1 கப் அவல் இருந்தால் போதும். 10 நிமிடத்தில் சுவையான இந்த கிரிஸ்பி ஸ்னாக்ஸ் ரெடி.

aval-finger
- Advertisement -

அவல் வைத்து ஆரோக்கியமான ஒரு ஃபிங்கர் சிப்ஸ் ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த ஸ்னாக்ஸை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிக மிக விருப்பமாக சாப்பிடுவார்கள். எப்போதும்போல வடை, போண்டா, பஜ்ஜி இவைகளை தவிர்த்து விட்டு வித்தியாசமாக இப்படியும் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை ட்ரை பண்ணித்தான் பார்ப்போமே.

முதலில் 1 கப் அளவு லேசான அவலை ஒரு முறை நன்றாகக் கழுவி விட்டு, 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அவல் கையில் எடுத்தால் சாப்டாக மசியும் அளவிற்கு ஊறவேண்டும். ஊறிய பின்பு அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இருக்கக் கூடாது. ஊறிய அவல் தனியாக ஒரு பௌலில் அப்படியே இருக்கட்டும். (ரொம்பவும் தண்ணீர் ஊற்றி தளதளவென அவலை ஊற வைத்து விட்டால் இந்த ஸ்னாக்ஸ் சரியான பக்குவத்தில் கிடைக்காது.)

- Advertisement -

அடுத்தபடியாக 1/2 கப் அளவு கடலை மாவை கடாயில் 2 லிருந்து 3 நிமிடங்கள் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த கடலை மாவும் அப்படியே இருக்கட்டும்.

ஒருசிறிய தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, இந்த பொருட்களை போட்டு தாளித்து கொள்ள வேண்டும். இப்போது தாளிப்பு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

தயாராக ஊறியிருக்கும் அவல் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த இந்த அவலில் முதலில் தாளிப்பு கரண்டியில் இருக்கும் தாளிப்பை போட்டுவிடுங்கள். அதன் பின்பு வறுத்த கடலைமாவை போட்டுக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு, சாட் மசாலா – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு உங்கள் கையை கொண்டு இந்த மாவை அழுத்தம் கொடுத்து நன்றாக பிசைய வேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்ற தேவை கிடையாது.

சப்பாத்தி மாவை விட கொஞ்சம் கெட்டியாக இந்த மாவை பிசைந்து கொண்டு, உங்கள் கையில் எண்ணெய் தடவி சிறு சிறு பாகங்களாக இந்த மாவை எடுத்து உருட்டி ஃபிங்கர் சிப்ஸ் போல வடிவத்தை கொண்டு வரவேண்டும். எல்லா மாவையும் இப்படி நீளவாக்கில் உருட்டி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் இந்த நீளவாக்கில் உருட்டபட்ட எல்லா மாவையும் போட்டு பக்குவமாக பொன்னிறம் வரும் வரை பொரித்து எடுத்தால், சூப்பரான கிறிஸ்டியானோ ‘போகா பிங்கர் சிப்ஸ்’ தயார். குழந்தைகளுக்கு டொமேட்டோ சாஸ் உடன் இதை சாப்பிடக் கொடுத்தால் ஒன்று கூட மிச்சம் வைக்க மாட்டார்கள். உங்களுக்கு இந்த புதுவிதமான ரெசிபி பிடித்திருக்கா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -