பொங்கல் வாழ்த்துகள் 2023 | Pongal wishes in Tamil
Pongal wishes in Tamil 2023 : பொங்கல் திருநாள் என்பது உழவர்களுக்காகவும், உழவுக்கு தோள் கொடுத்து உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானுகாவும், உழவன் தன் உயிர் போல நினைக்கும் மாடுகளுக்காகவும் கொண்டபப்படும் ஒரு உன்னதமான விழாவாகும். போகி, பெரும் பொங்கல் ( Pongal wishes in Tamil ), மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டப்படும் இவ்விழாவில் உலகெங்கும் உள்ள தமிழ் குடும்பங்கள் புத்தாடைகள் அணிந்து, பொங்கலிட்டு, மற்றவர்களிடம் தங்களது அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வது வழக்கம். ஆனால் சில காரணங்களால் ஒரு சிலரால் நேரில் பொங்கல் வாழ்த்துகள் (Pongal valthukkal 2023) கூற முடியாத ஒரு சூழல் இருக்கும். அப்படி பட்டவர்கள் தங்கள் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பக்கூடிய அற்புதமான பொங்கல் வாழ்த்துக்கள் 2023 இதோ உங்களுக்காக.
2023 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் பொங்கல் பண்டிகை என்பது ஜனவரி 15 ஆம் தேதி வருகிறது. இந்த நன்னாளில் மக்கள் அனைவரும் கூடி கரும்புகளை சுவைத்து, புதுப்பானையில் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் என்றாலே கிராமங்களில் ஒரு தனி கொண்டாட்டமாக இருக்கும். வீட்டை வெள்ளை அடித்து, வாசலை நன்கு அலங்கரித்து பொங்கல் கோலமிட்டு உணர்வு பூர்வமாக கொண்டாடக்கூடிய ஒரு நன்னாளாக பொங்கல் திருநாள் திகழ்கிறது. இந்த பொங்கல் திருநாளுக்குரிய பொங்கல் வாழ்த்துகள் 2023 ( Pongal valthukkal) இதோ.
Pongal wishes in Tamil 2023

இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal 2023 wishes in Tamil

கரும்பின் சுவை போல
உங்கள் வாழ்க்கை என்றென்றும்
தித்திக்கட்டும்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் 2023

பழைய தீமைகள் அகன்று
புதிய நன்மைகள் சேர்ந்திட
போகி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal valthukkal Tamil text

Happy Pongal 2023

வளமும் நலமும் பொங்கிட
அன்பும் பண்பும் பெருகிட
உறவும் நட்பும் கூடிட
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal nal valthukal in Tamil 2023 – பொங்கல் வாழ்த்துக்கள் 2023

ஊருக்கே சோர்போடும் உழவனுக்கும்
உலகுக்கே ஒளியேற்றும் கதிரவனுக்கும்
நன்றி கூறி கொண்டாடுவோம்
இந்த திருநாளை.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Happy pongal 2023

பொங்கல் வாழ்த்துக்கள் 2023

நல்லதொரு வாழ்வு பொங்கிட
அஷ்ட லட்சுமிகளும் இல்லத்தில் தங்கிட
இந்நாளை போல எந்நாளும் தித்தித்திட
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் 2023 வாழ்த்துக்கள்

அறிவு தங்க, அன்பு பொங்க
நேர்மை தங்க, வளமை பொங்க
வலிமை தங்க, இனிமை பொங்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal 2023 wishes in Tamil

புத்தாடையில் ஜொலித்திட
புத்தரிசியில் பொங்கலிட
உழவனை கொண்டாட
தமிழனாய் தலை நிமிர்ந்திட
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் 2023 வாழ்த்துக்கள்

Happy Pongal 2023

உழைப்பது உழவனானாலும்
உண்ணுவது நாமே
களைத்தவன் உழவனானாலும்
செழித்தவன் நாமே
தாய், தந்தை மட்டும் அல்ல
தாயகத்தில் உள்ள உழவர்
அனைவரும் நமக்கு தெய்வமே
இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Pongal 2023 wishes in tamil

காசுக்கு கரும்பு வாங்கி
அதை கால் பாகமாக உடைத்து
கடவாய் பல்லில் கடித்து
தித்திப்போடு கொண்டாடுவோம்
இந்த பொங்கல் திருநாளை
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal vazhthukkal

