அதிகம் புளித்து போன இட்லி மாவு கொஞ்சம் இருந்தா கூட தூக்கி வீசாதீங்க, மறக்காம இந்த 2 விஷயத்தை உங்கள் வீட்டிலும் செஞ்சு பாருங்க யூஸ்புல்லா இருக்குமே!

maavu-bucket-plant
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் எப்போதும் இட்லி மாவு கண்டிப்பாக இருக்கும். வாரம் ஒரு முறை அரைத்து வைக்கும் இந்த இட்லி, தோசை மாவு போன்றவை நீண்ட நாட்களுக்கு தங்காது. நான்கைந்து நாட்களில் அதிகம் புளித்து போய்விடும். இப்படி புளித்துப் போன இட்லி, தோசை மாவை நாம் கீழே வீணாக ஊற்றி விடுவோம். அப்படி அல்லாமல் வீட்டில் ரொம்பவும் உபயோகமான இந்த 2 விஷயத்தை செய்து பார்த்தால், உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை தொடர்ந்து இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

அதிகம் புளித்த இட்லி, தோசை மாவை வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து ஊற்றி பிறகு தோசை வார்த்தால் புளிப்பு தெரியாது என்று கூறுவார்கள். ஆனால் புளித்த மாவு கொஞ்சம் போல இருந்தால், இது போல செய்ய முடியாது. அப்படி கொஞ்சம் போல் இருக்கும் புளித்து போன மாவை வீணடிக்காமல் வீட்டில் உப்பு கறை படிந்த பிளாஸ்டிக் வாலி, மக்கு போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

உங்களிடம் இருக்கும் புளித்த இட்லி மாவுடன் பாதி அளவிற்கு கோலமாவு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவை உப்பு மற்றும் அழுக்கு படிந்த கரையுள்ள பாத்ரூம் பக்கெட்டுகள், வாலிகள், மக்குகள் போன்றவற்றை சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றின் உட்புறமும், வெளிப்புறமும் எல்லா இடங்களிலும் படும்படி நன்கு இந்த மாவை தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை மணி நேரம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

அதன் பிறகு இரும்பு ஸ்கிரப்பர் கொண்டு லேசாக தேய்த்தாலே உப்பு மற்றும் அழுக்கு அப்படியே கழண்டு வந்து விடும். அதன் பிறகு நீங்கள் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. தண்ணீர் ஊற்றி கழுவினால் போதும் புதிதாக வாங்கிய வாலி, பக்கெட் போல பளிச்சென்று மின்னும். வாலி, பக்கெட்டுகள் மட்டும் அல்லாமல் டைல்ஸ்களில் ஒட்டி இருக்கும் உப்பு கறையையும் இந்த மாவை கொண்டு நீங்கள் நீக்கலாம். சிறிதளவு டைல்ஸ்களில் மாவை கைகளில் கையுறை அணிந்து கொண்டு எல்லா இடங்களிலும் படும்படி தடவிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அரை மணி நேரம் ஊற விட்டுவிட்டு நீங்கள் பாத்ரூம் பிரஸ்சால் கழுவினால் போதும், உப்பு கறை முழுவதுமாக நீங்கிவிடும். மேலும் புளித்த மாவுடன் 5 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை நீங்கள் உங்கள் வீட்டில் வளரும் காய்கறி செடி மற்றும் பூ செடிகளுக்கு சத்துள்ள உரமாக தெளித்து வரலாம். இது போல நீங்கள் செடிகளுக்கு ஊற்றி வந்தால் மண்ணில் இருக்கும் நுண்ணுயிரிகள் பெருக ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
இனி உங்க குட்டிஸ் தங்க நகை தொலையறதுக்கு வாய்ப்பே இல்லங்க. வெளிய போகும் போது கூட பயப்படாம போடலாம். அதுக்கும் சூப்பர் ஐடியா இருக்கு ட்ரை பண்ணி பாருங்க.

இது மண்ணின் தரத்தை அதிகரிக்கும். அது மட்டும் அல்லாமல் பூச்சி தொந்தரவுகளில் இருந்தும் உங்களுடைய செடிகளை பாதுகாக்கும் மேலும் செடிகள் செம்மையாக வளரவும், பெரிய பெரிய பூக்கள் பூக்கவும் இதில் இருக்கும் சத்துக்கள் நிறையவே உதவி புரியும். புளித்த மாவில் அந்த அளவிற்கு நிறைய நுண்ணுயிர் சத்துக்கள் உள்ளன. எனவே இந்த சத்துக்களை வீணடிக்காமல் இந்த முறைகளிலும் நீங்கள் பயன்படுத்தி பலன் பெறலாமே!

- Advertisement -