கிரிக்கெட் : தோனியை காட்டிலும் சிறந்த வீரராக பண்ட் வலம் வருவார் – பாண்டிங்

ponting

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மாற்றம் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 3ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

rishabh

இந்திய அணியில் சார்பாக பூஜாரா மற்றும் விக்கெட் கீப்பர் பண்ட் ஆகியோர் சதமடித்தனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 159* ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்களை கலங்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆட்டத்திற்க்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பண்ட் ஆட்டம் குறித்து பேசினார் : அதில், தோனிக்கு அடுத்து பண்டுக்கு அதிக வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவர் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார். அவர் டெஸ்ட் போட்டிகளில் வெகு சில ஆட்டங்களே ஆடியுள்ளார். பின் வரிசையில் இறங்கி சதமடிப்பது கடினம். ஆனால், தற்போது இரண்டு சதங்களை பண்ட் விளாசியுள்ளார்.

pant

அவரது பேட்டிங் திறன் குறித்து எனக்கு நன்றாக தெரியும். ஏனெனில், பண்ட் விளையாடிய டெல்லி அணிக்கு நான் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளேன். எனவே, அவரது பேட்டிங் குறித்து எனக்கு எந்த ஐயமும் இல்லை . ஆனால், கீப்பிங்கில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இதனை அவர் வெற்றிகரமாக செய்தால் மிகச்சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மானாக நீண்ட காலம் நிலைத்து இருப்பார் என்று கூறினார் பாண்டிங்.

இதையும் படிக்கலாமே :

2019 உலகக்கோப்பையில் நான் ஆடுவது தேர்வுக்குழுவினரின் கைகளில் உள்ளது – வார்னர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.