பொங்கல் ஸ்பெஷல்! பல காய்கறி சேர்ந்த குழம்பை ருசியாக எப்படி வைக்கணும்னு உங்களுக்கு தெரியாதா? இன்னைக்கு மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

நாளை பொங்கல்! எப்பவும் போல சமைக்காமல், கொஞ்சம் வித்தியாசமாக மதிய சமையலுக்கு பல காய்கறிகளை சேர்த்து சமைக்க வேண்டும். சில பேரின் வீட்டில், இந்த காய் குழம்பை பாரம்பரியமாக, வழிவழியாகப் பொங்கல் அன்று கட்டாயம் சமைக்கும் வழக்கம் இருக்கும். 5 காய்கறிகள் காய்கறிகள், 7, 9 காய்கறிகள், 11 காய்கறிகள் வரை கூட சேர்த்து இந்த குழம்பை செய்யலாம். இன்று 9 காய்கறிகளை வைத்து பொங்கல் குழம்பு எப்படி வைப்பது என்பதைப் பற்றித்தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pongal-kuzhambu

குழம்புக்கு தேவையான காய்கறிகள்:
வெள்ளை பூசணி, பரங்கி காய், அவரைக்காய், மொச்சை காய், கத்தரிக்காய், மாங்காய், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முருங்கைக்காய் (இந்த காய்கறிகளில் வெள்ளை பூசணிக்காய், பரங்கிக்காய் அவசியமாக இருக்க வேண்டும். மற்ற காய்கறிகளை வேண்டுமென்றால் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.) எல்லா காய்கறிகளும் சேர்த்து 1 கிலோ அளவு வரும்வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த காய்களை எல்லாம், தோல் சீவி, கொஞ்சம் பெரிய சைஸில் வெட்டி கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது கொஞ்சம் பெரிய அளவு குக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் எண்ணெய் ஒரு குழிகரண்டி அளவு ஊற்றி, சூடானதும், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், பெருங்காயம், தாளிக்க வேண்டும். இவையெல்லாம் பொருளில் இருந்து 1/2 ஸ்பூன் அளவு தாளித்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் பொரிந்தவுடன் சின்னவெங்காயம் 15 பல், பூண்டு 6 பல், கருவேப்பிலை, பச்சை மிளகாய் 2, பழுத்த தக்காளி 2, இவைகள் அனைத்தையும் காய்களுக்கு தகுந்தத அளவு போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

pongal-kuzhambu2

அடுத்தப்படியாக நறுக்கி வைத்திருக்கும் காய்கள் ஒவ்வொன்றாக குக்கரில் சேர்த்து விடவேண்டும். மாங்காயை மட்டும் சேர்க்க வேண்டாம். இறுதியாக போட்டுக்கொள்ளலாம். இப்போது குழம்புக்கு தேவையான உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் பொடியை போட்டு ஒரு வதக்கு வதக்கி, குழம்புக்கு தேவையான தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி ஒரே ஒரு விசில் விட்டால் போதும். காய்கறிகள் அனைத்தும் வெந்திருக்கும். தண்ணீரை நிறைய ஊற்றக் கூடாது.

- Advertisement -

ஒரு விசில் வந்ததும், குக்கரை திறந்து நன்றாக ஒரு முறை கிளறி விட்டு, குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து தனியாக எடுத்து வைத்திருக்கும் மாங்காய் துண்டுகளையும் இதில் சேர்த்து விடுங்கள். இறுதியாக 100 கிராம் அளவு வேகவைத்த துவரம் பருப்பை கடைந்து இந்த குழம்பில் சேர்க்க வேண்டும். அதன் பின்பு கொஞ்சமாக, அதாவது எலுமிச்சை பழம் அளவு, புளியை ஊற வைத்து கரைத்து, ஊற்றி குழம்பு தளதளவென கொதித்து கட்டியாக வர வேண்டும். புளியின் பச்சை வாடை நீங்க வேண்டும்.

pongal-kuzhambu3

குழம்பில் பருப்பு நிறைய இருக்கக்கூடாது. குழும்பில் காய்கறிகள் தான் அதிகமாக இருக்க வேண்டும். பருப்பு குறை வாகத்தான் இருக்க வேண்டும். இந்த குழம்பு கூட்டு பக்கத்தில் வைத்தால் சுவை அதிகமாக இருக்கும். அந்த காலத்தில் இந்த குழம்பை நிறைய வைத்து அடுத்த நாள் வரை எடுத்து வைத்து சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதாவது பொங்கல் தினம் மதியம் சாப்பிட்டு விட்டு மீதம் இருக்கும் குழம்பை அடுப்பில் வைத்து சுண்டவைத்து, சுண்ட குழம்பாக அடுத்த நாள் சாப்பிடுவார்கள். அதன் ருசி இன்னும் அதிகமாக இருக்கும். உங்க வீட்ல இந்த பொங்கலுக்கு ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
இந்த பொங்கலுக்கு உங்க வீட்டில சர்க்கரைப் பொங்கலை இப்படி செஞ்சு பாருங்க! ருசியும் மணமும் சுவையும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.