துணிவோடு துன்பங்களை எதிர்த்து
இனிப்போடு இன்பங்களை சேர்த்து
கனிவோடு உறவுகளை வளர்த்து
கொண்டாடுவோம் தை திருநாளை
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal 2023 wishes in Tamil | Pongal valthukkal 2023

உழவனோ கடனில் பொங்க
உலகமோ அவன் விதைத்த
நெல்மணிகளை பொங்குகிறது.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal Nal valthukkal

புதுப்பானையில் பொங்கட்டும்
தை பொங்கல்
வீட்டினிலே நிறையட்டும் சொந்தங்கள்
மனதினிலேயே தீரட்டும் சங்கடங்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal valthukkal in Tamil 2023 – Pongal 2023 wishes in Tamil
பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக வருவது போகி தான். போகி அன்று நாம் வீடுமுழுக்க சுத்தம் செய்து பழையன வற்றை எரிப்பது வழக்கம். அதே போல நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள், குணங்கள் ஆகியவற்றை எரித்துவிடவேண்டும் என்பது போகி பண்டிகையின் தாத்பரியம் ஆகும்.

தை பிறந்தாச்சு, வழியும் பிறந்தாச்சு
பொங்கட்டும் புது பானையில் பொங்கல்
இனிக்கட்டும் புது கரும்போடு வாழ்க்கை
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Thai Pongal wishes in Tamil words | பொங்கல் வாழ்த்துக்கள் 2023

அன்பும், அறிவும், ஆசையும், இன்பமும்
இந்த திருநாளில் பொங்கலோடு
சேர்ந்து பொங்கட்டும்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் | Pongal 2023 Wishes Tamil

அச்சு வெல்லம், பச்சரிசி கலந்து வச்சி
ஆதவனை துதித்துவிட்டு
சொந்தங்கள், பந்தங்கள் ஊர் கூடி
கொண்டாடுவோம் வாருங்கள் இத்திருநாளை.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் 2023

மங்கலமாய் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கட்டும்
எண்ணிய அனைத்தும் ஈடேறட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil
பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளாக வருவது பெரும் பொங்கல். பெரும் பொங்கல் நாளில் தான் பொதுவாக அனைவரும் பொங்கல் வைத்து ஆதவனை வழிபடுவது வழக்கம். புதுப்பானையில் புத்தரிசி இட்டு, மஞ்சள், கரும்பு போன்றவற்றை வைத்து உழவுக்கும் உலகுக்கும் உறுதுணையாக இருந்த சூரிய பகவானை வணங்கி, அவருக்கு பொங்கல் வைத்து வழிபடுவதே இந்த நாளின் சிறப்பாகவும்.

புதியதோர் மகிழ்ச்சி பொங்க
வீடு நிறைய செல்வம் தங்க
இனிமையும் வளமையும் சேர்ந்து
இன்பத்தில் வாழ்க்கை திளைக்க
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil 2023
பெரும் பொங்கலுக்கு அடுத்த நாள் வருவது மாட்டுப்பொங்கல். இந்த தினத்தில் உழுவக்கு தோளோடு தோள் கொடுத்த எருதுகளை போற்றும் வகையில் அவற்றை அலங்கரித்து, மஞ்சள் குங்குமம் இட்டு வழிபடுவதும், மஞ்சு விரட்டு போன்ற போட்டிகளை நடத்துவதும் வழக்கம்.

நான்காம் நாளாக வருவது காணும் பொங்கல். இந்த நன் நாளில் பலரும் தங்கள் சொந்த பந்தங்களின் இல்லங்களுக்கு சென்று அனைவரையும் கண்டு பேசி மகிழ்வது வழக்கம்.
Pongal wishes in Tamil

செந்தமிழை பெருமையோடு
உச்சரிக்கும் அனைத்து
தமிழ் உறவுகளுக்கும்
இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள்
Pongal valthu tamil quotes

மனதிற்கு பிடித்த அனைத்தும் நடந்து
மங்களங்கள் அனைத்தும் வந்து சேரட்டும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Pongal wishes in Tamil

பச்சரிசியில் பொங்கல் வைத்து
பகலவனை வணங்கிவிட்டு
பண்பாட்டை போற்றிவிட்டு
பண்போடு வாழுவோமே
பொங்கல் திருநாள் சிறப்பாக அமைய தெய்வீகம் சார்பாக உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
Engish ovewiew: Here we have Pongal wishes in Tamil . It is also called as Pongal valthukkal in Tamil.