இந்த பொருளை வைச்சு கூட பூஜை பாத்திரம் தேய்க்கலாம்ன்னு நீங்க அசந்து போயிடுவீங்க. இனிமே பூஜை பாத்திரங்களை கை வலிக்க தேய்க்கவே வேண்டாம். நிமிஷத்துல பூஜை பாத்திரங்கள் பளிச்சுன்னு மாறிடும்.

- Advertisement -

பொதுவாக அனைவர் வீட்டிலும் காலை அல்லது மாலை சில வீடுகளில் இரண்டு வேளையும் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது நம்முடைய பாரம்பரியமான பழக்கம். அப்படி செய்யும் இந்த வழிபாட்டில் முக்கிய வேலையே அதற்கான பூஜை பொருட்களை சுத்தம் செய்வது தான். பூஜை பொருட்கள் எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு நாம் பூஜை செய்யும் போது அதற்கான மனநிறைவையும் பெறுவோம். இப்போது இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பூஜை பாத்திரங்களை எப்படி சுலபமாக சுத்தம் செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய இது வரையில் நாம் பல வழிமுறைகளை பார்த்திருப்போம். அதில் இப்பொழுது இந்த பதிவில் பார்க்க உள்ள குறிப்பு மிகவும் வித்தியாசமான அதே நேரத்தில் மிக மிக எளிமையான முறை தான். வாங்க அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பூஜை பாத்திரங்களை எளிமையாக சுத்தம் செய்யும் முறை:
பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்பாக முதலில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது காட்டன் துணி வைத்து ஒரு முறை துடைத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் எந்த முறையில் தேய்த்தாலும் அதற்கு முன் இப்படி சுத்தம் செய்வதால் அதில் உள்ள எண்ணெய் பிசுக்கு மேலே படிந்திருக்கும் அழுக்கு அனைத்தும் வந்து விடும். இதனால் அடுத்து நீங்கள் விளக்கு தேய்க்க மிகவும் சுலபமாக இருக்கும்.

இப்போது பூஜை பொருட்களை தேய்க்க பயன்படுத்த போகும் அந்த முக்கியமான பொருள் சோயா சாஸ் தான். இப்போதெல்லாம் பெரும்பாலும் அனைவர் வீட்டிலும் இந்த சோயா சாஸ், ஸ்டொமட்டோ சாஸ் போன்றவை எல்லாம் இருக்கத் தான் செய்கிறது. சில நேரங்களில் நாம் வாங்கி வைத்து பயன்படாமல் காலாவதி ஆகக் கூடிய வகையில் கூட இருக்கும். அப்படியான சோயா சாஸை கூட விளக்கை சுத்தப்படுத்த எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சின்ன பவுலில் கொஞ்சம் சோயா சாஸ் ஊற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் பாத்திரம் தேய்க்கும் லிக்விட் கொஞ்சம் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்த பிறகு தேங்காய் நாரை தொட்டு விளக்குகளை தேய்த்து பாருங்கள். ஒரு முறை தேய்த்தாலே போதும் விளக்குகள் எண்ணெய் பிசுக்கு எல்லாம் நீங்கி பளிச்சென்று மின்னத் தொடங்கி விடும்.

இதையும் படிக்காலமே: டாய்லெட்டை சுத்தம் செய்ய புத்தம் புதிய ஐடியா

இதை சொல்லும் போது சோயா சாஸில் கூட இதையெல்லாம் செய்வார்களா? என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஒரு முறை இப்படி தேய்த்துப் பாருங்கள். விளக்குகளை நீங்கள் அதிகம் அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டிய அவசியம் கூட இருக்காது லேசாக தேய்த்தாலே விளக்குகள் எல்லாம் தங்கம் போல ஜொலிக்கும். இந்தப் பதிவில் உள்ள குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் நிச்சயம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -