பூஜை பொருட்களை எண்ணெய் பிசுக்கு இல்லாம சுலபமாக சுத்தம் செய்தால் மட்டும் போதுமா? அது மறுபடியும் எண்ணெய் பிசுக்கு படியாம ஜொலிக்க என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்க வேண்டாமா? வாங்க அது எப்படின்னு பாக்கலாம்.

poojavessels
- Advertisement -

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்வது மனதிற்கு ஒரு அமைதியை தரும். அது மட்டும் இன்றி இந்த பூஜை பொருட்களை சுத்தமாக்க தேய்த்து பளிச்சென்று வைத்து அதில் விளக்கேற்றி அதை பார்க்கும் போதே வீட்டிற்கு ஒரு தெய்வீகத் தன்மை வந்ததாக தோன்றும். இப்படி இருந்தால் தான் வீடும் லட்சுமி கரமாக இருக்கும். இதை எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் விளக்கு சுத்தமாகவும், எண்ணெய் பிசுக்கு இல்லாமலும், தங்கம் போல் ஜொலிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் கடவுளை வணங்குவதற்கான மனநிலையே ஏற்படும். சரி இப்போது இந்த விளக்கை இப்படி ஜொலிக்க வைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது இந்த வீட்டு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விளக்கை சுத்தப்படுத்த ஒரு சில வழிமுறைகளை நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் இந்த முறையில் விளக்குகளின் எண்ணெய் பிசுக்கு கறைகளை சுத்தம் செய்வதோடு, மறுபடியும் சீக்கிரம் எண்ணெய் கறை படியாமல் இருக்க, என்ன செய்வது என்பதையும் சேர்த்தே தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் பூஜை பாத்திரங்களை அதில் இருக்கும் திரியெல்லாம் எடுத்து விட்டு, டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் வைத்து நன்றாக துடைத்துக் கொள்ளுங்கள். இதை துடைக்க துணியை பயன்படுத்தினால் அந்த துணி திரும்பவும் பயன்படுத்த முடியாது. துடைத்து வைத்த விளக்குகளின் மீது ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி அதை தேய்த்து விடுங்கள்.

பூஜை பொருட்களின் எல்லா பக்கமும் பழத்தின் சாறு படும்படி நன்றாக தேய்த்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு கொஞ்சம் கோல மாவு, விபூதி, விம் லிக்விட் மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.( இதை உங்கள் பூஜை பாத்திரங்களின் அளவுக்கு தகுந்தாற் போல் இந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்). இவை எல்லாம் சேர்த்து நல்ல பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேஸ்ட்டை எடுத்து லேசாக விளக்கின் மீது தேய்த்து விடுங்கள். நீங்கள் லேசாக தேய்க்க ஆரம்பிக்கும் போதே விளக்கின் நிறம் மாற தொடங்கி விடும். ஆனால் அதில் இருக்கும் எண்ணெய் பசை முழுவதுமாக நீங்க தேங்காய் நாரை கொண்டு தேய்த்து கொள்ளுங்கள். விளக்கில் உள்ள எண்ணெய் பசை எல்லாம் நீங்கி விளக்கு பளிச்சென்று மாறி விடும்.

இப்போது இந்த தேய்த்து விளக்கு ஒரு மாதம் ஆனால் கூட எண்ணெய் கறை சீக்கிரம் படியாமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

நீங்கள் தேய்த்த விளக்கை காட்டன் துணி வைத்து துடைத்து வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சம் விபூதியை எடுத்து விளக்கின் எல்லா பக்கமும் தேய்த்து விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து மறுபடியும் டிஷ்யூ பேப்பர் வைத்து விளக்கை துடைத்து விடுங்கள். விளக்கு பாலிஷ் போட்டது போல் பளப்பளப்பாக இருக்கும். இந்த விபூதி மேலே இருப்பதால் எண்ணெய் கறை அவ்வளவு சீக்கிரத்தில் விளக்கின் மீது படியாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பாத்ரூம் & கிச்சன் கிளீன் பண்ண இனி கொஞ்சமும் கஷ்டப்படவே வேண்டாமே டெட்டால் கூட இதை சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க!

இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் விளக்கை எப்படி சுலபமாக சுத்தமாக தேய்த்து, எண்ணெய் கறை படியாமல் பார்த்துக் கொள்வது என்ற தகவல் தெரிந்திருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இது போல செய்து பாருங்கள்.

- Advertisement -