நம்பவே முடியாத நச்சுன்னு 4 குறிப்பு. தேங்காய் உடைக்க அருவா வேண்டாம். அயன் பண்ண கரண்டும் வேண்டாமா? அது எப்படி?

thengai
- Advertisement -

நம்மால் நம்பவே முடியாத ஒரு சில வீட்டு குறிப்புகளை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இப்படியும் கூட குறிப்புகளை பின்பற்றலாமா என்ற ஆச்சரியம் நிச்சயம் உங்களுக்கு குறிப்பை படித்த உடன் வரும். உங்களுக்கு இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் மட்டும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். தேவை இல்லை என்றால் தவிர்த்து விடவும். வாங்க நேரத்தை கடத்தாமல் புத்தம் புதிய அந்த நான்கு குறிப்புகளை நாமும் தெரிந்து கொள்வோம்

பொதுவாகவே வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தேங்காய் உடைப்பது என்பது கொஞ்சம் கடினமான வேலை. முழு தேங்காயை எடுத்துக்கோங்க. அதன் மேலே இருக்கும் நாரை மொத்தமாக நீக்கி சுத்தம் செய்து விடுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி இந்த தேங்காயை ஐந்து நிமிடம் அந்த தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். ஊறிய தேங்காயை எடுத்து பார்த்தீர்கள் என்றால் மூன்று கண்ணுக்கு பக்கத்தில் மூன்று கோடு போல தெரியும். அந்த கோட்டின் மேலே இஞ்சி பூண்டு இடிக்கும் சிறிய உரல் கல்லை வைத்து அடித்தாலே தேங்காய் உடனடியாக சரிபதியாக உடைந்து விடும். (சந்தனம் உரசும் கல் அல்லது பூண்டு நசுக்கும் கல் எந்த கல்லை பயன்படுத்தி வேண்டும் என்றாலும் தேங்காயை சுலபமாக உடைத்து விடலாம்.)

- Advertisement -

இதில் இன்னொரு மெத்தெடும் உள்ளது. முழு தேங்காயை சுத்தமாக கழுவி விடுங்கள். மேலே இருக்கும் குடிமி தூசுகளை சுத்தமாக பிரித்து எடுத்து விட்டு, தண்ணீரில் ஒரு முறை நன்றாக கழுவி விட்டு ஒரு கவரில் போட்டு ஃப்ரீசரில் 10 மணி நேரம் வைத்து விடுங்கள். எடுத்த தேங்காயை லேசாக ஒரு சுத்தியலை வைத்து அடித்தாலே ஓடு தனியாக பிரிந்து வந்துவிடும்.

உள்ளே இருக்கும் தேங்காய் கொப்பரை தேங்காய் போல முழுதாக நமக்கு கிடைக்கும். மேலே இருக்கும் பிரவுன் கலர் தோலை சீவி விட்டு இந்த தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மாடியில் இரண்டு ஓட்டு ஓட்டினால் சூப்பரான தேங்காய் துருவல் தயார். இதை மீண்டும் காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரீசரில் வைத்தால் மூன்று மாதங்கள் வரை கெட்டுப் போகது.

- Advertisement -

அடுத்த குறிப்பு. அயன் பண்ணும் நேரம் பார்த்து பவர் கட் ஆகிவிடும். என்ன செய்வது. ஐயன் பாக்ஸுக்கு மேலே இருக்கும் ஒயரை முதலில் நன்றாக சுற்றி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வையுங்கள். மிதமான தீயில் அடுப்பை வைத்து விட்டு, இந்த அயன் பாக்ஸின் அடிப்பகுதியை, ஸ்டவில் நெருப்பில் காட்ட வேண்டும். லேசாக காட்ட வேண்டும். ரொம்பவும் நெருப்பில் கொண்டு போய் அயன் பாக்ஸை வைத்து விடக்கூடாது. அயன் பாக்ஸின் அடிப்பக்கம் லேசாக சூடானதும் அந்த அயன் பாக்ஸை கொண்டு சுருக்கமான துணியை தேய்த்தால் சுருக்கம் சுலபமாக நீங்கிவிடும். இந்த குறிப்பை ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக பின்பற்ற வேண்டும். (பயம் உள்ளவர்கள் இந்த குறிப்பு ட்ரை பண்ணாதீங்க.)

அடுத்ததாக நம்முடைய வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் உடல்நிலை சரியில்லாத போது ஏதாவது தண்ணீர் மருந்தை வாங்கி வாங்கி வீட்டில் வைப்போம். அதாவது டானிக். அந்த மருந்து எக்ஸ்பியர் ஆகிவிட்டாலும் அல்லது நீண்ட நாட்களாக குடிக்காமல் வீட்டில் அப்படியே இருந்தாலும் அதை தூக்கி குப்பையில் போடாதீங்க. கொஞ்சமாக நைசாக இருக்கும் செம்மண்ணை எடுத்துக்கோங்க. அந்த செம்மண்ணில் இந்த மருந்தை ஊற்றி பேஸ்ட் போல கலக்கிக்கோங்க.

- Advertisement -

இந்த பேஸ்டை கருப்பான வெள்ளி பாத்திரத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவிட்டு, லேசாக தேய்த்து கழுவினால் வெள்ளிப் பாத்திரம் பளபளப்பாக உடனடியாக புதுசு போல மாறும். வெள்ளி விளக்கு கொலுசு எதை வேண்டுமென்றாலும் இப்படி சுத்தம் செய்யலாம். (குறிப்பா குழந்தைகள் இருக்கும் வீட்டில் நிறைய syrup பாட்டில் இருக்கும்.)

இதையும் படிக்கலாமே: வீணாக கீழே தூக்கி போடும் எலுமிச்சை பழ தோலை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க அது என்னனு தெரிஞ்சுக்கலாம்.

அவசரத்தில் சமைக்கும் போது புளியை தண்ணீரில் போட்டு முதலிலேயே ஊற வைக்க மறந்து விட்டீர்களா. கவலை வேண்டாம். ஒரு மிக்சி ஜாரை எடுங்க அதில் தேவையான அளவு புளியை போடுங்க. வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி ஒரு ஓட்டு ஓட்டுங்க. தேவையான புளிக்கரைசல் தயாராகிவிடும். ரொம்பவும் கொதிக்கின்ற தண்ணீரை மிக்ஸி ஜாரில் ஊற்றி அரைத்தால் மேலே தெரிந்து விடும். ஜாக்கிரதை வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றித்தான் இந்த டிப்ஸ் முயற்சி செய்யணும். அதேபோல் புளிக்கொட்டையோடு மிக்ஸி ஜாரில் போட்டு ஓட்டக்கூடாது.

- Advertisement -