இனி டாய்லெட்டை சுத்தம் செய்ய ஹார்பிக் வேண்டாமா? ஆரஞ்சு பழம் போதுமா? அது எப்படின்னு தெரிஞ்சுக்க உங்களுக்கும் ஆர்வம் இருக்கா?

toilet
- Advertisement -

எல்லோர் மனதிற்கும் ஒரு கேள்வி எழுத்திருக்கும். டாய்லெட்டை சுத்தம் செய்ய ஹாப்பிக் தானே பயன்படுத்துவோம். ஆரஞ்சு பழ தோலை வைத்து எப்படிங்க டாய்லெட்டை சுத்தம் செய்வது. இந்த கேள்விக்கு உண்டான பதில், இந்த பதிவில் உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பாத்ரூமை சுத்தம் செய்ய இப்படி கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தும் போது சில பேருக்கு அதிகமான அலர்ஜி ஏற்படும். தொண்டை எரிச்சல், மூக்கு எரிச்சல், சுவாசப் பிரச்சினை, கண் எரிச்சல், வந்து தொல்லை கொடுக்கும். அப்படிப்பட்டவர்கள் எல்லாம் கெமிக்கல் கலக்காத இந்த பாத்ரூம் கிளீனரை பயன்படுத்துங்கள். வாங்க இதோ பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்காக.

டாய்லெட்டை சுத்தம் செய்ய புத்தம் புதிய ஐடியா:
முதலில் ஒரு பிளாஸ்டிக் ஜக் அல்லது வேஸ்டேஜ் கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டில் கேஸ் போன கூல்டிரிங்ஸ் இருந்தால் அதை 1/4 கப் ஊற்றி விட வேண்டும். இந்த கூல்ட்ரிங்கோடு பேஸ்ட் 1 ஸ்பூன், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 2 ஸ்பூன் போட்டு நன்றாக கலக்க வேண்டும். பேஸ்ட் கரைவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். அதனால் பார்த்து பக்குவமாக அந்த பேஸ்டை நன்றாக கரைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் கூல்ட்ரிங்ஸ் இல்லை என்றால், அதற்கு பதிலாக வினிகர், ஆப்ப சோடா கலந்து அந்த கலவையை பயன்படுத்தலாம். கூல்டிரிங்ஸ், பேஸ்ட், விம் லிக்விட் இந்த மூன்று பொருட்களும் சேர்ந்து ஒரு கலவை நமக்கு கிடைத்திருக்கும் அல்லவா. இதை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இல்லை என்றால் வாட்டர் கேனில் ஊற்றி வாட்டர் கேனுக்கு மேலே சின்ன சின்ன ஓட்டைகளை போட்டுக் கொள்ளவும்.

இந்த லிக்விடை டாய்லெட்டில் நன்றாக ஸ்பிரே செய்து விடுங்கள். உங்களுடைய வீட்டில் வாஷ்பேஷன் இருந்தாலும் அதன் மேலே ஸ்பிரே செய்து விட்டு, ஒரு பிரஷ்சை கொண்டு எல்லா இடங்களிலும் படும்படி நன்றாக தேய்த்து விட்டு, 15 நிமிடங்கள் ஊறவிட்டு பின்பு அதே பிரஷை கொண்டு தேய்த்து கழுவினால் பாத்ரூம் முழுவதும் பளிச்சு பளிச்சென மாறிவிடும்.

- Advertisement -

அடுத்தபடியாக வெயில் காலம் வந்துவிட்டது. எல்லோர் வீட்டிலும் ஆரஞ்சு பழம் வாங்குவோம். அதிலிருந்து தோலை உரித்து குப்பையில் தான் போடுவோம். இனிமே குப்பையில் போடாதீங்க. ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை எடுத்து இந்த ஆரஞ்சு பழ தோல்களை குட்டி குட்டியாக வெட்டி அந்த தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் லேசாக ஆரஞ்சு நிறத்தில் மாறும்.

இதன் வாசம் அத்தனை சூப்பராக இருக்கும். இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி ஆற வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சமாக 1 ஸ்பூன் டூத் பேஸ்ட்டை போட்டு, நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் நமக்கு தேவையான வாசம் நிறைந்த லிக்விட் தயார்.

- Advertisement -

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலிலோ அல்லது வாட்டர் கேன்னிலோ ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறை கழிவறையை பயன்படுத்திய பின்பும் இந்த ஸ்ப்ரேவை டாய்லெட்டில் நன்றாக ஸ்பிரே செய்துவிட்டு வரவேண்டும். இப்படி செய்தால் கழிவறை மீண்டும் மீண்டும் கறை பிடிக்காமல் நல்ல வாசமாக இருக்கும். எப்போதுமே பாத்ரூம் பிரெஷா ஃபீல் பண்ணுவீங்க.

இதையும் படிக்கலாமே: கிச்சன் டவல் கிளீன் பண்றது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம நிறைய டவல் வேஸ்ட் பண்ணிட்டோமே!

உங்களுடைய வீட்டில் வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தால், இந்த ஆரஞ்சு லிக்விடை வேறு முறையில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். சின்ன வாட்டர் கேனுக்கு உள்ளே நாம் தயார் செய்த இந்த ஆரஞ்சு லிக்விடை ஊற்றி, மூடி போட்டுக் கொள்ளுங்கள். மூடியில் சின்ன சின்ன ஹோல் போட்டு, இந்த வாட்டர் கேனை அப்படியே கவிழ்த்தபடி டாய்லெட் ஃபிளஷ்க்கு உள்ளே வைத்து விடுங்கள். ஒவ்வொரு முறை நீங்கள் டாய்லெட்டை பயன்படுத்திவிட்டு ஃபிளஷ் செய்யும்போது வாசமான தண்ணீர் வெளியே வரும். டாய்லெட் நறுமணத்தோடு இருக்கும். உங்களுக்கு இந்த எளிமையான வீட்டுக் குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள்.

- Advertisement -