உங்கள் செடிகளில் இருக்கும் எப்பேர்பட்ட பூச்சி பிரச்சனையாக இருந்தாலும், ஒரே முறையில் விரட்ட, ஒரே பூச்சிவிரட்டி இதுதான்!

leaf

உங்கள் வீட்டில் எந்த செடி இருந்தாலும் சரி, அந்த செடியில் எப்படிப்பட்ட பூச்சி பிரச்சனை இருந்தாலும் சரி, அதற்கான ஒரு நிரந்தரமான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். செடிகளில் வரக்கூடிய பூச்சிகள், புழுக்கள், கம்பளிப் பூச்சிகள், வெள்ளை பூச்சிகள், மாவுப்பூச்சிகள், இதோடு மட்டுமல்லாமல் இலைகளில் வரக்கூடிய கரும்புள்ளிகள், பழுப்பு நிற புள்ளிகள், வெள்ளை நிறத்தில் மாவு போன்ற பிரச்சனைகள், இப்படி எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் என்ன தீர்வு என்பதற்கான பதிவுதான் இது.

plant

எல்லாவிதமான பூச்சியையும் விரட்டுவதற்கு நாம் பயன்படுத்தப் போகும் ஒரு பொருள் பேக்கிங் சோடா. அதாவது பேக்கிங் சோடாவில் இருப்பது sodium bicarbonate. இந்த பேக்கிங் சோடாவை தான் பூச்சி விரட்டியாக நாம் பயன்படுத்த போகின்றோம்.

நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பேக்கிங் பவுடரை பயன்படுத்தி விடக்கூடாது. பேக்கிங் பவுடரில் இருப்பது, sodium carbonate ஆகும். இது துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர். இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

baking-soda

இப்போது, ஒரு பிளாஸ்டிக் கப்பில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் வேப்ப எண்ணெய், ஒரு ஸ்பூன் கை கழுவ பயன்படுத்தும் ஏதாவது ஒரு சோப்பு லிக்விட் போட்டுக் கொள்ளலாம் அல்லது பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் பயன்படுத்திக்கொள்ளலாம்.

- Advertisement -

தண்ணீரோடு சேர்த்து இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலக்கி விடவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இதில் ஊற்றி இருக்கும் வேப்ப எண்ணெய் மேலே மிதக்க கூடாது. அதன் பின்பாக, இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி விட்டு, உங்கள் செடிகளின், இலைகளின் மேல் ஸ்பிரே செய்து விட்டாலே போதும். ஒருமுறை இதை பயன்படுத்தும் போதே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு சேர்த்து வெள்ளை பூச்சிகளை விரட்டுவதற்கு மற்றொரு சிறப்பான வழியும் உள்ளது. உங்கள் வீட்டில் பழைய சாதம் இருக்கும் அல்லவா? அதாவது முந்தைய நாள் இரவே சாதத்தில் தண்ணீரை ஊற்றி வையுங்கள். அடுத்த நாள் காலை, அது பழைய சாதம். இது நம் எல்லோருக்கும் தெரியும் தான்!

plant1

அந்தப் பழைய சாதத்தை உங்கள் கைகளால் நன்றாக கரைத்து விட்டு, ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஊற்றி, ஒரு கைப்பிடி அளவு சாதத்திற்கு, அரை லிட்டர் அளவு தண்ணீரையும் சேர்த்து, மூடி போட்டு, ஆறிலிருந்து ஏழு நாட்கள் நிழலில் வைத்து புளிக்க விட்டு விடுங்கள். அதன்பின் இந்த கரைசலை ஒரு வடிகட்டியில் மூலம் நன்றாக வடிகட்டி விட்டு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15ml புளிக்க வைத்த இந்த தண்ணீரை கலந்து, செடிகளுக்கு ஸ்ப்ரே செய்து விட்டால் செடிகள் நன்றாக வளரும். பூச்சிகளும் விரைவாக காணாமல் போய்விடும். 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் பயன் படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே
நீண்ட நாட்களாக மூட்டு வலியில் அவதிப்பட்டு வருகிறீர்களா? 7 நாட்களில் நிரந்தர தீர்வு தரும் குறிப்பு.

இது போன்ற மேலும் பல தோட்டக்கலை சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.