தைப்பொங்கல் அன்று பெண்கள் பின்பற்ற வேண்டியவை

pongal4
- Advertisement -

தைப்பொங்கல் அன்று எல்லோரும் புத்தாடை அணிந்து கொள்வது நம்முடைய வழக்கம் தான். அதில் என்ன பெண்களுக்கு மட்டும் ஸ்பெஷல் என்று சில பேர் கேட்கலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் தான் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் தான் மகாலட்சுமி அம்சம் கொண்டவர்கள். அவர்கள் சில விஷயங்களை பின்பற்றும்போது அந்த குடும்பத்திற்கே நல்லது நடக்கும். அந்த வகையில் நாளைய தினம் பொங்கல் திருநாள் அன்று பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பொங்கல் அன்று பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயம்

நாளை முடிந்தவரை ஒரு புது மண் பானையில் பொங்கல் வைக்கலாம். மண்பானையில் பக்குவமாக பொங்கல் வைக்க தெரியாது என்பவர்கள் கற்றுக் கொள்ளுங்கள். வாய்ப்பே இல்லை மண்பானையில் வைக்கக்கூடிய அளவுக்கு எங்களுக்கு அனுபவம் இல்லை என்பவர்கள் ஒரு பித்தளை சொம்பிலாவது பொங்கல் வைப்பது நல்லது.

- Advertisement -

அதுவும் இல்லை என்பவர்கள் சில்வர் சொம்பில் மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து அதற்கு மஞ்சள் கொத்து கட்டி கூடுமானவரை பாரம்பரியத்தை பின்பற்றுங்கள். இதற்கெல்லாம் வழியே இல்லை என்பவர்கள் மட்டும் குக்கரில் பொங்கல் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக குக்கரில் பொங்கல் வைத்தால் தவறா என்று கேட்க வேண்டாம். தவறு கிடையாது. முடிந்தவரை முன்னோர்கள் சொன்னதை பின்பற்றுவோமே.

அடுத்ததாக பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் வைப்பது சிறப்பு. கூடவே சேர்த்து பொங்க சோறு வைப்பதும் சிறப்பான பலனை கொடுக்கும். எல்லா காய்கறிகளும் போட்ட கூட்டுக்கறி சில பேர் வீடுகளில் செய்வது வழக்கமாக இருக்கும் அதையும் மறந்துடாதீங்க.

- Advertisement -

அடுத்து பெண்கள் கூடுமானவரை நாளைய தினம் புடவை அணிந்து கொள்வது சிறப்பான பலனை தரும். அதிலும் காட்டன் புடவையை நாளைய தினம் அணிந்து கொண்டால் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நல்லதுங்க. இந்த பொங்கலுக்கு காட்டன் புடவையை உடுத்தி பொங்கல் பண்டிகை கொண்டாடி தான் பாருங்களேன் என்ன நடக்கிறது என்று. அதிர்ஷ்ட காத்து நிச்சயம் உங்களுக்கு அடிக்கும். நிச்சயம் நல்லது நடக்கும். அதிலும் குறிப்பாக ஆரஞ்சு நிறம் பச்சை நிறம் இந்த நிறத்தில் புடவை உடுத்திக் கொள்வது நல்லது.

அடுத்து பொங்கல் அன்று நீங்க உங்களுக்குத் தெரிந்தவர்கள் சொந்த பந்தங்கள் இவர்களுக்கு எல்லாம் உங்களால் முடிந்த காசை கொடுக்கணும். சித்தப்பா பசங்க, பெரியப்பா பசங்க, மாமா பிள்ளைகள் இன்னும் சில சொந்தங்களின் பிள்ளைகள் எல்லாம் இருப்பார்கள். பொங்கல் என்றாலே உறவுகள் வீட்டிற்கு செல்வோம் அல்லவா. அப்படி செல்லும் போது அந்த குழந்தைகளுக்கு, அங்கு இருக்கும் உங்களுடைய உறவுகளுக்கு உங்கள் கையால் முடிந்த பொங்கல் காசை கொடுங்கள்.

- Advertisement -

11 ரூபாய் கொடுத்தால் கூட போதும். ஆயிரம் ரூபாயை, பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். மனத்திற்கு பிடித்தவர்களுக்கு இந்த காசை கொடுங்க. இந்த காசு எல்லாம் பல மடங்காக உங்களுக்கு வருமானமாக திரும்பும் என்பது நம்பிக்கை. இதுதான் பொங்க காசு, மனசில் சந்தோஷத்தி பொங்கி வழிய வைக்க கூடிய காசு.

இதையும் படிக்கலாமே: வல்லாரைக் கீரை அழகு குறிப்பு

அதே மாதிரி வீட்டில் இருக்கும் ஆண்களுக்கும் சில கடமைகள் இருக்கிறது. உங்களுடைய உடன் பிறந்தவர்களுக்கு புடவை எடுத்துக் கொடுக்கணும். இந்த விஷயத்தில் கணக்கு பார்க்காதீங்க. உங்க தகுதிக்கு ஏற்றவாறு உங்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு உங்கள் கையால் புடவை வாங்கிக் கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் இந்த பொங்கலை உங்களுக்கு இன்னும் சிறப்பாக்கி தரும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -