கை வலிக்க அழுத்தி அழுத்தி பூஜை பாத்திரங்களை கஷ்டப்பட்டு தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. இந்த டிப்ஸ் உங்களுக்கு தெரிந்தால்.

pooja-pathiram
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பூஜை பாத்திரத்தை பளபளப்பாக தேய்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். சில பேர் வாரம் ஒருமுறை பூஜை பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்வார்கள். சில பேர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பூஜை பாத்திரங்களை தேய்ப்பார்கள். சில பேர் மாதம் ஒரு முறை தான் பூஜை பாத்திரங்களை தேய்த்து சுத்தம் செய்வார்கள். இப்படி உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை நீங்கள் எப்படி சுத்தம் செய்தாலும் சரி, அதில் எவ்வளவு அழுக்குப் படிந்து, உப்புக் காற்று பட்டு, கருப்பு நிறமாக மாறி இருந்தாலும் சரி, அதை சுத்தம் செய்ய மிக மிக சுலபமான ஒரு வழியைத்தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

கருப்பாக இருக்கும் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்ய நமக்கு தேவையானது வெறும் இரண்டே பொருட்கள் தான். பெரும்பாலும் நம் எல்லோர் வீடுகளிலும் இருக்கும் எலுமிச்சம்பழம். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் லிக்விட் அல்லது சோப். உங்கள் வீட்டில் எவ்வளவு பூஜை பாத்திரங்கள் இருக்கின்றதோ அந்த அளவிற்கு தகுந்த எலுமிச்சம் பழங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 6 லிருந்து 8 பூஜை பாத்திரங்கள் இருக்கும்பட்சத்தில் பழுத்த பெரிய 2 எலுமிச்சம் பழங்கள் போதும்.

- Advertisement -

ஒரு அகலமான பெரிய பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து அதை கொதிக்க வைக்கவேண்டும். அடுப்பை அணைத்து விட்டு, சுடுதண்ணீர் பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி விடுங்கள். சுடுகின்ற இந்த தண்ணீரில் 2 எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள். எலுமிச்சம் பழத் தோலையும் சிறிய துண்டுகளாக வெட்டி அதில் போட்டு விடுங்கள். இப்போது இந்த தண்ணீரில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜை பாத்திரங்களை மூழ்கும்படி வைக்கவேண்டும்.

pooja-item-cleaning

பித்தளை விளக்கு, பித்தளைத் தட்டு, செம்பினால் இருக்கக்கூடிய பூஜை பாத்திரங்கள் அனைத்தையும் இந்த முறையில் சுத்தம் செய்துகொள்ளலாம். ஆனால் பூஜை பாத்திரங்கள் அனைத்தும் இந்த தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும். அந்த அளவிற்கு பாத்திரத்தையும் தண்ணீரையும் உங்களுடைய வசதிக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளுங்கள். உப்புத் தண்ணீரை இதற்கு பயன்படுத்தக்கூடாது.

- Advertisement -

சுடுதண்ணீர் ஆறும் வரை பூஜை பாத்திரங்கள் எலுமிச்சம்பழம் கலந்து தண்ணீரிலேயே ஊற வேண்டும். 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஊறிய இந்த பூஜை பாத்திரங்களை எடுத்து உங்களுடைய கையில் லேசாக தேய்த்து கொடுத்தாலே அதில் ஒட்டியிருக்கும் கருப்பு கரைகள் அப்படியே வரத்தொடங்கும்.

pooja-vessels1

முதலில் இந்த எலுமிச்சை பழம் கலந்த தண்ணீரிலேயே, பூஜை பாத்திரங்களை வைத்து வெறும் தேங்காய் நாரை வைத்து சுத்தமாக மேலே இருக்கக்கூடிய கறைகளை தேய்த்து கழுவி விடுங்கள். இரண்டாவதாக பாத்திரம் தேய்க்கும் லிக்விடை தொட்டு லேசாக பூஜை பாத்திரங்களை தேய்த்தாலே பூஜை பாத்திரங்கள் அப்படியே பளபளக்க தொடங்கிவிடும். விளக்குகளின் இடுக்குகளில் கருப்பு நிறத்தில் பாசிகள் ஒட்டியிருந்தால் அதை பல் தேய்க்கும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்துவிடலாம்.

pooja-vessels2

புதியதாக வாங்கிய பல் தேய்க்கும் பிரஷ்ஷில் கொஞ்சமாக பாத்திரம் தேய்க்கும் லிக்விடை தொட்டு இடுக்குகளில் தேத்துக் கொடுங்கள். மீண்டும் இந்த பாத்திரங்களை எல்லாம் நல்ல தண்ணீரை ஊற்றி கழுவி ஒரு காட்டன் துணியை கொண்டு உடனடியாக துடைத்து விடுங்கள். பார்ப்பதற்கு புது பூஜை பாத்திரங்கள் போல உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக மின்னும். கை வலிக்க அழுத்து அழுத்தி பூஜை பாத்திரங்களை தேய்க்க வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. உங்க வீட்லயும் இந்த டிப்ஸ் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -