உங்கள் வீட்டு தோட்டத்தில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கிறதென்றால் இந்த ஒரு கரைசலை நீங்களே வீட்டில் தயார் செய்து செடிகளை நாசம் செய்யும் பூச்சிகளை அடியோடு அழித்து விடலாம்

plant
- Advertisement -

இப்பொழுதெல்லாம் பலரும் தங்கள் வீட்டு மாடியில் அல்லது இருக்கும் இடத்தில் அதற்கு ஏற்றார்போல் தோட்டம் அமைத்து செடிகளை வளர்த்து வருகின்றனர். ஆனால் அவர்கள் ஆசை ஆசையாக வளர்க்கும் செடிகளில் பூச்சியின் தாக்கம் ஏற்பட்டு விரைவில் அந்த செடிகள் இறந்துவிடுகின்றனர். இதற்காக பலவித ரசாயன மருந்துகளை பயன்படுத்தியும் பெரிய அளவில் பயன் ஏதும் கிடைப்பதில்லை. இதுபோன்ற பிரச்சினைக்காக நாம் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய ஒரு கரைசலை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

flower-garden

பெரும்பாலும் தோட்டத்தில் அதிக அளவில் இருப்பது பூச்செடிகளான மல்லி, ரோஜா, முல்லை போன்ற செடிகளும் காய்கறி வகைகளான அவரை, வெண்டை, தக்காளி, பச்சை மிளகாய் போன்ற செடிகளும் தான். அதுமட்டுமல்லாமல் பலரும் தங்களது தோட்டங்களில் கீரை வகைகளையும் வளர்த்து வருகின்றனர். இது போன்ற செடிகளில் தான் பூச்சிகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. செடிகளில் அதிகமாக வெள்ளை பூச்சிகள் அல்லது சிலந்தி வலை போன்ற பூச்சிகளே உருவாகின்றன.

- Advertisement -

இவ்வாறு பூச்சிகள் உருவாவதை ஆரம்பத்திலேயே பார்த்து விட்டோம் என்றால் அவற்றை முதலிலேயே அகற்றிவிட வேண்டும். வெள்ளை நிற பூச்சிகள் எப்போதும் செடிகளின் இலைகளுக்கு அடியில் தான் அதிகமாக இருக்கும். அப்போது அந்த இலைகளை மட்டும் முழுவதுமாக கிள்ளி எறிந்து விட வேண்டும். வலை போன்ற பூச்சிகள் காய்கறிகளின் காம்பு பகுதிகளில் தான் அதிகமாக காணப்படும். அந்த பகுதியில் இருக்கும் கிளைகளை மட்டும் உடைத்துவிட வேண்டும். இவ்வாறு கிளைகளை உடைப்பதால் செடி இன்னும் அதிகமாகத் தழைத்து வளருமே தவிர எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

plant1

அவ்வாறு இல்லாமல் பூச்சிகளின் தாக்கம் அதிகமாகிவிட்டது என்றால் நாம் வீட்டில் சமைப்பதற்காக பயன்படுத்தும் பொருட்களை வைத்தே இந்த பூச்சிகளை சுலபமாக அகற்றிவிடலாம்.

- Advertisement -

அதற்காக 50 கிராம் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு உடைக்காத முழு பூண்டு 3 எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக உடைத்து இஞ்சியுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு நான்கு பச்சைமிளகாயை உடைத்து இவற்றுடன் சேர்த்து கொண்டு அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ginger

பிறகு இதனுடன் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொண்டு இந்த கரைசலை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இதனை இன்னொரு முறை திக்கான வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டிக் கொண்டு அதனுடன் நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வந்த கோமியத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

plant-spray

பின்னர் இந்த கரைசலை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து நன்றாக குலுக்கி கொண்டு பூச்சி பாதித்த செடிகளின் இலைகளின் அடிப்புறம் படுமாறு நன்றாக தெளித்து விட வேண்டும். அதேபோல் காய்கறி செடிகளிலும் அதன் காம்பு பகுதிகள் முழுவதிலும் நன்றாக படுமாறு தெளித்து விட வேண்டும். இந்த கரைசலை செடியின் முழுப் பகுதியிலும் எந்தவித பயமும் இன்றி தெளித்து விடலாம். மாதம் ஒருமுறை இவ்வாறான கரைசலை நீங்களே உங்கள் வீட்டில் தயார் செய்து உங்கள் செடிகளுக்கு தெளித்து வருவதன் மூலம் பூச்சிகளினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உங்கள் செடிகள் அழியாதவாறு பார்த்துக்கொள்ளலாம்.

- Advertisement -