிப்புக்கு நமக்கு சுத்தமான தேன், சர்க்கரை, தயிர், கஸ்தூரி மஞ்சள் தூள் இந்த நான்கு பொருட்கள் இருந்தால் போதும்.

- Advertisement -

Step 1:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு சொட்டு தேன், சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலந்து இதைத் தொட்டு உங்களுடைய உதட்டை ஜென்டில் ஆக அப்படியே வட்ட வடிவில் மசாஜ் செய்து ஸ்கிராப் செய்ய வேண்டும். ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடம் வரை இந்த ஸ்க்ரப்பர் செய்தால் போதும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் உதட்டை கழுவி விடுங்கள்.

Step 2:
அடுத்தது உதட்டுக்கு ஒரு பேக் போட வேண்டும். சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக தயிர், ஒரே ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் தூள் போட்டு, கலந்து இதை உங்களுடைய உதட்டின் மேல் கொஞ்சம் திக்காக பேக் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஐந்திலிருந்து ஏழு நிமிடம் இந்த பேக் உதட்டிலேயே இருக்கட்டும். அதன் பின்பு லேசாக மசாஜ் செய்து உதட்டை கழுவி விடலாம். இந்த இரண்டு ஸ்டெப்பை பின்பற்றும் போதே உங்களுடைய உதட்டில் நன்றாக வித்தியாசம் தெரியும்.

- Advertisement -

Step 3:
இறுதியாக உதட்டை அப்படியே டிரையாக விட்டு விடக் கூடாது. உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப உதட்டின் மேல் லிப் பாம் தடவிக் கொள்ளலாம். எப்போதும் லிப்பாமை உதட்டின் மேல் தடவி இருப்பதைவிட கொஞ்சமாக தேங்காய் எண்ணெய், சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் இருக்கும் அல்லவா, அதை வீட்டில் இருக்கும் போது உதட்டின் மேல் தடவி வைப்பது ரொம்ப ரொம்ப நல்லது. இரவு தூங்கச் செல்லும்போது உதட்டில் இருக்கும் லிப்ஸ்டிக்கை துடைத்து விட்டு கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை அப்ளை செய்து தூங்க செல்வது ரொம்ப ரொம்ப நல்லது.

மேலே சொன்ன இந்த மூன்று ஸ்டெப்பையும் தொடர்ந்து, மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் செய்து பாருங்கள். உங்களுடைய உதட்டில் கருப்பு நிறம் படிப்படியாக குறைய தொடங்கும். சர்க்கரை தேன் சேர்த்து செய்யக்கூடிய ஸ்கரப்பரை மட்டும் தொடர்ந்து செய்யக் கூடாது. ஸ்க்ரப்பர் என்பது வாரத்தில் ஒரு நாள் செய்யக்கூடிய விஷயம். மற்றபடி வெறும் தேனை உதட்டின் மேல் தினமும் அப்ளை செய்யலாம். தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வது முற்றிலும் நின்று கருகரு என்று அடர்த்தியாக வளர இந்த கீரையை சாப்பிட மட்டுமல்ல, தலைக்கு தேய்த்து குளிக்கவும் செய்யலாமே! என்ன கீரை அது?

தினமும் உதட்டிற்கு மேலே கஸ்தூரி மஞ்சள் தயிர் சேர்த்த பேக் போடலாம். தயிர் உங்களுக்கு கிடைக்கவில்லை, தயிர் வாசம் பிடிக்காதவர்கள் பால் ஆடையில் கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து உதட்டின் மேல் அப்ளை செய்து கொள்ளலாம். மஞ்சள் தூளை அதிகமாக போடாதீங்க. ஒரு சிட்டிகை போட்டால் போதுமானது. அதுவும் கஸ்தூரி மஞ்சள் தான் சேர்க்க வேண்டும். இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -