பிரியாணிக்கு பதிலாக இந்த சாதத்தை ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்களேன்! சூப்பரான நெய் சாப்பாடு ரெசிபி உங்களுக்காக!

kuska
- Advertisement -

அதிகப்படியான மசாலா பொருட்களை சேர்த்து, செய்வது பிரியாணி. மசாலா பொருட்களை குறைவாக சேர்த்து கொஞ்சம் நெய்விட்டு சில இடங்களில் நெய் சாதம் என்று செய்வார்கள். வெள்ளையாக இந்த நெய் சாதம் செய்துவிட்டு, இதற்கு சைட் டிஷ் ஆக நீங்கள் சைவம் அல்லது அசைவத்தில் எந்த குருமாவை வேண்டுமென்றாலும் பரிமாறலாம். பக்குவமாக வெள்ளை நிறத்தில் இந்த நெய் சாதத்தை எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்களுடைய வீட்டில் இத ட்ரை பண்ணி பாருங்க.

kuska1

1 கிலோ அளவு பாசுமதி அரிசியை எடுத்து, அகலமான பாத்திரத்தில் போட்டு நன்றாக 3 முறை கழுவி, தண்ணீரை கீழே ஊற்றி விட்டு, மீண்டும் நல்ல தண்ணீரை ஊற்றி 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

1 கிலோ பாசுமதி அரிசிக்கு, 1 லிட்டர் அளவு தேங்காய்பால் நமக்கு தேவைப்படும். ஒரு முழு தேங்காயை உடைத்து துருவி, தேங்காய் பாலை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இந்த அளவுகளை கப்பில் சொல்லப்போனால் 2 1/2 – கப் அளவு பாசுமதி அரிசி, 5 – கப் தேங்காய் பால். இந்த நெய் சாப்பாட்டை நாம் குக்கரில் செய்யப்போவது கிடையாது. பாத்திரத்தில் தான் செய்யப் போகின்றோம்.

kuska2

ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் – 3 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், பட்டை – 2, அன்னாசிப்பூ – 1, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, இந்த பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக மீடியம் சைஸ் வெங்காயம் – 2 நீள்வாக்கில் வெட்டியது, பச்சை மிளகாய் – 2 கீனியது, இந்த இரண்டு பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கினால் போதும். அடுப்பை மிதமான தீயில் இருக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, புதினா – 3 இனுக்கு இந்த 2 பொருட்களை சேர்த்து, 2 வதக்கு வதக்கி விட்டு, மீடியம் சைஸ் தக்காளி பழம் – 1 கொஞ்சம் பெரியதாக வெட்டி இறுதியாகத்தான் போட்டுக் கொள்ள வேண்டும். தக்காளிப்பழத்தை ரொம்பவும் வதக்கி விடக்கூடாது. தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கினாலே போதும். தக்காளியின் நிறம் சாப்பாட்டில் அதிகமாக இறங்கி விட்டால் நன்றாக இருக்காது.

kuska4

அடுத்தபடியாக 3 டேபிள் ஸ்பூன் அளவு தயிரை ஊற்றி ஒரு நிமிடம் வரை எல்லா மசாலா பொருட்களையும் ஒன்றாக கலந்து விட்டு, எடுத்து வைத்திருக்கும் ஒரு லிட்டர் தேங்காய் பாலை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து ஒரு மூடி போட்டு 1 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

தேங்காய் பால் நன்றாக கொதித்தவுடன், ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து கொதிக்கும் தேங்காய் பாலில் சேர்த்து விடுங்கள். அடுப்பு முழு தீயில் இருக்க வேண்டும். சாதமும் தேங்காய் பாலும் நன்றாக 3 லிருந்து 5 நிமிடங்கள் வரை கொதித்து, தேங்காய் பால் வற்றியதும், அடுப்பை உடனடியாக சிம்மில் வைத்து விட்டு, பிரியாணிக்கு மேலே ஒரு தட்டு போட்டு மூடி, பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும்.

kuska3

10 நிமிடங்கள் கழித்து உங்களுக்கு சாதம் சரியான அளவில் வெந்திருக்கும். அப்படி சாதம் வேக வில்லை என்றால், அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து நன்றாக சூடு செய்து, அதன் மேல் இந்த பிரியாணி பாத்திரத்தை வைத்து, மேலே காற்று வெளியே போகாதபடி இறுக்கமாக மூடி வைத்து விட்டால், அடுத்த 5 லிருந்து 7 நிமிடத்தில் பிரியாணி சூப்பராக ரெடி ஆகி இருக்கும்.

kuska5

இதையே குக்கரில் வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால் குக்கரில் செய்யும்போது 1 கிலோ அளவு பாஸ்மதி அரிசி 1 3/4 லிட்டர் தேங்காய் பால் போதுமானது. தண்ணீர் ஊற்றி செய்ய வேண்டும் என்றால் தண்ணீர் தேங்காய் பாலுடன் குறைந்த அளவே தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -