சனிக்கிழமைகளில் இந்த ஏழு பொருட்களை தவறியும் பிறருக்கு கொடுத்து விடாதீர்கள். இதனால் தீராத துன்பத்திற்கு ஆளாவதுடன், அதிஷ்டம் என்பதே உங்க வாழ்க்கையில் இனி வரவே வராது.

- Advertisement -

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்களில் வீட்டிலிருந்து என்னென்ன கொடுக்கக் கூடாது கொடுக்க வேண்டும் என்பவனவற்றை பற்றி தான் நாம் அதிகம் தெரிந்து வைத்திருப்போம் ஆனால் கிழமைகளில் எல்லா கிழமைகள் என்றும் இது போன்ற தன்மைகள் உண்டு அதில் சனிக்கிழமைகளில் சில பொருட்கள் நம்மிடம் இருந்து சென்றால் நம் குடும்பத்திற்கு கஷ்டமும் அதே நேரத்தில் நம்முடைய அதிர்ஷ்டங்களும் நம்மை விட்டு விலகி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சனிக்கிழமைகளில் தரக் கூடாத பொருட்கள்
வெள்ளிப் பொருட்களை சனிக்கிழமைகளில் நாம் யாருக்கும் கொடுக்கக் கூடாது அதாவது நம்முடைய அணிகலன்கள் எதையாவது பிறருக்கு அணிய கொடுப்பதோ அல்லது அன்பளிப்பாக கொடுப்பது போன்றவற்றை இந்த கிழமைகளில் நிச்சயம் செய்யக் கூடாது. இதன் மூலம் நம்மிடம் இருக்கும் அதிர்ஷ்டங்கள் அனைத்தும் சென்று விடும் என்பதோடு திரும்பவும் வராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் மல்லிகை பூ இதயம் வெள்ளிக்கிழமை நாட்களில் நாம் யாருக்கும் கொடுக்கக் கூடாது பொதுவாக மற்றவருக்கு கொடுக்கும் போது நமக்கு அதிர்ஷ்டமும் மங்கலமும் உண்டாகும் என்பது தான் ஐதீகம். ஆனால் சனிக்கிழமைகளில் அதை தவிர்ப்பது நல்லது. இதனால் கொடுப்பவர் வாங்குபவர் இருவருமே தீராத பிரச்சனைக்கு உள்ளார்கள்.

நிறங்களை பொறுத்த வரையில் சனிக்கிழமைகளில் சிகப்பு நிறம் உள்ள துணிகளையும், வெள்ளை நிறமுள்ள துணிகளையும் பிறருக்கு கொடுப்பதை தவிர்த்து விட வேண்டும். இதனால் இருவருக்கும் இருக்கும் உறவுகள் துண்டிக்கப்படுவதோடு குடும்பத்தில் தீராத பிரச்சனைகள் உண்டாகும்.

- Advertisement -

சனிக்கிழமைகளில் சிகப்பு நிற மையால் ஆன பேனாவை நாம் பிறருக்கு தரக்கூடாது. இந்த சிறப்பு நிற பேனாவை கொடுக்கும் பொழுது கொடுப்பவருக்கு எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது ஆனால் வாங்குபவர்கள் தீராத துன்பத்திற்கு ஆள ஆவார்கள். அதேபோல கத்திரிக்கோலையும் தர கூடாது. இதை தருவதால் எத்தனை சுமூகமான உறவும் முறிந்து விடும்.

அதே போல் இந்த கிழமையில் முத்துக்கள் முத்துக்களால் ஆன பொருட்கள் நம் வீட்டை விட்டு செல்லக் கூடாது யாருக்கும் நம் கையால் அன்றைய தினத்தில் கொடுக்கவும் கூடாது. இதனால் நம்முடைய செல்வ நிலை பெருமளவு குறைந்து பொருளாதார சிக்கல்களில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: இந்த 3 பொருட்கள் எப்போதும் பூஜை அறையில் இருந்தால், கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம். குடும்ப கஷ்டத்தை தீர்க்க போகும் அந்த பொருட்கள் என்னென்ன?

மேலே குறிப்பிட்டுள்ள இந்த பொருட்களை எல்லாம் சனிக்கிழமைகளில் நாம் பிறருக்கு கொடுக்காமலும் நம் வீட்டை விட்டு வெளியில் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாமலும் இருந்தாலே நம்முடைய பண பிரச்சனை குடும்ப பிரச்சனை போன்றவைகள் ஏற்படாமல் குடும்பம் சமூகமான முறையில் செல்லும் என்று ஆன்மீகம் சொல்கிறது. இந்தப் பதிவில் உள்ள தகவல்களில் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை பின்பற்றலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -