பொடுகு வந்து தலையெல்லாம் செதில் செதிலாக உதிர்ந்து வருபவர்கள் கூட, இதை பயன்படுத்தினால் பொடுகு காணாமல் போவதுடன் மறுபடியும் வரவே வராது.

- Advertisement -

இந்த பொடுகு வந்து விட்டால், எவ்வளவு நீளமான, அழகான முடி இருந்தாலும் கூட முடிகள் கொத்து கொத்தாக கொட்டுவதோடு இல்லாமல், இந்த பொடுகு முகத்தின் அழகையும் சேர்த்து பாதித்து விடுகிறது. இதனால் அழகான முகம் கூட பார்க்கவே அசிங்கமாக இருக்கும். இந்த பொடுகு அதிகரிக்க முக்கிய காரணம் கெமிக்கல் கலந்த ஷாம்புகளை பயன்படுத்துவது, தலைக்கு எண்ணெய் தேய்த்த பிறகு அதை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவை தான். இப்பொழுது பொடுகை மிகவும் எளிமை போக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த பொடுகு வராமல் இருக்க வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கட்டாயமாக தலைக்கு குளிக்க வேண்டும். தலைக்கு குளிக்கும் போது முடிந்த அளவுக்கு கெமிக்கல் குறைந்த அளவில் இருக்கும் ஷாம்புகளை பயன்படுத்தினால் நல்லது. சீயக்காய் அரைத்து தேய்த்து குளித்தால் மிகவும் நல்லது, இன்றைய காலகட்டத்தில் அதை அனைவராலும் செய்ய முடியாது. எனவே முடிந்த அளவிற்கு பொடுகு வராமல் இருக்க குறைந்த அளவு கெமிக்கல் கலந்த ஷாம்புகளை பயன்படுத்துங்கள். இவை அனைத்திலும் மிக முக்கியமான ஒன்று சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்பொழுது கடைகளில் கிடைக்கும் எண்ணெய்கள் சுத்தமாக இருப்பதில்லை. செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் போது,பொடுகு வராமல் தடுப்பதோடு முடி சம்பந்தமான பல பிரச்சனைகளை வராமல் இது தடுத்து விடும்.

- Advertisement -

இப்பொழுது பொடுகை சரி நாம் செய்ய செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை மூன்று ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து எடுத்து கொள்ளுங்கள், அதன் பிறகு அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை நீங்கள் தலையில் தேய்த்து பிறகு அரை மணி நேரம் உங்கள் தலையில் அப்படியே ஊற வேண்டும். சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் இதை தலையில் தேய்த்து பத்து நிமிடத்திற்கு மேல் வைத்திருக்க வேண்டாம்.

இதில் சேர்க்கப்படும் தேங்காய் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். எலுமிச்சை சாறு முடி வலுவானவுடன் மூடியை நல்ல முறையில் பராமரிக்கவும் பயன்படும். மேலும் இதில் சேர்க்கப்படும் தயிர் பொடுகு நீக்குவதுடன் தலைக்கு ஒரு நல்ல கண்டிஷனர் போலவும் செயல் படும். இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து தலைக்கு தேய்க்கும் போது பொடுகு மறைவதுடன் முடி நல்ல நீளமாகவும் வளரும்.

- Advertisement -

இந்த முறையில் வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயமாக தேய்த்து விடுங்கள். பொடுகு குறைய குறைய அதற்கு ஏற்ப வாரத்திற்கு ஒரு நாள், 15 நாட்களுக்கு ஒரு நாள் என்று குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதிக பொடுகு உள்ளவர்கள் வாரத்துக்கு இரண்டு முறை கட்டாயமாக இதை தேய்த்து குளித்தால் தான் பொடுகு மறையும்.

இதையும் படிக்கலாமே: வெறும் ஐந்தே நிமிடத்தில் அழகான அழகை கொடுக்கும் எளிமையான 5 குறிப்புகள் இதோ உங்களுக்காக.

இந்த முறையை தவறால் செய்து வரும் போது பொடுகு மறைந்து உங்கள் தலைமுடி நன்றாக வளரும். அது மட்டும் இல்லாமல் பொடுகு தொல்லையால் ஏற்படும் உங்கள் சரும பிரச்சினை கூட சரியாகி விடும்.

- Advertisement -