2019 உலகக்கோப்பையில் நான் ஆடுவது தேர்வுக்குழுவினரின் கைகளில் உள்ளது – வார்னர்

warner

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் கடந்த ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பான சர்ச்சையில் சிக்கி 1 ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டார். இப்போது ஓர் ஆண்டு தடைகாலம் முடிந்து பங்களாதேஷ் நாட்டில் நடைபெறும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.

warner 2

இது குறித்து வார்னர் கூறியதாவது : இந்த ஒருவருட தடைக்காலம் என்னை மனிதனாக மாற்றியுள்ளது. மேலும், என்னை புரிந்து கொண்டு நான் முற்றிலும் மாறுவதற்கான வாய்ப்பையும் வழங்கியது. இப்போது நான் தெளிவாக உள்ளேன் உள்ளேன். இனிமேல் நாகரிகமான முறையில் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடியும் வரை தொடர்ந்து விளையாடுவேன்.

இப்போது தடைகாலம் முடிந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளேன். இந்த போட்டியை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நான் கிரிக்கெட் விளையாடாத இந்த ஒரு ஆண்டு என் வாழ்வில் கடினமான நாட்களாக கருதுகிறேன். இருப்பினும் என் குடும்பத்தினரோடு நான் அதிக நாட்கள் இருந்ததில்லை. இந்த ஒரு ஆண்டு நான் முழுவதும் என் குடும்பத்தினருடன் கழித்தேன். அது எனக்கு சற்று மன ஆறுதலை தந்தது.

warner 1

நான் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் ஆடினாலும், ஆஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடும் நாளை எதிர்நோக்கி உள்ளேன். மேலும் என்னை உலககோப்பைக்கு தேர்வு செய்வார்களா என்று எனக்கு தெரியவில்லை. அது அணியின் தேர்வுக்குழுவினரின் கைகளில் உள்ளது. மே மாதம் தொடங்க உள்ள உலகக்கோப்பை போட்டிக்காக நான் தயாராகி வருகிறேன் என்றும் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து விளையாட ஆசை இருப்பதாகவும் வார்னர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

சதமடித்து தனது அம்மாவிற்கு பிறந்தநாள் பரிசு அளித்த ரிஷப் பண்ட்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்