பித்ரு தோஷம் பரிகாரம்

pithru dosha pariharam in tamil
- Advertisement -

நாம் இப்போது வாழ்கின்ற வாழ்க்கை நமது முன்னோர்கள் நமக்கு கொடுத்தது. நம் முன்னோர்கள் இந்த பூமியில் வாழ்ந்த போதும், மறைந்த பிறகும் எப்போதும் அவர்களின் சந்ததிகளின் நலத்தையே விரும்புகிறார்கள் என கருட புராணம் கூறுகின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பித்ரு தோஷம் ஏற்படுகிறது. இதற்கு மறைந்த முன்னோர்களுக்கு சரிவர திதி, தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பதால், அவர்களின் சாபம் ஏற்பட்டு பித்ரு தோஷமாக மாறுகிறது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட கடுமையான பித்ரு தோஷங்கள் நீங்கி, வாழ்வில் மேலான பலன்களைப் பெற செய்ய வேண்டிய பித்ரு தோஷம் பரிகாரம் குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பித்ரு தோஷம் நீங்க பரிகாரம்

தங்களுக்கு பித்ரு தோஷம் ஏற்பட்டு, அதனால் தாங்க முடியாத அளவிற்கு கஷ்டங்களை அனுபவிப்பவர்கள். எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று கோயிலின் முன் பக்க வாயில் வழியாக நுழைந்து, கோயிலில் பித்ரு சாப பரிகாரங்களை செய்து முடித்த பிறகு, கோயிலின் பின்பக்க வாயில் வழியாக வெளியேறி வரவேண்டும். மேற்சொன்ன பரிகாரத்தை முறைப்படி செய்வதால் வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற பித்ரு தோஷங்கள் நீங்கும். எந்த ஒரு மாதத்தில் வருகின்ற அமாவாசை தினத்திலும் மேற்சொன்ன பரிகாரத்தை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

தங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பித்ரு தோஷம் நீங்கி, சிறப்பான வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் தினந்தோறும் தாங்கள் காலை சிற்றுண்டி உண்பதற்கு முன்பாக எச்சில் படாத உணவு சிறிதளவு எடுத்து, காகங்களுக்கு வைத்த பிறகே உணவு உட்கொள்ளும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அமாவாசை தோறும் ஒரு வெள்ளை நிற பசுவிற்கு அருகம் புல், பச்சை புல் போன்றவற்றை உண்பதற்கு கொடுத்து வந்தாலும் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும்.

வசதி உள்ளவர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருக்கின்ற இந்துக்களின் புனித நகரமான காசி மாநகரத்துக்கு சென்று, தங்கள் பரம்பரையின் மறைந்த அத்தனை முன்னோர்களுக்கும் திதி, தர்ப்பணம் போன்ற சடங்குகளை முறைப்படி செய்வதால் பித்ருக்களின் சாபங்கள் நீங்கி, அவர்களின் அருள் கிடைத்து வாழ்வில் நல்ல நிலையை அடையலாம் என்பது அனுபவம் வாய்ந்த ஆன்மீகப் பெரியோர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -

ஒவ்வொரு மாதமும் வருகின்ற அமாவாசை தினங்களில் பித்ரு தோஷம் ஏற்பட்டிருக்கின்ற குடும்பத்தின் தலைவர், மறைந்த முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம் போன்றவற்றை தந்து அன்றைய தினம் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மறைந்த முன்னோர்களை வழிபாடு செய்வதால் பித்ரு தோஷம் நிவர்த்தியாகி, குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். மேலும் அமாவாசை தினங்களில் உங்கள் சக்திக்கு இயன்ற அளவில் ஏழைகளுக்கு அரிசி, ஆடைகள் போன்றவற்றை தானம் செய்வதாலும் பித்ரு தோஷம் நீங்கும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரன் நீச்சம் பரிகாரம்

அமாவாசை தினத்தன்று அதிகாலையில் எழுந்து, தலைக்கு குளித்து முடித்துவிட்டு, அன்றைய தினம் ஒரு தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி, அந்த தீபம் அதிகாலை முதல் இரவு 7 மணி வரை அணியாமல் பாதுகாக்க வேண்டும். பூசம், புனர்பூசம், திருவாதிரை, அனுஷம், விசாகம், சுவாதி, பூரட்டாதி போன்ற தினங்களில் அமாவாசை வரும் பட்சத்தில், அன்றைய தினம் குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுப்பதால், எப்படிப்பட்ட கடுமையான பித்ரு தோஷம் கூட நீங்கும் என சாஸ்திரம் கூறுகிறது. சித்திரை மாதத்தில் வருகின்ற அட்சய திருதியை தினத்தன்று மறைந்த முன்னோர்களுக்கு சிரார்த்தம் கொடுப்பதாலும் ஜாதகத்தில் இருக்கின்ற பித்ரு தோஷம் ( Pitra dosha pariharam in Tamil )நீங்கும் என்பது ஐதீகம். அமாவாசை தினங்களில் வீட்டில் சிறிய அளவு லட்சுமி நரசிம்மர் படத்தை வைத்து, அப்படத்திற்கு முன்பாக நின்றவாறு “‘லட்சுமி நரசிம்மர் பிரபத்தி” ஸ்தோத்திரத்தை துதிப்பதால் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

- Advertisement -