தரித்திரம் நீங்க போகியில் கொளுத்த வேண்டிய 5 பொருள்

bogi2
- Advertisement -

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற விடியலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றோம். மார்கழி மாதத்தின் கடைசி நாளான இந்த போகிப் பண்டிகையில், நம்முடைய கஷ்டங்களை எல்லாம் நெருப்பில் போட்டு பொசுக்கி தைத்திருநாளை வரவேற்கலாம். நாளைய தினம் போகி கொளுத்தக்கூடிய சரியான நேரம் எது.

நம் வீட்டில் தரித்திரத்தை கொடுக்கும் எந்தெந்த பொருட்களை எல்லாம் போகி நெருப்பில் போடணும். எந்தெந்த பொருட்களை எல்லாம் போகி நெருப்பில் போடக்கூடாது, என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

போகியில் போட வேண்டிய பொருட்கள்

கூடுமானவரை நாளைய தினம் அதிகமாக புகை போடுவதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். காரணம், நம் சுற்றுச் சூழல் மாசுபாடு அதிகமாக கூடாது என்பதற்காக. சாஸ்திரத்திற்காக சில விஷயங்களை நாம் மாற்றக்கூடாது. சில ஊர்களில் போகி கொளுத்தவே மாட்டார்கள். சில ஊர்களில் போகி கொளுத்தும் வழக்கம் இருக்கும்.

உங்களுடைய ஊரில் போகி கொளுத்த வில்லை என்றால் பரவாயில்லை. தவறு கிடையாது. ஆனால் போகி அன்று கட்டாயமாக உங்களுடைய வீட்டை சுத்தப்படுத்தி, தேவையற்ற பொருட்களை வீட்டிலிருந்து அகற்றி விட வேண்டும். அதை மட்டும் மறந்துடாதீங்க. நாளைய தினம் ஜனவரி 14-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணியிலிருந்து 4.30 மணிக்குள் போகி கொளுத்தி முடித்திருக்க வேண்டும்.

- Advertisement -

இந்த போகியில் என்னென்ன பொருட்களை போட்டு எரிப்பது. நாம் பயன்படுத்திய பழைய பாய், பழைய செருப்பு, போடவே முடியாத பழைய துணி, பழைய துடைப்பம், பழைய முறம், பழைய காலண்டர் அட்டைகள் இந்த பொருட்களை எல்லாம் போகி நெருப்புக்கு போடலாம். இந்த பொருட்களில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் அதை கட்டாயம் நெருப்பில் போடக்கூடாது.

பிளாஸ்டிக் செருப்பு, பிளாஸ்டிக் துடைப்பம், பிளாஸ்டிக் முறம், பிளாஸ்டிக் பாய், இதையெல்லாம் கொண்டு போய் நெருப்பில் போடாதீங்க. போகி கொண்டாடும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக கொண்டாடுங்கள். நிறைய பொருட்கள் எரித்து, அதிகமாக தீ மூட்டி, அந்த தீ மற்ற இடத்தில் பரவி விட்டால் அது நமக்கு பிரச்சனைகளை கொடுத்து விடும் ஜாக்கிரதை.

- Advertisement -

அந்த காலத்தில் குடிசை வீடு இருக்கும். அப்போது பழைய ஓலையை புதுப்பித்து, இந்த தைத்திருநாளுக்கு தான் புது ஓலையை பின்னுவார்கள். அப்போது பழைய ஓலைகளை எல்லாம் நெருப்பில் போட்டு போகி கொளுத்துவது வழக்கமாக இருக்கும். அந்த மாசு நமக்கு என்ன வகையிலும் பாதிப்பை கொடுக்காது.

இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களிலும் ஏதோ ஒரு கெமிக்கல் கலந்து இருப்பதால், அது நெருப்பில் எரிந்து காற்றோடு காற்றாக கலந்து அதை சுவாசிக்கும் போது நமக்கு தீங்கை கொடுத்து விடுகிறது. காற்று மாசு அடைகிறது. ஆகவே இந்த போகி பண்டிகையை நீங்கள் ஆரோக்கியமாக கொண்டாட, நீங்கள் கொளுத்தும் பொருட்களில் அதிக கவனத்தை செலுத்துங்கள்.

இறுதியாக ஒரு முக்கிய விஷயம் போகிப் பண்டிகையில் எரியக்கூடிய நெருப்பில் நாம் போட்டு பொசுக்க வேண்டிய பொருட்களின் பட்டியலில் மறக்காமல் இதையும் சேர்த்துக்கோங்க. நம் மனதில் இருக்கும் அழுக்கு, பொறாமை, கெட்ட குணம், ஈகோ, வன்மம், அடுத்தவர்கள் மீது இருக்கும் கோபதாபங்கள், வீண் பிடிவாதம், இவைகளை எல்லாம் இந்த நெருப்போடு நெருப்பாக பொசிக்கிவிட்டால் தை பிறந்தால் நிச்சயம் நமக்கு நல்ல காலம் பிறந்து விடும்.

இதையும் படிக்கலாமே: குரு பார்வை உங்கள் மேல் விழ செல்ல வேண்டிய கோவில்

பிரச்சனைகள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை கொளுத்தும் போகி நெருப்போடு நெருப்பாக பொசுங்கிவிடும் என்ற இந்த தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -