பித்த வெடிப்பை நீக்க எளிய அழகு குறிப்பு

piththa-vedippu
- Advertisement -

பெரும்பான்மையான பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை இந்த பித்த வெடிப்பு. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் இந்த பித்த வெடிப்பு இருக்குது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. சில பேர் இதற்காக தனியாக காசு செலவு செய்து பியூட்டி பார்லருக்கு சென்று பித்த வெடிப்பை நீக்க சில முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் இதற்கு எளிமையான ஒரு வீட்டு குறிப்பு உள்ளது.

தேவை என்பவர்கள் இந்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள். ஐந்தே நிமிடத்தில் உங்களுடைய கால்களும் அழகாக மாறும். திடீரென்று இன்று மாலை ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டும். அழகான செப்பல் போடப் போறீங்க. லெக்கின் போட்டு இந்த செப்பல் போட்டால் காலுக்கு பின்னாடி, பாதங்களை சுற்றி இருக்கும் பித்தவெடிப்பு கட்டாயம் வெளியே தெரியும். இதை மறைக்க ஏதாவது வழி தேவை என்பவர்களுக்கு இந்த அழகு குறிப்பு.

- Advertisement -

பித்த வெடிப்பை நீக்க எளிய வீட்டு குறிப்பு

ஒரு சின்ன பவுல் எடுத்துக்கோங்க. அதில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை போட்டுக்கோங்க. தினசரி வீட்டில் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை தான். தேவையான அளவு ஷாம்பு ஊற்றி, கலந்து கொண்டே இருக்க வேண்டும். 1 டேபிள் ஸ்பூன் ஷாம்பு போதுமானதாக இருக்கும். சர்க்கரை ஷாம்புவுடன் கரைந்து பேஸ்ட் மாதிரி நமக்கு கிடைக்கும்.

இந்த பேஸ்ட் தான் நமக்கு பயன்பட போகிறது. பேஸ்ட் தயார் செய்து வச்சுட்டீங்க. உங்களுடைய கால் பாதங்களை முதலில் சுத்தம் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான சுடுதண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்துக்கோங்க. அதில் கொஞ்சமாக கல்லுப்பு, எலுமிச்சம் பழச்சாறு 1/2 ஸ்பூன் ஊற்றி, நன்றாக கலந்து அந்த தண்ணீரில் பாதங்களை முக்கி, ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் கழித்து காலை வெளியில் எடுத்து சுத்தமான டவலில் துடைத்து விடுங்கள். நம் தயார் செய்த சர்க்கரை ஷாம்பூ சேர்த்த பேஸ்ட் தயாராக இருக்கிறது. அதை பாதம் சுற்றி உள்ள வெடிப்புகளிலும் பாதத்திற்கு நடுவில் உள்ள எல்லா இடங்களிலும் தடவி விடுங்கள். ஐந்து நிமிடம் அப்படியே ஊறட்டும்.

பிறகு உடம்பு தேய்த்து குளிக்க பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் நார், அல்லது பீர்க்கங்காய்நார் ஏதோ ஒரு நாரை பயன்படுத்தி உங்கள் பாதங்களை அப்படியே லேசாக ஸ்கிரப் செய்து பாருங்கள். பித்த வெடிப்பு அதில் மறைந்திருக்கும் அழுக்கு எல்லாம் உடனடியாக நீங்கிவிடும். ரொம்ப தேச்சு ரத்தத்தை வர வைத்துக் கொள்ளாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: முகத்தை பிரகாசமாக உதவும் ஆரஞ்சு பேஷியல்.

அந்தத் தோல் எல்லாம் பிரிந்து பிரிந்து பார்ப்பதற்கு சொரசொரப்பாக இருக்கும் அல்லவா அது எல்லாம் நீங்கி வரும்படி ஜென்டில் ஆக மசாஜ் செய்து தேய்த்து பாதங்களை கழுவி கொள்ளுங்கள். உங்கள் கால் பாதங்கள் ஷைனிங்காக மாறிவிடும். எளிமையான அழகு குறிப்பு தேவை என்பவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெரலாம். உடனடியாக ரிசல்ட் தெரியும்.

- Advertisement -