இந்த ஐடியா முன்னவே தெரிஞ்சிருந்தா வீட்ல பல்லி, கரப்பான் பூச்சி, குளவி, சின்ன சின்ன பூச்சு, வண்டு, இவைகளை துரத்த சடுகுடு ஆடி இருக்க வேண்டாம்.

palli1
- Advertisement -

வீட்டில் இல்லத்தரசிகளுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இது. சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை, மற்ற இடங்களில் எல்லாம் பல்லி வந்து ஓடி ஓடி தொல்லை. சில வீடுகளில் குளவி வந்து கூடு கட்டி வைத்துக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் அடித்து விரட்டுவதற்குள் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு போதும் போதும் என ஆகிவிடும். இதில் பிள்ளைகளுக்கு வேற அதை பார்த்தால் பயம், இதை பார்த்தால் பயம் என்று ஓடிக்கொண்டே இருப்பார்கள். இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட எளிமையான வீட்டு குறிப்பு இருக்கிறது. உங்களுடைய வீட்டில் இந்த குறிப்பையும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

பல்லி கரப்பாம்பூச்சி குளவி இவைகளை வரவிடாமல் தடுக்க ஹோம் மேட் ஸ்பிரே:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் 3 அல்லது 4 பூண்டு பல் – தோல் உரிக்காதது, சின்ன வெங்காயம் தோல் உரிக்காதது – 4 பல், மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன், மாத்திரை – 1, இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் இருக்கும் காய்ச்சல் மாத்திரை தலைவலி மாத்திரை எதை வேண்டும் என்றாலும் இதில் போடலாம்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு பூச்சி உருண்டை – 1, எடுத்து நன்றாக நைசாக இடித்து தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான பாத்திரத்தில் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அந்த விழுதை வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள். நசுக்கிய வைத்திருக்கும் பூச்சி உருண்டை பொடியை போடுங்கள். இதோடு 1 மூடி – கம்ஃபோர்ட் ஊற்றி நன்றாக கலந்தால் சூப்பரான லிக்விட் தயார். இந்த லிக்விடை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

ஒரு சின்ன ஸ்ப்ரே பாட்டிலில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக்கொண்டு, தயார் செய்து வைத்திருக்கும் இந்த பூச்சி விரட்டி லிக்விடை அதில் ஊற்ற வேண்டும். 1 முடி தண்ணீர் என்றால், 1 மூடி பூச்சி விரட்டி லிக்விட் எடுத்துக் கொண்டால், சரியாக இருக்கும். நிறைய தண்ணீர் ஊற்றி கலந்து விட்டால் இதனுடைய வாசம் சரியாக வேலை செய்யாது. பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த ஸ்ப்ரேவை எந்த இடத்தில் எல்லாம் பல்லி வருமோ அந்த இடத்தில் எல்லாம் அடிக்கலாம். குறிப்பாக டியூப் லைட்டுக்கு கீழே, பீரோவுக்கு கீழே, அலமாரிகளுக்கு கீழே அடித்தால் அந்த இடத்தில் எல்லாம் பல்லி தாங்காது. பிறகு ஜன்னலில் வலை அடைத்து வைத்திருந்தால் அதன் மேலே இதை ஸ்பிரே செய்யுங்கள். ஜன்னலில் போட்டு வைத்திருக்கும் ஸ்க்ரீன் மேலே கூட இதை ஸ்பிரே செய்துவிடலாம். அந்த ஸ்கிரீனில் சின்ன சின்ன பூச்சி பொட்டுகள் வந்து உட்காராது. இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிங்க் ஓட்டையில் இதை அடித்து விடுங்கள் கரப்பான் பூச்சி வராது.

அதேபோல உங்களுடைய வீட்டில் குளவி கூடு கட்டி இருந்தால் அந்த இடத்தை சுற்றி இந்த ஸ்ப்ரேவை அடித்து விடுங்கள். மீண்டும் மீண்டும் குளவி அந்த இடத்திற்கு வராமல் இருக்கும். சில இடங்களில் எல்லாம் வீட்டிற்குள்ளேயே வந்து குளவி கூடை கட்டி வைத்திருக்கும் அல்லவா. சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில். குளவி உள்ளே வந்தால் அது பாதுகாப்பு இல்லை அதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இனி டாய்லெட்டை சுத்தம் செய்ய ஹார்பிக் வேண்டாமா? ஆரஞ்சு பழம் போதுமா? அது எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வம் இருக்கா?

சில வீடுகளில் ஒட்டடை பிரச்சனை அதிகமாக இருக்கும். மூளை முடுக்குகளில் என்ன தான் அடிக்கடி ஒட்டடை அடித்தாலும், உடனடியாக ஒட்டடை சேர்ந்து, உடனடியாக எட்டுக்கால் பூச்சி வந்து உட்காரும். அந்த இடத்தில் இதை ஸ்பிரே செய்துவிடலாம். அப்படி இல்லை என்றால் ஒரு பக்கெட்டில் கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் நாம் தயார் செய்து வைத்திருக்கும் லிக்குவிடை ஊற்றி மாப்பை அதில் நன்றாக நினைத்து, பிழிந்து கொள்ளுங்கள். இந்த ஈர மாப் கொண்டு சீலிங்கில் மூளை முடுக்குகளில் அப்படியே துடைத்து விட்டால் இந்த வாசத்திற்கு அந்த மூளை முடுக்குகளில் ஒட்டடை வராமலும் சிலந்திப்பூச்சி தங்காமலும் இருக்கும். குறிப்பு பிடிச்சிருக்கு என்பவர்கள் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -