எப்படி சிவபெருமானுக்கும் முருகப்பெருமானுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் திகழ்ந்ததோ அதேபோல் பெருமாளுக்கு உகந்த மாதமாக மார்கழி மாதம் திகழ்கிறது. அதனால் தான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்று கூறி இருக்கிறார். அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் மார்கழி மாதம் சிறப்பான வழிபாடுகள் என்பது நடைபெறும். பெருமாள் ஆலயத்தில் மட்டுமல்ல அனைத்து தெய்வ ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் என்பது நடைபெறத்தான் செய்யும். இதில் குறிப்பாக திருமால் ஆலயத்தில் கூடுதல் விசேஷமாக வழிபாடுகள் என்பது நடைபெறும். இந்த ஆன்மீகம் குறித்த பகுதியில் அப்படி மார்கழி மாதத்தில் செய்யக்கூடிய வழிபாட்டில் நாம் எந்த பொருளை தானமாக தந்தால் நமக்கு பொன்னும் பொருளும் பெருகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
பொன்னும் பொருளும் பெருக வழிபாடு
செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார், அந்த மகாலட்சுமி தாயார் குடியிருக்க கூடிய நெஞ்சமாக திகழ்வது பெருமானின் நெஞ்சம். அதனால் பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்ததற்குரிய பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் உரிய மாதமாக திகழக்கூடிய இந்த மார்கழி மாதத்தில் இவர்கள் இருக்கக்கூடிய ஆலயத்தில் எந்த பொருளை தானமாக தந்தால் நமக்கு செல்வம் பெருகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு சிறப்பு மிகுந்த மாதமாக இருந்தாலும் இந்த மார்கழி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாகவே கருதப்படுகிறது. பொதுவாக ஆலயத்தில் நாம் பல பொருட்களை தானமாக தருவது உண்டு. அதிலும் குறிப்பாக இந்த மார்கழி மாதத்தில் நாம் செய்யக்கூடிய தானம் என்பது நமக்கு பல நன்மைகளைத் தரும். மேலும் பெருமாள் ஆலயத்தில் நாம் சில பொருட்களை தானமாக தரும் பொழுது அதன் பலனால் நமக்கு செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது எந்த பொருளை தானமாக தர வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
முதலில் மகாலட்சுமி தாயாருக்காக சுத்தமான மஞ்சளையும், சுத்தமான தாழம்பூங்குமத்தையும் வாங்கி தர வேண்டும். அடுத்ததாக வெள்ளை அல்லது சிவப்பு அவல் வாங்கி அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி அதில் சர்க்கரை, சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், தேங்காய் துருவல் போன்றவற்றை கலந்து அதை எடுத்துக்கொண்டு பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
பெருமாளின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து விட்டு அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இந்த அவலை தானமாக தர வேண்டும். இப்படி தானமாக தருவதன் மூலம் அந்த கோவிலில் வரக்கூடிய பக்தர்களில் ஒருவராக கிருஷ்ணர் வந்து நாம் கொடுக்கக்கூடிய அவலை வாங்கி சாப்பிடுவார் என்பது ஒரு நம்பிக்கையாக திகழ்கிறது. எப்படி கிருஷ்ண பரமாத்மாவிற்கு குசேலர் அவலை கொடுத்ததன் மூலம் அவர் வீட்டில் செல்வம் பெருகியதோ அதேபோல் இந்த மார்கழி மாதத்தில் பெருமாள் ஆலயத்தில் நாம் அவலை தானமாக தரும்பொழுது நம்முடைய வாழ்க்கையிலும் செல்வ செழிப்பு என்பது அதிகரிக்கும்.
இதையும் படிக்கலாமே:மார்கழியில் லட்சுமி நரசிம்மர் வழிபாடு
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் நாம் நினைத்ததை விட நமக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பதால் முழு நம்பிக்கையுடன் இந்த பொருளை பெருமாள் ஆலயத்தில் தானமாக தந்து நம்முடைய கர்ம வினைகள் நீங்க பெற்று செல்வ செழிப்புடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.