உங்கள் டாய்லெட்டில் இனி எப்போதுமே துர்நாற்றம் வீசாது. ஒவ்வொரு முறை டாய்லட்டை பயன்படுத்திய பிறகும், பிரஷ் போட்டு தேய்த்து கழுவியது போல பளிச் பளிச்சென இருக்க, இது ஒரு சூப்பர் ஐடியா.

toilet1
- Advertisement -

தினம் தினம் நம்முடைய டாய்லட்டை தேய்த்து கழுவி சுத்தம் செய்தாலும், ஒவ்வொரு முறை வீட்டில் இருப்பவர்கள் அந்த டாய்லெட்டை பயன்படுத்தி விட்டு வரும்போதும், துர்நாற்றம் வீசத்தான் செய்யும். இது இயற்கை. ஒன்னும் செய்ய முடியாது. அதிலும் குறிப்பாக வீட்டுக்குள்ளேயே டாய்லெட் இருந்தால் அது ரொம்ப ரொம்ப பிரச்சனை. அந்த கிருமிகளின் மூலம், துர்நாற்றத்தின் மூலம் ஆரோக்கியத்திற்கு பிரச்சினை வரும் அளவுக்கு பேராபத்து இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க கிருமி நாசினி லிக்விடை டாய்லெட்டில் ஊற்றி அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்கணும்.

இது தவிர எளிமையான முறையில் நம்முடைய டாய்லெட்டை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்பும், சுத்தம் செய்ய ஒரு ஈஸியான மெத்தட் இருக்குது. அதை பற்றி தான் இன்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தேவை என்பவர்கள் குறிப்பை படித்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -

உங்க வீட்டு டாய்லெட் வாசமாக இருக்க எளிய வீட்டு குறிப்பு:
முதலில் ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா எடுத்துக்கோங்க. அதில் ஆப்ப சோடா 2 டேபிள் ஸ்பூன், தூள் உப்பு 2 டேபிள் ஸ்பூன், வினிகர் 2 டேபிள் ஸ்பூன், பல் தேய்க்கும் பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், ஊற்றி இந்த பொருட்களை ஒரு ஸ்பூனை வைத்து கலந்தால் சப்பாத்தி மாவு போல நமக்கு கிடைக்கும். அதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் அடுக்கி அப்படியே ஃப்ரீசரில் 1 மணி நேரம் வைத்து எடுங்கள். இது இறுகி கட்டியாக மாத்திரை போல நமக்கு கிடைக்கும்.

வினிகர் உங்கள் வீட்டில் இல்லை என்றால், அதற்கு பதில் எலுமிச்சை பழச்சாறு கூட சேர்த்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். இதில் வாசத்திற்கு ஏதாவது உங்கள் வீட்டில் எசன்ஸியல் ஆயில் இருந்தால் அதையும் 2 சொட்டு சேர்த்துக் கொள்ளலாம். ரோஸ் வாட்டர் சேர்த்தாலும் நல்ல நறுமணத்தை கொடுக்கும். ஆனால் கலவையை கலக்கும் போது ரொம்பவும் நீர்த்து விடக்கூடாது. எல்லா பொருட்களையும் போட்டு பிசையும் போது சப்பாத்தி மாவு போல பதத்தில் இருக்க வேண்டும். அதையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க.

- Advertisement -

சரி, இப்ப செட் ஆன இந்த மாத்திரைகளை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரீசரில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். தேவைப்படும்போது ஒவ்வொரு மாத்திரையாக எடுத்து பயன்படுத்தலாம். எப்படி தெரியுமா. நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த ஒரு மாத்திரையை ஃபாயில் பேப்பரில் வையுங்கள். ஃபாயில் பேப்பர் என்றால் உங்களுக்கு தெரியும் அல்லவா. சப்பாத்தி பூரி இவைகளை எல்லாம் சூடு ஆறாமல் இருக்க சுருட்டி ஹோட்டலில் பேக் செய்து தருவார்கள். அதுதான் ஃபாயில் பேப்பர். அதில் ஒரு உருண்டையை வைத்து மடித்து, அந்த ஃபாயில் பேப்பரில் சின்ன சின்ன ஓட்டைகளை போட்டு, அப்படியே ஃபிளாஷ் டேங்கில் போட்டு விட வேண்டும். அந்தப் பிளஸ் டேங்க் தண்ணீரில் இந்த மாத்திரை கொஞ்சம் கொஞ்சமாக கரையும்.

ஒவ்வொரு முறை டாய்லெட்டை பயன்படுத்தி விட்டு நீங்கள் பிளஸ் செய்யும் போதும், உங்கள் டாய்லெட் துர்நாற்றம் இல்லாமல் கிருமிகளோடு சேர்ந்து நன்றாக சுத்தமாகிவிடும். சரி, எங்க வீட்ல ஃபிளஸ் டாங்க் இல்ல. பக்கெட்டில் தான் தண்ணி ஊத்தணும். என்ன செய்வது. பாத்ரூமில் தனியாக ஒரு பக்கெட் வச்சிருங்க. அது நிரம்ப தண்ணீரில் இந்த மாத்திரையை அதில் போட்டு விடுங்கள். ஃபாயில் பேப்பரில் தயார் செய்த மாத்திரை தான்.

இதையும் படிக்கலாமே: கண்ணுக்குத் தெரிந்த அழுக்கை மட்டும் தான் உங்க வீட்டு டாய்லட்ல சுத்தம் செய்வீங்களா? கண்ணுக்கே தெரியாமல் இந்த இடத்தில் ஒளிந்திருக்கும் கிருமிகளை எப்படி சுத்தம் செய்வது.

டாய்லெட்டை பயன்படுத்திவிட்டு சாதாரணமாக தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்துவிட்டு, இறுதியாக ஃபாயில் பேப்பரில் மாத்திரையை சுருட்டி போட்டு இருக்கிறோம் அல்லவா, அந்த தண்ணீரில் இருந்து இரண்டு ஜக்கு எடுத்து டாய்லெட்டில் ஊற்றி விட்டு வர வேண்டும். அவ்வளவுதான். (ஒரே நாளில் இந்த மாத்திரை தண்ணீரில் கரைந்து விடாது. கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து சில நாட்களுக்கு நீடித்து வரும்.) உங்கள் டாய்லெட் துர்நாற்றம் வீசாது. கிருமிகளும் நாசம் ஆகும். மஞ்சள் கறையும் படியாது. உங்களுக்கு இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு பிடித்திருந்தால் முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -