தைப்பொங்கல் அன்று வாங்க வேண்டிய மங்களப் பொருட்கள்

pongal3
- Advertisement -

பொங்கல் வழிபாடு செய்வதற்கு தேவையான பொருட்களின் பட்டியலை போட்டாலே அதில் எல்லாவிதமான மங்களப் பொருட்களும் சேர்ந்து வந்துவிடும். மஞ்சள், குங்குமம், மஞ்சள் கொத்து, கரும்பு, மாவிலை தோரணம், பச்சரிசி, வெல்லம், பசு நெய், முந்திரி திராட்சை, ஏலக்காய் இவையெல்லாம் மங்கல பொருட்கள் தான்.

இதனால் நீங்கள் பெருசாக மங்களப் பொருட்கள் என்று தனியாக வாங்க எதுவும் இருக்காது. ஆனால் பொங்கலுக்கு கரும்பை எதற்காக வைத்து வழிபாடு செய்கின்றோம் என்று நாம் என்றைக்காவது யோசித்துள்ளமா. எல்லோரும் கரும்பு வச்சி கும்பிடுறாங்க. எங்க தாத்தா பாட்டி கரும்பு வச்சி கும்பிட்டாங்க. நாங்களும் வைக்கிறோம் அப்படிதானே.

- Advertisement -

ஆனால் இந்த கரும்பு வைப்பதற்கு பின்னால் என்ன விஷயம் மறைந்திருக்கிறது. பொங்கல் வழிபாடு செய்ய இந்த மஞ்சள் கரும்பு இதையெல்லாம் எப்போது கடைக்கு சென்று வாங்கணும். பொங்கல் வைக்கும் மண் பானையை எப்போது கடைக்கு சென்று வாங்கணும். ஆன்மீகம் சார்ந்த சில அரிய தகவல்கள் இந்த பதிவில் உங்களுக்காக.

பொங்கல் அன்று வாங்க வேண்டிய மங்களப் பொருட்கள்

கரும்பு இல்லாமல் பொங்கல் இல்லை. பொங்கல் இல்லாமல் கரும்பு இல்லை என்றே சொல்லலாம். இந்த கரும்புக்கு ஒரு அபரிவிதமான சக்தி இருக்கிறது. அந்த கரும்புடைய ஒரு கணு இருக்கிறது அல்லவா, அந்த கணுவை வெட்டிவிட்டு மண்ணில் நட்டு, புதைத்து வைத்தால் மீண்டும் ஒரு புதிய கரும்பு வளருமாம். கிட்டத்தட்ட இது வாழைமரம் போல தான். இனிப்பு வகையை சேர்ந்தது.

- Advertisement -

கரும்பின் கீழ் பகுதி, சின்ன வேர் கணு பகுதியை வெட்டி மண்ணில் புதைத்தாலும் வளரக்கூடியது. ஆக இனிப்பான விஷயம் செழிப்பாக வளருவதால் நம்முடைய குடும்பமும் இதே போல வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக இந்த கரும்பை நாம் பொங்கல் பண்டிகை என்று வைத்து வழிபாடு செய்கின்றோம்.

பொங்கல் வழிபாடு செய்ய மஞ்சள் கொத்து கரும்பு இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் கூடுமானவரை தை 1 ஆம் தேதி அதிகாலை வேலையிலேயே கடைக்க சென்று வீட்டுக்கு வாங்கி வாருங்கள். இன்னும் சொல்லப்போனால் பொங்கல் வைக்க பச்சரிசி வெல்லம் முந்திரி திராட்சை இவையெல்லாம் கூட மங்கலம் கொடுக்கக்கூடிய பொருட்கள் தானே. இதையெல்லாம் நீங்கள் தை திருநாள் அன்று அதிகாலை வேலையிலேயே சந்தை போடப்படும் போது, அந்த சந்தைக்கு போய் காசு கொடுத்து தைத்திருநாள் அன்று இந்த மங்களப் பொருட்களை காசு கொடுத்து வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

சில பேருக்கு இதுக்கு வாய்ப்பு இருக்காது. முந்தைய நாள் இரவே வாங்கி வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அப்படி இருந்தால் எல்லா பொருட்களையும் வாங்கி, நிலை வாசலுக்கு வெளியே இடம் இருக்கும் பட்சத்தில் அங்கே வச்சுக்கோங்க. தை 1 ஆம் தேதி அதிகாலை குளித்து முடித்துவிட்டு இந்த பொருளை வீட்டிற்கு கொண்டு வந்தாலும் அதிர்ஷ்டம் தான். முந்தைய நாள் வாங்கி வீட்டுக்குள் தான் வைக்கணும். அப்படி என்றாலும் தவறு கிடையாது. வாய்ப்பு உள்ளவர்கள் மட்டும் மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றலாம்.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்க போகியில் கொளுத்த வேண்டிய 5 பொருள்

ஆனால் பொங்கல் வைக்கும் பொங்கல் பானையை மட்டும் தைத்திருநாள் அன்று வாங்க கூடாது. முந்தைய நாள் போகி பண்டிகை அன்று வாங்குவதுதான் சிறப்பானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த தைத்திருநாளில் மஞ்சள் கரும்பு வெல்லம் ஏலக்காய் பச்சரிசி பசு நெய் இவையெல்லாமே மங்களப் பொருட்கள். இதோடு சேர்த்து கல் உப்பு வாங்கி வருவது நம்முடைய குடும்பத்திற்கு சுபிட்சத்தை தரும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -