இனி கரப்பான்பூச்சி, பல்லி தொல்லையிலிருந்து நிரந்தர விடுதலை தான்‌. ஒரே ஒரு மூடி இந்த லிக்விடை சிங்க் ஓட்டையில் ஊற்றி விடுங்க போதும்.

palli
- Advertisement -

நம்முடைய சமையலறையில் பல்லி தொந்தரவு, கரப்பான் பூச்சி தொந்தரவு, வீட்டில் பீரோவுக்கு அடியில் கபோர்ட்டுக்கு அடியில் பல்லி தொந்தரவு, இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் சரி செய்வதற்கு ஒரு சுலபமான தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது பார்ப்பதற்கு சுலபமான ஐடியாவாக இருந்தாலும் 100% வொர்க் அவுட் ஆகும். நீங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து இந்த குறிப்பை தயார் செய்து விடலாம். அதிகமாக பணம் கூட செலவாகாது.

முதலில் 2 பூச்சி உருண்டையையும், 1 மாத்திரையையும் எடுத்து ஒன்றாக வைத்து, ஒரு இடிகல் கொண்டு நன்றாக தூள் செய்து நசுக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் காய்ச்சல் மாத்திரை எந்த மாத்திரையாக இருந்தாலும் இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். (குரோசின், ஃபெப்பானில், கால்பால் இப்படி எந்த காய்ச்சல் மாத்திரையாக இருந்தாலும் சரி.)

- Advertisement -

ஒரு சிறிய அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தூள் செய்து வைத்திருக்கும் மாத்திரை, பூச்சி உருண்டை பொடியை முதலில் போடுங்கள். அதன் பின்பு ஆப்ப சோடா – 1 டேபிள்ஸ்பூன், கம்ஃபோர்ட் – 1 டேபிள் ஸ்பூன் ஊற்றி, இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலந்து விட்டு 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் எல்லா பொருட்களையும் கரைத்து விடுங்கள். நமக்கு தேவையான இந்த லிக்விட் தயார். இதை ஒரு வாட்டர் கேனில் ஊற்றி வைத்தால் ஒரு மாதம் வரை கூட கெட்டுப் போகாமல் இருக்கும்.

இரவு தூங்கச் செல்லும்போது ஒரு மூடி அளவு இந்த லிக்விடை சிங்க் ஓட்டையில் ஊற்றி விடுங்கள். குளியலறையில் தண்ணீர் வெளியேறும் ஓட்டையில் ஊற்றி விடுங்கள். வாஷ்பேசனிலும் ஊற்றி விடுங்கள். இப்படி செய்தால் இரவு கரப்பான் பூச்சி வீட்டிற்குள் வராமல் இருக்கும். இந்த லிக்விடை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி சிங்குக்கு மேலே எல்லாம் தெளித்து விட வேண்டும். சிங்குக்கு அடி பக்கத்திலும் தெளித்து விட வேண்டும். இந்த வாசத்திற்கு பல்லி தொந்தரவும் இருக்காது. மறைந்து இருக்கக்கூடிய பல்லியும் வெளியே ஓடிவிடும்.

- Advertisement -

இதே போல உங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் பல்லி தொந்தரவு இருக்கிறதோ, அந்த இடத்தில் எல்லாம் இந்த ஸ்ப்ரேவை அடித்து விட வேண்டும். வாரத்தில் ஒரு நாள் போல இந்த ஸ்ப்ரேவை தொடர்ந்து அடித்து வர உங்கள் வீட்டு ஜாமான்களில் இடுக்குகளில் இருக்கும் சின்ன சின்ன பூச்சிகள் எல்லாம் செத்துப் போய்விடும். சொல்லப்போனால் சமையல் மேடை ஸ்லாப்புக்கு அடியில் சின்ன சின்ன சிலந்தி பூச்சிகள் எல்லாம் கூட இருக்கும். அவையெல்லாம் கூட இந்த ஸ்ப்ரேவில் செத்துப் போய்விடும். எறும்புகள் வராது. பொடி கொசுக்களும் வராது.

இதையும் படிக்கலாமே: நம்பவே முடியாத நச்சுன்னு 4 குறிப்பு. தேங்காய் உடைக்க அருவா வேண்டாம். அயன் பண்ண கரண்டும் வேண்டாமா? அது எப்படி?

கூடுமானவரை சிங்குக்கு அடியில் குப்பை கூடை வைப்பது, மற்ற தேவையில்லாத பொருட்களை போட்டு அடைத்து வைப்பது போன்ற தவறுகளை செய்யாதீங்க. அப்படி செய்தால் அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் பூச்சிகள் வந்து சேரத்தான் செய்யும். இந்த ஒரு லிக்விட் உங்கள் வீட்டு சமையல் அறையை பூச்சிகள் இல்லாத அறையாக மாற்றும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. எல்லாம் சிம்பிள் டிப்ஸ் தானே. ஒரே ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்களேன். ஒர்க் அவுட் ஆச்சுன்னா கரப்பான் பூச்சி பல்லி தொல்லையிலிருந்து விடுதலை.

- Advertisement -